How to Generate / Reset Indian Bank ATM PIN Number
Indian Bank-ல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், புதிய ATM Card-க்கு PIN Number-யை உருவாக்க வங்கிக்கு செல்ல தேவை இல்லை. ஏதாவது ஒரு இந்தியன் வங்கி ATM Center-க்கு சென்று எளிதாக PIN Number-யை Set செய்துகொள்ளலாம். இதற்கான செயல்முறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதற்க்கு முன்பு வரை ஒரு புதிய Debit Card-யை பெறும்போது, அதற்கான PIN Number-யை மூடப்பட்ட கவரில் வழங்குவார்கள். அவ்வாறு வழங்கும்போது அது மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது.
எனவே ATM Card PIN Number-யை உருவாக்குவதற்கு புதிய முறையை கொண்டு வந்தனர்.
புதிய முறைப்படி, ஒரு ATM Center-க்கு சென்று PIN Number-யை நீங்களே Set செய்துகொள்ளலாம். இதற்கான வசதியை வங்கிகள் வழங்குகிறது. இம்முறையில் வங்கிக்கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர் மட்டுமே பின் நம்பரை உருவாக்க முடியும். எனவே இது மிகவும் பாதுகாப்பான செயல்முறை ஆகும்.
Table of Contents
Indian Bank ATM PIN Generation
இந்தியன் வங்கி ஏ.டி.ம் கார்டு பின் நம்பரை Set செய்வதற்கு இரண்டு விதமான நிலைகள் உள்ளன.
அதில் முதலாவதாக ATM Center-ல் Green PIN-யை உருவாக்க வேண்டும். பிறகு இரண்டாவதாக 4 இலக்க PIN நம்பரை Set செய்ய வேண்டும்.
What is Green PIN?
Green PIN என்பது Debit Card-க்கு பின் நம்பரை Set செய்வதற்காக, பதிவு செய்யப்பட்ட Mobile Number-க்கு உடனடியாக அனுப்பப்படும் OTP Number ஆகும். Green PIN-யை பயன்படுத்தி டெபிட் கார்டுக்கு பின் நம்பரை அமைக்கலாம்.
How to Generate Indian Bank Green PIN
பின்வரும் செயமுறைகளின் மூலம் Green PIN-யை Generate செய்யலாம்.
Step 1: வங்கிக்கணக்கு வாடிக்கையாளர் அருகில் உள்ள Indian Bank ATM Center-க்கு செல்ல வேண்டும்.
Step 2: ATM Machine-ல் Indian Bank Debit Card-யை Insert செய்ய வேண்டும்.
Step 3: Generate PIN / Set PIN என்பதை தேர்வு செய்க.
Step 4: Generate OTP என்பதை தேர்வு செய்யவும்.
Step 5: இப்பொழுது வாடிக்கையாளரின் Bank Account Number-யை Enter செய்து Correct என்பதை கிளிக் செய்க.
Step 6: இப்போது மீண்டும் Bank Account Number-யை Enter செய்து Correct என்பதை கிளிக் செய்க.
Step 7: திரையில் வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கு தகவல்கள் தெரியும். அதை சரிபார்த்த பின்பு Confirm என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 8: இப்போது வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP (Green PIN) வரும்.
How to Set Indian Bank ATM PIN Number
Green PIN-யை உருவாக்கிய பிறகு, பின்வரும் செயல்முறைகளின் மூலம் புதிய ATM PIN Number-யை Set செய்யலாம்.
Step 1: ATM இயந்திரத்தில் உங்களின் Debit Card-யை Insert செய்ய வேண்டும்.
Step 2: Generate PIN / Set PIN என்பதை தேர்வு செய்க.
Step 3: இரண்டாவதாக உள்ள Set PIN என்பதை தேர்வு செய்யவும்.
Step 4: இப்போது வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து Correct என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 5: இதற்கு முன்பு வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்ணை Enter செய்து Correct என்பதை கிளிக் செய்க.
Step 6: இதில் 4 இலக்க ATM PIN நம்பரை Set செய்ய வேண்டும்.
Step 7: பிறகு மீண்டும் அதே 4 இலக்க PIN எண்ணை Enter செய்ய வேண்டும்.
Step 8: இப்போது வாடிக்கையாளரின் பின் நம்பர் வெற்றிகரமாக Set செய்யப்பட்டது.
இப்போது உருவாக்கப்பட்ட Indian Bank ATM PIN Number-யை கொண்டு Withdrawal செய்தல், POS பரிவர்த்தனைகளை செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க – How to Open for Indian Bank Savings Account Online
மேற்கூறிய செயல்முறையானது புதிய ஏ.டி.ம் கார்டுக்கு மட்டும் இல்லாமல் ஏற்கனவே உள்ள ஏ.டி.ம் அட்டையின் PIN Number-யை மறந்துவிட்டால், அதை Reset செய்வதற்கும் பயன்படுத்தலாம்.மேலும் படிக்க – Apply For Indian Bank Online Saving Account