Indian Bank

What is CIF Number & How to Find CIF Number in Indian Bank

இந்தியாவில் பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் Indian Bank வங்கியும் ஒன்றாகும். இந்த வங்கியில் பல மக்கள் நீண்ட காலமாக கணக்கை வைத்துள்ளனர். நீங்களும் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Indian Bank இல் CIF Number என்றால் என்ன மற்றும் உங்களின் வங்கிக் கணக்கின் CIF எண்ணை கண்டறிவதற்கான வழிகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

What is CIF Number in India Bank 

முதலில் CIF எண் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

CIF Number என்பது ஒரு வங்கியால் வாடிக்கையாளருக்கு வழங்ககப்படும் Customer Information File Number ஆகும். இதை தமிழில் வாடிக்கையாளர் தகவல் கோப்பு (சிஐஎஃப்) என்று கூறலாம்.

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இந்த CIF Number இருக்கும். இந்தியன் வங்கியில் பொதுவாக சிஐஎஃப் எண் 9 அல்லது 10 இலக்கங்களை கொண்டிருக்கும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஏனெனில் SBI வங்கியில் 11 இலக்கங்களை கொண்டிருக்கும். 

Read  How to Generate & Change Indian Bank ATM PIN Through Online

ஒரு வாடிக்கையாளுக்கு வழங்கப்படும் எண்ணானது மற்றொரு வாடிக்கையாளருக்கு வழங்கப்படாது. எனவே இது ஒரு தனித்துவமான எண்ணாகும்.

இந்த சிஐஎஃப் எண்ணானது வாடிக்கையாளரின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும். நீங்கள் ஒரு வங்கியில் எத்தனை கணக்குகள் திறந்தாலும் அவை அனைத்தும் ஒரே CIF எண்ணில் இணைக்கப்படும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் Savings Account, RD, FD போன்ற எத்தனை கணக்குகளை கொண்டிருந்தாலும் அவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும். 

5 Ways to Find CIF Number in Indian Bank

Indian Bank இல் பொதுவாக 5 வழிகளில் CIF Number யை கண்டுபிடிக்கலாம்.

1. Find CIF Number Throught Indian Bank Internet Banking

பின்வரும் படிகளை பின்பற்றி இணைய வங்கிச்சேவை மூலமாக கண்டுபிடிக்கலாம்.

Step 1: இந்தியன் வங்கியின் இணைய வங்கிச்சேவை இணையதளமான https://www.indianbank.net.in/jsp/startIBPreview.jsp என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.

Step 2: அதில் Login for Net Banking என்பதை கிளிக் செய்யவும்.

Indian Bank Net Banking Login

Step 3: உங்களின் User ID யை Type செய்து Login என்பதை அழுத்தவும்.

INDIAN BANK

Step 4: அடுத்து உங்களின் Password யை உள்ளிட்டு Login செய்யவும்.

INDIAN BANK (1)

Step 5: உங்களின் பெயருக்கு மேலே ஒரு நம்பர் இருக்கும். அது தான் உங்களின் CIF Number ஆகும்.

Read  How to Change / Update Mobile Number in Indian Bank Account

CIF Number in Internet Banking

2. Find CIF Number Through Online

Step 1: https://www.indianbank.net.in/jsp/startIBPreview.jsp என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் Know Your CIF என்பதை கிளிக் செய்க.

Know Your CIF Online

Step 2: உங்களின் Indian Bank Account Number மற்றும் வங்கிக்கணக்கில் பதிவு செய்த Mobile Number போன்றவற்றை உள்ளிட்டு Send OTP என்பதை அழுத்தவும்.

Know Your CIF

Step 3: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு Verify OTP என்பதை அழுத்தவும்.

OTP Number Indian Bank

Step 4: இந்த பக்கத்தில் உங்களின் Customer Information File Number மற்றும் உங்களின் பெயர் தோன்றுவதை காண்பீர்கள்.

Customer Identification Number - CIF

3. Find CIF Number by Mobile Banking 

Step 1: Indian Bank இன் Mobile Banking செயலியான Indosis App யை Open செய்யவும்.

Step 2: Accounts என்பதை கிளிக் செய்யவும்.

Indoasis Mobile Banking

Step 3: Savings Account என்பதை அழுத்துக.

Indian Bank Savings Account

Step 4: அதற்க்கு கீழே உள்ள வங்கிக்கணக்கு எண்ணை கிளிக் செய்க.

Indian Bank Account Number

Step 5: இப்பொழுது வரும் தகவல்களில் உங்களின் Indian Bank CIF Number தெரியும்.

CIF Number in Mobile Banking

4. Find CIF Number by Indian Bank Passbook

நீங்கள் இந்தியன் வங்கியில் கணக்கை தொடங்கியபோது ATM Card, Passbook போன்றவற்றை பெற்றிருப்பீர்கள். Passbook இன் முதல் பக்கத்தில் உங்களின் வங்கிக்கணக்கு தகவல்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

Read  How to Reset Indian Bank Net Banking Login Password in Online

அதில் 9 அல்லது 10 இலக்க CIF எண்ணும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமும் உங்களின் Customer Information File Number யை அறியலாம்.

Indian Bank Passbook - CIF Number

ஒருவேளை நீங்கள் Cheque Book கொண்டிருந்தால் ஒவ்வொரு Cheque Leaf இன் மேல் புறத்தில் CIF அச்சடிக்கப்பட்டிருக்கும்.

5. Find CIF Number by Visiting Branch 

நீங்கள் நேரடியாக உங்களின் வங்கிக்கிளைக்கு சென்றும் CIF எண்ணை பெறலாம். நீங்கள் வங்கி அதிகாரிகளிடம் CIF எண்ணை வழங்கும்படி கோரலாம். அதற்காக உங்களின் வங்கிக்கணக்கு எண், பெயர், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை சரிபார்ப்பிற்காக வழங்க வேண்டும்.

அனைத்தையும் வழங்கிய பிறகு உங்களின் எண்ணை பெறுவீர்கள்.

முடிவுரை 

உங்களின் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர் தகவல் கோப்பு எண்ணை கண்டுபிடிப்பது சிரமமான காரியம் அல்ல. மேற்கண்ட 5 செயல்முறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். உங்களிடம் பாஸ்புக் இல்லையென்றாலும் ஆன்லைன் மூலம் CIF எண்ணை தெரிந்துகொள்ள முடியும் என்பதை மேற்கண்ட வழிமுறைகளில் இருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள்.

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பதிவிடவும்.

 

Frequently Asked Questions (FAQ)

ஒரு வங்கி வாடிக்கையாளர் இந்தியன் வங்கியில் ஒன்றுக்கும் மேற்பட்ட CIF Number களை வைத்திருக்க முடியுமா?

இல்லை. இந்தியன் வங்கியில் ஒரு வாடிக்கையாளர் ஒரு CIF எண்ணை மட்டுமே வைத்திருக்க முடியும்.

என்னுடைய CIF எண்ணை எவ்வாறு தெரிந்துகொள்வது?

இந்த எண் உங்களின் வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

இந்த எண்ணால் என்ன பயன்?

நீங்கள் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்புத்தொகை கணக்கு, தொடர் வைப்புத்தொகை கணக்கு போன்ற அனைத்தும் இந்த ஒரே CIF என்னுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் எத்தனை கணக்குகளை வைத்துள்ளார் என்பதை அறிய முடியும்.

CIF நம்பரின் மூலம் வங்கிக்கணக்கிற்கு பணத்தை போட முடியுமா?

முடியாது.

CIF எண்ணை தமிழில் எவ்வாறு அழைப்பது?

வாடிக்கையாளர் தகவல் கோப்பு எண் என்று அழைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole