How to Add Beneficiary in Indian Bank Internet Banking
நீங்கள் Internet Banking சேவையை இப்போது தான் புதிதாக பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால் Beneficiary என்றால் என்ன? Internet Banking இல் அதை எவ்வாறு Add செய்வது? போன்றவற்றை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இதை பற்றி தெரிந்தால் தான் உங்களால் மற்றவர்களின் வங்கிக்கணக்கிற்கு எளிதாக Money Transfer செய்ய முடியும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு Internet Banking சேவையை வழங்குகின்றன. Indian Bank ஆனது இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். ஆன்லைன் மூலம் இந்தியன் வங்கியில் இருந்து பிற வங்கிகளுக்கு பணத்தை Transfer செய்வது எளிதாகும். அதற்கு முதலில் Beneficiary-யை Add செய்ய வேண்டும்.
Table of Contents
What is Bank Beneficiary?
நீங்கள் உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து, Internet Banking சேவையின் மூலம் மற்றொரு வங்கிக்கணக்கிற்கு பணத்தை Transfer செய்கிறீர்கள் என்று கொள்வோம். நீங்கள் அனுப்பிய பணத்தை யார் பெறுகிறார்களோ அவர்களே Bank Beneficiary ஆவர். அதாவது ஒரு பயனை பெறக்கூடிய நபர் பயனாளர் (Beneficiary) ஆகும்.
ஒருவேளை உங்களின் நண்பரின் வங்கிக்கணக்கிலிருந்து, நீங்கள் பணத்தை பெறும்போது நீங்களும் ஒரு பயனாளர் ஆவர்.
Why add a beneficiary?
நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரின் வங்கிக்கணக்கிற்கு அடிக்கடி Money Transfer செய்வதாக கொள்வோம். அவ்வாறு செய்யும்போது அவரின் Name, Bank Account Number, IFSC Code, Mobile Number போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் பணத்தை Transfer செய்யும்போது திரும்ப திரும்ப அந்த தகவல்களை கொடுக்க வேண்டும்.
எனவே, நீங்கள் வழக்கமாக Transfer செய்யும் நபரின் வங்கி தகவல்களை Beneficiary List இல் சேர்க்க வேண்டும். ஒருமுறை பயனாளர் பட்டியலில் சேர்த்துவிட்டால், பிறகு நிதி பரிமாற்றத்தின் போது அந்த பயனாளியை தேர்வு செய்து நேரடியாக நிதி பரிமாற்றம் செய்யலாம்.
How to Add a Beneficiary in Indian Bank
Indian Bank Internet Bank இல் ஒரு பயனாளரை சேர்க்க விரும்பினால் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றவும்:
Step 1: முதலில் Indian Bank Official Website-க்கு செல்ல வேண்டும்.
Step 2: Internet Banking இன் Username மற்றும் Password-யை Enter செய்து Login செய்யவும்.
Step 3: இப்பொழுது இணைய வங்கியின் Dashboard திறக்கும். அதில் Fund Transfer என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: Manage Beneficiaries என்பதை கிளிக் செய்க.
Step 5: Add Beneficiary என்பதை தேர்வு செய்யவும்.
Step 6: Type of Bank என்ற இடத்தில் வங்கியின் வகையை தேர்வு செய்ய வேண்டும்.
Step 7: நீங்கள் Indian Bank என்பதை தேர்வு செய்தால் பயனாளியின் Name, Nick Name, Address, Mobile Number மற்றும் Email ID போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும்.
Step 8: பிறகு Submit என்பதை கிளிக் செய்க.
Step 9: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP-யை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 10: நீங்கள் Other Banks என்பதை தேர்வு செய்தால் பயனாளியின் Name, Nick Name, Account Number, IFSC Code, Account Type, Address மற்றும் Mobile Number போன்ற அனைத்து விவரங்களை உள்ளிட வேண்டும்.
Step 11: பிறகு Submit என்பதை அழுத்தவும்.
Step 12: இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Submit செய்யவும்.
Step 13: அடுத்த 24 மணி நேரத்திற்குள் Beneficiary Add செய்யப்பட்டிருக்கும்.
How to Delete Beneficiary
நீங்கள் எத்தனை பயனாளிகளை வேண்டமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு தேவையில்லை என்றால் Delete செய்யலாம்.
ஏற்கனவே பயனாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு பயனாளியை Delete செய்ய பின்வரும் நடைமுறையை பின்பற்றவும்.
Step 1: View / Delete Beneficiary என்பதை கிளிக் செய்யவும்.
Step 2: பயனாளியின் பெயரின் மீது கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது பயனாளியின் அனைத்து விவரங்களும் தெரிவதை காணலாம். கீழே உள்ள Delete என்ற பட்டனை அழுத்தவும்.
Step 4: இப்பொழுது வெற்றிகரமாக பயனாளியின் பெயர் Delete செய்யப்பட்டுவிடும்.
இந்த கட்டுரையில் Indian Bank Internet Banking இல் ஒரு பயனாளியை எப்படி சேர்ப்பது மற்றும் நீக்குவது என்பதை பற்றி பார்த்தோம். இதை பற்றிய கருத்துகளை Comment பிரிவில் பதிவிடவும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- How to Open Indian Bank Account Online
- How to Generate Indian Bank ATM PIN Number
- Indian Bank Internet Banking