How to Generate & Change Indian Bank ATM PIN Through Online

நீங்கள் Indian Bank இல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரா ?  அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். இந்தியன் வங்கியானது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை வழங்கியுள்ளது. அது என்னவென்றால், இனி உங்களின் ATM Card இன் PIN Number-யை Online மூலமாகவே Change செய்ய முடியும். அதற்கான செயல்முறை விளக்கத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

பல வங்கிகள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் ATM PIN எண்ணை மாற்றும் வசதியை வழங்கியுள்ளன. இருப்பினும், இதுநாள் வரைக்கும் இந்தியன் வங்கியானது, வாடிக்கையாளர்களுக்கு அவ்வாறான வசதியை வழங்கவில்லை.

ஒரு இந்தியன் வங்கி வாடிக்கையாளர் தன்னுடைய Debit Card பின் நம்பரை மாற்ற வேண்டுமென்றால், அதற்க்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு இந்தியன் பேங்க் ATM Center-க்கு தான் போக வேண்டியதிருந்தது. 

ஆனால், இப்பொழுது ATM Center-க்கு போகாமலேயே Indian Bank ATM PIN நம்பரை Generate அல்லது Change செய்ய முடியும். அதாவது, Indian Bank இன் Net Banking வசதியை பயன்படுத்தி Online மூலமாகவே ATM PIN நம்பரை Set செய்யலாம். இதற்கான வசதியை இந்தியன் வங்கி வழங்கியுள்ளது.

PIN நம்பரை மாற்றுவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டியவை:

நீங்கள் இந்தியன் வங்கியின் Debit Card PIN நம்பரை மாற்றுவதற்கு முன்பு கீழ்கண்டவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

  • நீங்கள் ஆன்லைன் மூலம் பின் நம்பரை மாற்றுவதற்கு, முதலில் Indian Bank இல் Net Banking சேவையை Register செய்திருக்க வேண்டும்.
  • உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
  • உங்களின் டெபிட் கார்டின் காலாவதி தேதி (Expiry Date) தெரிந்திருப்பது அவசியம்.

How to Generate & Change Indian Bank ATM PIN Through Online

நீங்கள் வங்கிக் கிளையையோ அல்லது ATM நிலையத்திற்க்கோ செல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே வெறும் 5 நிமிடத்தில் உங்களின் ATM PIN நம்பரை மாற்றமுடியும். அதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Step 1: நீங்கள் முதலில் indianbank.in என்ற இந்தியன் வங்கியின் Official இணையதளத்தை அணுக வேண்டும்.

Step 2: இப்பொழுது மெனு பாரின் கடைசியில் உள்ள Internet Banking என்பதில் சுட்டியை வைக்கும்போது இரண்டு தேர்வுகள் தோன்றும். அதில் Indian Bank Net Banking என்பதை கிளிக் செய்யவும்.

Read  How to Add Beneficiary in IndOasis Mobile Banking App: Indian Bank

Select Indian Bank Net Banking

Step 3: இப்போது தோன்றும் பக்கத்தில் Login For Net Banking என்பதை அழுத்தவும்.

Click Login for Net Banking

Step 4: இப்பொழுது இந்தியன் வங்கியின் இணைய சேவை Login பக்கம் திறக்கும். அதில் உங்களின் User Id-யை உள்ளிட்டு Login என்பதை கிளிக் செய்க.

Click Login - Indian Bank net banking

Step 5: பிறகு Password-யை உள்ளிட்டு Login என்ற பட்டனை அழுத்தவும்.

Enter Your Net Banking Password - ATM Pin Change

Step 6: தற்போது இணைய வங்கி சேவையின் Dashboard திறக்கும். அதில் Options என்பதை கிளிக் செய்க.

Select Options - Indian Bank ATM Pin Change

Step 7: User Profile என்ற பக்கத்தில் Debit Card Services இருப்பதை காண்பீர்கள். அதில் Set ATM PIN என்பதை கிளிக் செய்யவும்.

Click Set ATM Pin in Indian bank Net Banking

Step 8: உங்களின் Account Number-யை தேர்வு செய்து Transaction Password-யை உள்ளிடவும். பிறகு Submit என்பதை கிளிக் செய்யவும்.

Step 9: இந்த பக்கத்தில் உங்களின் Debit Card-யை தேர்வு செய்து Expiry Date-யை தேர்வு செய்யவும். பிறகு Generate Green PIN என்பதை அழுத்தவும்.

Read  How to Activate Indian Bank New ATM Card: Step by Step Guide

Generate Green PIN

Step 10: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு 6 இலக்க Green PIN OTP வரும். அதை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்க.

Click Submit

Step 11: நீங்கள் 4 இலக்க புதிய ATM PIN நம்பரை Type செய்ய வேண்டும். பிறகு கடைசியாக Submit என்பதை கிளிக் செய்க.

Set Your New ATM Pin in indian bank

இப்போது நீங்கள் பார்க்கும் திரையில் Set Pin Successfull  என்ற செய்தி தோன்றுவதை காணலாம்.

Now Showing set pin successfull

மேற்கண்ட அனைத்து செயல்முறைகளும் முடிந்த பிறகு, உங்களின் Indian Bank இன் ATM PIN நம்பர் வெற்றிகரமாக Change செய்யப்பட்டிருக்கும். இப்பொழுது ATM Withdrawal மற்றும் POS போன்ற அனைத்து பரிவர்த்தனைகளையும் புதிய பின் நம்பரை பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *