How to Reset Indian Bank Net Banking Login Password in Online
Indian Bank இல் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் Net Banking வசதியை பெறலாம். Indian Bank Net Banking இன் Password-யை நீங்கள் மறந்துவிட்டால் என்ன செய்வது ? இதற்கான தீர்வை இந்த கட்டுரையில் காணலாம்.
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தற்போது இணைய வங்கி வசதியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் பெரும்பாலான வங்கி சேவைகளை இணைய வங்கி மூலமாகவே பெற முடியும்.
இந்தியன் வங்கியின் இணைய வங்கி சேவையை Activate செய்வதற்கு வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இணைய வங்கி சேவையை Online வழியாகவே Activate செய்து பயன்படுத்த முடியும்.
இருப்பினும் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் ATM Card ஆகிய இரண்டும் இருந்தால் மட்டுமே இணைய வங்கி சேவையை Open செய்ய இயலும்.
எனவே உங்களுக்கு இணைய வங்கி சேவையை Open செய்யும் எண்ணம் இருந்தால், பதிவு செய்த மொபைல் எண் மற்றும் ATM Card இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
உங்களின் Net Banking Login Password-யை மறந்துவிட்டால் என்ன செய்வது என்று குழப்பமடைய வேண்டாம். ஒரு சில எளிய படிகளின் மூலம் Indian Bank Login Password-யை Reset செய்துவிடலாம். அதை பற்றிய விவரங்களை படங்களுடன் விளக்குகிறேன்.
How to Reset Indian Bank Net Banking Login Password
Step 1: முதலில் இந்தியன் வங்கியின் Official இணையதளமான Indianbank.in என்ற தளத்தை அணுகவும்.
Step 2: அந்த இணைய தளத்தில் Internet Banking > Indian Bank Net Banking என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது Login For Net Banking என்பதை கிளிக் செய்க.
Step 4: தற்போது Login Page திறக்கும். அதில் உங்களின் User ID-யை Enter செய்து Login என்பதை அழுத்தவும்.
Step 5: அடுத்து Password Enter செய்யும் பக்கம் திறக்கும். அதில் Forgot Paasword என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: இப்போது Password-யை எந்த Mode இல் Reset செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அதில் ATM Card என்பதை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும்.
Step 7: உங்களின் பதிவு செய்த மொபைல் எண்ணை உள்ளிட்டு Confirm என்பதை அழுத்தவும்.
Step 8: உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும். அந்த OTP நம்பரை Enter செய்து Sumbit என்பதை அழுத்தவும்.
Step 9: இந்த பக்கத்தில் உங்களின் 16 இலக்க ATM Card Number, PIN மற்றும் Expiry Date போன்றவற்றை உள்ளிட்டு Confirm என்பதை கிளிக் செய்யவும்.
Step 10: இணைய வங்கியின் New Login Password-யை கொடுக்கவும். நீங்கள் Enter செய்யும் Password ஆனது Letters, Symbols மற்றும் Numbers என அனைத்தையும் கலந்த Strong ஆன Password ஆக இருக்க வேண்டும். பிறகு கடைசியாக Confirm என்பதை கிளிக் செய்யவும்.
Step 11: இப்பொழுது உங்களின் Login Password வெற்றிகரமாக Reset செய்யப்பட்டது.
தற்போது உங்களின் இணைய வங்கி சேவையை புதிய Login Password-யை கொண்டு Login செய்யலாம். இவ்வாறு உங்களின் கடவுச்சொல்லை எத்தனை முறை மறந்தாலும், அதை மேற்கண்ட வழிமுறையை பயன்படுத்தி மீட்டெடுக்கலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்: