How to Download Indian Bank Account Statement Online
உங்களின் Indian Bank Account Statement யை Online மூலமாக Download செய்ய விரும்புகிறீர்களா? உங்களின் பதில் ஆம் என்றால், அதற்கான வழிகாட்டியாக இந்த கட்டுரை உதவும். நீங்கள் இந்தியன் வங்கியின் கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்வதற்கான முழுத்தகவல்களையும் விரிவாக காணலாம்.
Table of Contents
Bank Account Statement என்றால் என்ன?
வங்கி அறிக்கை (Account Statement) என்பது, ஒரு வங்கி வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட காலத்தில் நிகழும் பண பரிவர்தனைகளின் அதிகாரபூர்வ சுருக்கமாகும். இந்த வங்கி அறிக்கையில் கணக்கு வைத்திருப்பவரின் Bank Account Number, IFSC Code, பெயர், பணப்பரிமாற்ற விவரங்கள் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த Statement யை ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உங்களின் பல்வேறு தேவைகளுக்கு வங்கிக்கணக்கின் கணக்கு அறிக்கை தேவைப்படலாம். இதை பெறுவதற்கு நீங்கள் வங்கிக்கிளைக்கு போகவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே எப்போது வேண்டுமானாலும் அறிக்கையை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.
நீங்கள் உங்களின் Indian Bank Account இன் Statement யை இரண்டு வழிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும். முதலாவதாக Indian Bank Mobile Banking மற்றும் இரண்டாவதாக Internet Banking ஆகும்.
இப்பொழுது உங்களின் கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்வதற்கான செயல்முறைகளை காணலாம்.
How to Download Indian Bank Account Statement in Mobile Banking
Step 1: முதலில் நீங்கள் Indoasis என்ற Mobile Banking செயலியை Login செய்யவும்.
Step 2: Login செய்த பிறகு Accounts என்ற Option யை தேர்வு செய்யவும்.
Step 3: இப்பொழுது உங்களின் சேமிப்பு கணக்கு எண்ணின் மீது கிளிக் செய்க.
Step 4: இதில் மூன்றாவதாக உள்ள Account Statement என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: உங்களுக்கு எந்த தேதியில் இருந்து கணக்கு அறிக்கை வேண்டும் என்பதை தேர்வு செய்க. Start Date என்ற இடத்தில் தொடக்க தேதியையும், End Date என்ற இடத்தில் முடிவு தேதியையும் தேர்வு செய்ய வேண்டும். பிறகு Go என்பதை அழுத்தவும்.
Step 6: இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த காலத்திற்குள்ளாக நடந்த பரிவர்த்தனைகளின் விவரங்கள் தெரிவதை காண்பீர்கள். அதில் Download என்பதை அழுத்த வேண்டும்.
Step 7: கணக்கு அறிக்கை பதிவிறக்கம் ஆனவுடன் அதை கிளிக் செய்து Open செய்யவும். தற்போது உங்களின் கணக்கு அறிக்கை ஒரு PDF வடிவத்தில் திறக்கப்படும். இதை ஒரு ஜெராஸ் கடைக்கு சென்று Print எடுத்துக்கொள்ளலாம்.
How to Download Account Statement in Internet Banking
Step 1: உங்களின் Indian Bank Internet Banking யை Username மற்றும் Password யை Enter செய்து Login செய்யவும்.
Step 2: Statement of Accounts என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 3: எத்தனை நாட்களுக்கான கணக்கு அறிக்கை வேண்டும் என்பதை தேர்வு செய்க. Format Type என்ற இடத்தில் நீங்கள் அறிக்கையை பதிவிறக்கம் செய்ய விரும்பும் வடிவத்தை தேர்வு செய்யவும். நான் இங்கு PDF வடிவத்தை தேர்வு செய்துள்ளேன்.
Step 4: பிறகு கடைசியாக உள்ள Download என்பதை அழுத்துக. இப்பொழுது உங்களின் Indian Bank Account statement Download ஆகும்.
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் நீங்கள் Indian Bank Statement யை பதிவிறக்கம் செய்யலாம். அல்லது இரண்டு வழிகளின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். அவ்வப்போது பதிவிறக்கம் செய்து உங்களின் Transaction களை பரிசோதிக்கலாம்.
முடிவுரை
ஒரு வங்கிக்கணக்கின் அறிக்கையானது பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவும் முக்கிய ஆவணமாகும். அதே நேரத்தில் அதை பெறுவதற்கு வங்கிக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. இந்த பதிவின் மூலம் இந்தியன் வங்கிக்கணக்கின் அறிக்கையை எவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பதிவிடவும்.
Frequently Asked Questions (FAQ)
வங்கிக்கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய பணம் செலுத்த வேண்டுமா?
இல்லை. வங்கிக்கணக்கு அறிக்கையை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
வங்கிக்கணக்கு அறிக்கையை எத்தனை முறை பதிவிறக்கம் செய்ய முடியும்?
நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்தியன் வங்கிக்கணக்கு அறிக்கையை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
மொபைல் பேங்கிங் அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.