How to Apply For Indian Bank New Passbook | பாஸ்புக்

Indian Bank New Passbook: இந்தியன் வங்கியானது இந்தியாவின் சிறந்த பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். நீங்கள் புதியதாக Indian Bank Savings Account யை திறக்கும் போது வங்கித்தரப்பில் இருந்து புதிய Passbook யை வழங்குவார்கள். இந்த பாஸ்புக் என்பது உங்களின் வங்கிக்கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகளின் (Transactions) விவரங்களை சுருக்கமாக தெரிந்துகொள்ள உதவும் புத்தகமாகும்.

இந்தியன் வங்கியின் பாஸ்புக்கை ஒரு ஆவணமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஓட்டர் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை Apply செய்யும்போது முகவரி சான்றாகவும் பயன்படுத்தலாம். 

நீங்கள் பல்வேறு காரணங்களால் உங்களின் Indian Bank Passbook யை தவறவிட்டிருக்கலாம். அல்லது பாஸ்புக் ஆனது சேதம் அடைந்திருக்கலாம். இதன் காரணமாக நீங்கள் ஒரு New Passbook கிற்கு Apply செய்ய விரும்பலாம்.

எனவே உங்களுக்கு இந்தியன் வங்கியில் புதிய பாஸ்புக்கை விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால், இந்த கட்டுரையை கட்டாயமாக படிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் பாஸ்புக்கை விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

How to Apply for Indian Bank New Passbook

Indian Bank Passbook யை தற்போது Online மூலம் Apply செய்ய முடியாது. எனவே நேரடியாக வங்கிக்கு சென்று Offline முலமாக தான் விண்ணப்பிக்க முடியும். இந்தியன் வங்கியில் Duplicate Passbook யை பெறுவதற்கு கீழ் கண்ட படிகளை பின்பற்றவும்.

Read  How to View Indian Bank Passbook in Online: mPassbook

Step 1: உங்களின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், முகவரி மற்றும் அடையாள சான்றுகளை எடுத்துக்கொண்டு உங்களின் வங்கிக்கிளையை அணுகவும். ஆதார் அட்டையை முகவரி மற்றும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.

Step 2: நீங்கள் வங்கியினுள் சென்று Customer Service Request Form யை கேட்டு பெறுங்கள். அல்லது Duplicate Passbook யை பெறுவதற்கான விண்ணப்பம் என்றும் கேட்கலாம். நீங்கள் எப்படி கேட்டாலும் ஒரே மாதிரியான படிவத்தை தான் கொடுப்பார்கள்.

Step 3: Customer Service Request Form யை வாங்கியவுன் அதை நிரப்ப வேண்டும்.

அதை எவ்வாறு நிரப்புவது என்று பார்க்கலாம்.

படிவத்தில் Date, Branch, Name, Account Number மற்றும் Mobile Number போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

பிறகு எண் 6 இல் Issue Of Duplicate Passbook என்று இருக்கும். அதை டிக் செய்து பாஸ்புக்கை பெறுவதற்கான காரணத்தை தேர்வு செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, உங்களின் பாஸ்புக் தொலைந்திருந்தால் Lost என்பதை தேர்வு செய்யவும்.

Read  How to Change / Update Mobile Number in Indian Bank Account

Customer service request form-Indian Bank Passbook Apply

பிறகு படிவத்தின் பின்பக்கத்தில்  கடைசியாக உள்ள உங்களின் கையெழுத்து (Signature), பெயர் (Name) மற்றும் முகவரி போன்றவற்றை நிரப்புக.

Customer service request form-Indian Bank Passbook Apply

இப்பொழுது படிவத்தை நிரப்பும் பணி முடிந்துவிட்டது. நிரப்பிய படிவத்துடன் ஒரு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையின் நகல் போன்றவற்றை இணைத்து வங்கியில் சமர்ப்பிக்கவும். உங்களின் தகவல்கள் சரிப்பார்க்கப்பட்டு புதிய பாஸ்புக்கை (New Passbook)  வழங்குவார்கள்.

நீங்கள் புதிய பாஸ்புக்கை பெற்ற பிறகு கவனிக்க வேண்டியவை:

நீங்கள் இந்தியன் வங்கியில் பாஸ்புக்கை பெற்ற பின்பு பின்வனவற்றை கவனிக்க வேண்டும்.

1.  பாஸ்புக்கில் QR Code ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் QR Code இருந்தால் தான் Indian Bank QR Code Machine மூலம் பாஸ்புக்கை அச்சிட முடியும். இந்த QR Code இல் உங்களின் வங்கித்தகவல்கள் இருக்கும். இயந்திரம் அதை படித்துவிட்டு சர்வரில் சரிப்பார்க்கப்பட்டு பாஸ்புக்கில் அச்சிட தொடங்கும்.

2.  முதல் பக்கத்தில் உங்களின் பெயர், வங்கிக்கணக்கு எண் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும். ஏதாவது தவறாக இருந்தால் அதை மாற்றுவதற்கான கோரிக்கை விடுக்கலாம்.

3. புத்தகத்தில் உங்களின் புகைப்படம் ஓட்டப்பட்டுள்ளதா என்பதை பாருங்கள். மேலும் அந்த புகைப்படத்தில் வங்கியின் முத்திரை போடப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.

இன்று இந்தியன் வங்கியில் பாஸ்புக்கை பெறுவது எவ்வாறு என்பதை பற்றி தெரிந்து கொண்டீர்கள். மேலும் இது போன்ற பல பயனுள்ள கட்டுரைகளை பெறுவதற்கு இந்த இணையதளத்தை பின்தொடரவும். உங்களுக்கு இதை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment பிரிவில் பதிவிடவும்.

Read  Indian Bank Balance Check by Missed Call, ATM Card, Mobile App

FAQ 

வங்கி பாஸ்புக் என்றால் என்ன?

பாஸ்புக் என்பது ஒவ்வொரு வங்கி வாடிக்கையாளர்களுக்கும், வங்கித்தரப்பில் இருந்து கொடுக்கப்படும் ஒரு புத்தகம் ஆகும். அதில் முதல் பக்கத்தில் வாடிக்கையாளரின் பெயர், தொலைபேசி நம்பர் மற்றும் வங்கித்தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.


பேங்க் பாஸ்புக் எதற்காக பயன்படுகிறது?

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்களை புத்தகத்தில் என்டர் செய்து தெரிந்துகொள்ள பயன்படுகிறது. மேலும் அந்த புத்தகத்தை ஒரு ஆவணமாகவும் பயன்படுத்தலாம்.


பாஸ்புக்கை அவ்வப்போது கட்டாயம் என்டர் செய்ய வேண்டுமா?

கட்டாயம் இல்லை. பாஸ்புக்கை வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் என்டர் செய்யலாம்.


வங்கி பாஸ்புக்கை நீண்ட காலம் என்டர் செய்யாமல் இருந்தால், வங்கிக்கணக்கில் ஏதாவது பிரச்சனை வருமா?

இல்லை. நீங்கள் பாஸ்புக்கை  நீண்ட காலம் என்டர் செய்யாமல் இருந்தால், எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஏனெனில் கணக்கின் பரிவர்த்தனை விவரங்களை தெரிந்துகொள்ள மட்டுமே பாஸ்புக்கை என்டர் செய்கிறோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *