Indian Bank Balance Check by Missed Call, ATM Card, Mobile App
Indian Bank ஆனது இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கியானது Saving Account, ATM Card, Mobile Banking மற்றும் Net Banking போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவ்வப்போது தங்களின் Balance மற்றும் பரிவர்த்தனைகளை Check செய்ய விரும்புவார்கள்.
நீங்கள் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் என்றால், உங்களின் Indian Bank Saving Account இல் இருக்கும் Balance யை எத்தனை வழிகளில் அறிந்துகொள்ளலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
உங்களின் இந்தியன் வங்கியின் சேமிப்பு இருப்பை பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக உங்களுக்கு விளக்குகிறேன்.
Table of Contents
1. Missed Call Balance Enquiry Number
வங்கிக்கணக்கு வாடிக்கையாளர் Missed Call கொடுப்பதன் மூலம் தங்களின் Balance யை Check செய்ய முடியும்.
உங்களின் வங்கிக்கணக்கில் Register செய்த மொபைல் எண்ணில் இருந்து, கீழ்கண்ட எண்ணிற்கு Call செய்ய வேண்டும். Call செய்த பின்பு தானாகவே அழைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்.
Indian Bank Missed Call Balance Enquiry Number – 09289592895 |
பிறகு சிறிது நேரத்தில் உங்களின் மொபைல் எண்ணிற்கு SMS வரும். அதில் உங்களின் Bank Account இன் Balance குறித்த தகவல்கள் இருக்கும்.
வங்கிக்கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து Missed Call கொடுத்தால் மட்டுமே Balance யை அறிய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
2. Check Indian Bank Account Balance Through ATM Card
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் ATM Card யை பயன்படுத்தியும், வங்கிக்கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்.
உங்களுக்கு அருகில் உள்ள ATM Center க்கு சென்று பின்வரும் செயல்முறையை பின்பற்றி உங்களின் இருப்பை அறிந்து கொள்க.
Step 1: ATM Machine இல் உங்களின் ATM அட்டையை Insert செய்யவும்.
Step 2: உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்க.
Step 3: இப்பொழுது திரையில் உள்ள Enquiry என்பதை தேர்வு செய்க.
Step 4: உங்களின் கணக்கு Current Account வகையா அல்லது SB Account வகையா என்பதை தெரிவு செய்யவும். சாதாரண மக்கள் அனைவரும் சேமிப்பு கணக்கு பயன்படுத்துவதால் SB Account என்பதை தேர்வு செய்யவும்.
Step 5: தற்போது உங்களின் 4 இலக்க ATM Card PIN நம்பரை Enter செய்யவும்.
Step 6: தற்போது உங்களின் Indian Bank வங்கிக்கணக்கின் Available Balance தெரிவதை காண்பீர்கள்.
3. Check Indian Bank Balance Through Indoasis App
Indoasis என்ற செயலியானது, இந்தியன் வங்கி தரப்பில் இருந்து வழங்கப்படும் Mobile Banking App ஆகும்.
இந்த செயலியின் மூலம் இந்தியன் வங்கி வழங்கும் பல்வேறு வங்கி சேவைகளை மொபைல் மூலமாகவே பெற முடியும். இப்பொழுது மொபைல் செயலியின் Account Balance யை எவ்வாறு சரிபார்ப்பது என்பதை பற்றி காணலாம்.
Step 1: உங்களின் ஸ்மார்ட் போனில் Indoasis App யை Register செய்க.
Step 2: Register செய்த பிறகு MPIN யை உள்ளிட்டு Mobile App யை Login செய்க.
Method 1:
Step 3: Accounts என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இப்பொழுது உங்களின் Total Balance தெரிவதை காண்பீர்கள்.
Method 2:
Step 6: M-Passbook என்ற Option யை தேர்வு செய்க.
Step 7: M-Passbook Account யை தேர்வு செய்து View என்பதை கிளிக் செய்யவும்.
Step 8: தற்போது Indian Bank M-Passbook இல் உங்களின் அனைத்து Transation விவரங்களை காணலாம்.
4. Check Indian Bank Balance Through Net Banking
நீங்கள் Indian Bank Net Banking Register செய்திருந்தால், அதன் மூலமும் வங்கி இருப்பை சரிப்பார்கலாம்.
அதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:
Step 1: Indian வங்கியின் Internet Banking Portal யை அணுகவும்.
Step 2: Username மற்றும் Password யை உள்ளிட்டு Net Banking யை Login செய்யவும்.
Step 3: Login செய்தவுடன் அதன் முகப்பக்கத்தில் Book balance என்ற இதில் காணலாம்.
முடிவுரை
இன்றைய காலத்தில் வங்கிக்கணக்கில் உள்ள இருப்பை அறிந்துகொள்வது கடினமானது அல்ல. மேற்கண்ட பல்வேறு வழிமுறைகளின் மூலம் உங்களின் இந்தியன் வங்கி கணக்கில் உள்ள Balance யை சரிபார்க்கலாம். இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்களின் மதிப்பு மிக்க கருத்துக்களை கீழே பதிவிடவும்.