Indian Bank ATM Card Apply Letter in Tamil
Indian Bank ATM Card Apply Letter in Tamil: நீங்கள் இந்தியன் வங்கிக்கு புதிய ATM Card வேண்டி கடிதம் எழுதுகிறீர்களா? ஆனால் அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லையா? கவலையை விடுங்கள். இந்த பதிவில் இந்தியன் வங்கியில் புதிய ஏடிம் கார்டு பெறுவதற்கு எப்படி கடிதம் எழுதுவது என்று பார்ப்போம்.
பொதுவாக இந்தியன் வங்கியில் புதிய ATM Card யை பெறுவதற்கு Customer Service Request Form என்று ஒரு படிவம் இருக்கும். அதில் உங்களின் வங்கித்தகவல்களை நிரப்பி ATM Card சேவையின் கீழே உள்ள Issuing a Duplicate card என்ற சேவையை தேர்வு செய்தாலே போதுமானது ஆகும். பிறகு அந்த படிவத்தை வங்கியில் கொடுத்தால் புதிய ATM Card யை பெறலாம்.
ATM Card சேவை மட்டுமின்றி மொபைல் எண்ணை மாற்றுதல், முகவரி மாற்றம், New Passbook க்கு Apply செய்தல் போன்ற பல்வேறு சேவைகளை இந்த Customer Service Request Form மூலம் பெறலாம். மேலும் இந்த படிவம் நிரப்புவதற்கு எளிதாக இருக்கும்.
சில இந்தியன் வங்கிகளில் ATM Card யை பெற Indian Bank Customer Request form யை நிரப்ப சொல்லலாம். அல்லது சில வங்கிகளில் புதிய ATM Card க்கு விண்ணப்பிக்க ATM Card Letter யை எழுதச்சொல்லலாம். எதுவாக இருந்தாலும் இந்த கட்டுரையில் இந்த இரண்டை பற்றியும் காணலாம். இதில் உங்களுக்கு எது தேவைப்படுமோ அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Table of Contents
Applying for Indian Bank ATM Card through Customer Service Request Form
உங்களின் வங்கிக்கிளையில் Customer Service Request Form யை பெற்றுக்கொண்டு பின்வருமாறு நிரப்ப வேண்டும்.
- முதலில் தேதி மற்றும் உங்களின் வங்கிக்கிளையின் பெயரை எழுதவும்.
- பிறகு உங்களின் பெயர், வங்கிக்கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை நிரப்பவும்.
- இப்பொழுது ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு சேவைகள் கொடுத்திருப்பார்கள். அதில் முதலில் உள்ள ATM / Debit Card யை டிக் செய்யவும். உங்களின் பழைய ATM கார்டு மீது 16 இலக்க எண்கள் இருக்கும். அதை அங்கு உள்ள கோடிட்ட இடத்தில் நிரப்பவும். ஒருவேளை உங்களிடம் பழைய ATM Card இல்லை என்றால், கோடிட்ட இடத்தை அப்படியே விட்டுவிடவும்.
- புதிய ATM Card க்கு Issuing a Duplicate card என்பதை டிக் செய்யவும்.
- இப்போது படிவத்தை அடுத்தபக்கத்திற்கு திருப்பவும். கடைசியில் உங்களின் கையொப்பம், பெயர் மற்றும் முகவரியை நிரப்பவும்.
- அவ்வளவு தான் இப்பொழுது படிவத்தை நிரப்பிவிடீர்கள். அதனுடன் ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்புத்தகத்தின் நகலை இணைத்து வங்கியில் கொடுங்கள்.
Indian Bank ATM Card Apply Letter in Tamil
இப்பொழுது வங்கியின் மேலாளருக்கு ATM Card வேண்டி எப்படி Letter எழுதுவது என்று பார்ப்போம்.
அனுப்புநர்,
மா. சுரேஷ்,
எண். 152, விநாயகர் கோவில் தெரு,
சிற்றம் பட்டி, காட்பாடி தாலுக்கா,
வேலூர் – 632007
கைபேசி – 7765980098
கணக்கு எண். 8106548865
பெறுநர்,
உயர்திரு கிளை மேலாளர் அவர்கள்
இந்தியன் வங்கி,
காட்பாடி கிளை,
வேலூர் – 632007
பொருள்: புதிய ATM கார்டு வேண்டி விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா,
நான் மா. சுரேஷ், தங்களின் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு (கணக்கு எண். 8106548865) வைத்துள்ளேன்.
எனது ஏடிஎம் கார்டை பயன்படுத்த இயலாத அளவிற்கு முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதனால் ATM இயந்திரத்தில் இருந்து என்னால் பணத்தை எடுக்க முடியவில்லை. எனவே எனது சேமிப்பு கணக்கிற்கு புதிய ஏடிஎம் கார்டை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் குறிப்புக்காக வங்கி பாஸ்புக் மற்றும் பிற ஆவணங்களின் நகலை இணைக்கிறேன்.
கணக்கு வைத்திருப்பவரின் பெயர்: (மா. சுரேஷ்)
கணக்கு எண்: (8106548865)
கைபேசி எண்: (7765980098)
ஆதார் எண்: 610986584865
நன்றி!
நாள்: 17/05/2023
இடம்: காட்பாடி
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
மா. சுரேஷ்
நீங்கள் புதிய ATM கார்டை பெறுவதற்கு மேற்கண்ட வடிவத்தில் வங்கிக்கிளை மேலாளருக்கு கடிதம் எழுதலாம். இங்கு நான் ATM அட்டை சேதமடைந்துவிட்டது என்று கூறியிருக்கிறேன். நீங்கள் விண்ணப்பிப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். அதாவது உங்களின் ATM card காலாவதி ஆகியிருக்கலாம், அல்லது தொலைந்திருக்கலாம். உங்களின் காரணம் என்னவோ அதை மாற்றிக்கொள்ளலாம். மற்றபடி மேற்கண்ட வடிவத்தில் கடிதம் எழுதலாம்.
இந்த பதிவில் நீங்கள் New ATM Card க்கு Apply செய்ய இரண்டு முறைகளை பார்த்தோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துகளை கீழே பதிவிடவும்.