Indian Bank

Indian Bank Debit Card Types | Limits, Charges, Usages

Indian Bank ஆனது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான டெபிட் கார்டுகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கின் வகையை பொறுத்து வெவ்வேறு ATM Card கள் வழங்கப்படுகின்றன. இந்தியன் வங்கி வழங்கும் Debit Card Types களின் Limits, Usages மற்றும் கட்டணங்கள் போன்றவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

ஒவ்வொரு வங்கி வாடிக்கையாளர்களுக்கும் டெபிட் கார்டு என்பது முக்கியமானதாகும். ஏனெனில் வங்கி பரிவர்த்தனைகளை செய்வதற்கு இது முக்கிய பங்காற்றுகிறது. 

வாடிக்கையாளர்கள் ATM Machine இல் Withdraw செய்தல், E-Commerce, POS Transaction போன்ற பல்வேறு தேவைகளுக்காக ATM அட்டையை பயன்படுத்துகின்றனர்.

நீங்கள் இந்தியன் வங்கியில் ஒரு கணக்கை தொடங்கினால் ATM அட்டையை பெறுவதற்கு தகுதியுடையவர் ஆகிறீர்கள். ஆனால் நீங்கள் தொடங்கும் Savings Account க்கு தகுந்தவாறு டெபிட் அட்டை வழங்கப்படும்.

Indian Bank இல் உள்ள பல வகையான (Types) ATM அட்டைகளை பற்றி ஒவ்வொன்றாக காணலாம்.

RuPay Platinum Card

Indian Bank Savings Account யை Open செய்யும் போது Rupay Platinum Card யை வழங்குவார்கள். இதற்க்கு முன்பு Master Card மற்றும் Visa Card கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது Rupay கார்டுகளும் வழங்கப்படுகின்றன. இது இந்தியர்களுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்டுள்ளன.

Read  How to Register Indian Bank Mobile Banking: IndPay App

Transaction Limits: இந்த வகையான டெபிட் அட்டைகளில் Rs.50,000 ரூபாய் வரைக்கும் Withdraw செய்து கொள்ளலாம். மேலும் Point Of Sale (POS) இல் Rs.1,00,000 ரூபாய் வரைக்கும் பயன்படுத்தலாம்.

Charges: நீங்கள் கணக்கை திறக்கும் போது டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் அட்டையை தொலைத்துவிட்டாலோ அல்லது சேதப்படுத்தினாலோ New ATM Card க்கு விண்ணப்பிக்க நேரிடும். புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது கட்டணம் மற்றும் GST சேர்த்து செலுத்த வேண்டும்.

மேலும் முதல் ஆண்டில் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் (Annual Maintenance Charge) வசூலிக்க மாட்டார்கள். இரண்டாம் ஆண்டில் இருந்து Annual Maintenance Charge வசூலிக்கப்படும்.

Usages: இந்த வகையான அட்டைகளில் இந்தியாவில் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

MasterCard World

இந்தியன் வங்கியில் Savings அல்லது Current Account யை வைத்திருந்தாலே Master Card World வகையான அட்டையை பெறலாம். மேலும் இதை பற்றிய தகவல்களுக்கு அருகில் உள்ள இந்தியன் வங்கி கிளையை அணுகவும்.

Read  How to Download Indian Bank Account Statement Online

Transaction Limits: ATM இயந்திரங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக Rs.50,000 வரைக்கும் Withdraw செய்யலாம். மேலும் Rs.1,00,000 வரைக்கும் POS மற்றும் Online Purchases களை மேற்கொள்ளலாம்.

Usages: இது ஒரு International Debit Card ஆகும். இதை பயன்படுத்தி இந்தியா மற்றும் வெளிநாட்டு பரிவர்தனைகளை செய்யலாம். 

Image Card (My Design Card)

இந்தியன் வங்கியானது உங்களின் டெபிட் அட்டையை நீங்களே Design செய்ய அனுமதிக்கிறது. அதாவது உங்களின் ATM அட்டையின் Backround இல், உங்களுக்கு விருப்பமான Photo வை வைக்க முடியும்.

இதை நீங்கள் Online மூலமாகவே Apply செய்யலாம். Image Card க்கு Apply செய்யும் போது உங்களின் வங்கிக்கணக்கில் போதுமான இருப்பு தொகையை வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இதற்கான கட்டணம் உங்களின் வங்கிக்கணக்கில் வசூலிக்கப்படும்.

இது International ATM Card என்பதால் உலகம் முழுக்க பரிவர்த்தனைகளை செய்யலாம்.

Indian Bank PMJDY Debit Card

மத்திய அரசானது பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்களுக்காக Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY) வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கென PMJDY Debit Card களும் வழங்கப்பட்டன.

Read  How to Change / Update Email ID in Indian Bank Account Online

PMJDY கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வகையான அட்டைகள் வழங்கப்படும்.

Transaction Limits: Cash Withdrawal செய்வதற்கான வரம்பு ஒரு நாளைக்கு Rs.25,000 ஆகும். மேலும் POS பரிவர்த்தனைகள் வரம்பும் Rs.25,000 ஆகும்.

Usage: இந்தியாவில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

Indian Bank Senior Citizen Debit Card

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு அட்டையை இந்தியன் வங்கி வழங்குகிறது. இந்த வகையான டெபிட் கார்டில் Photo, Blood Group மற்றும் Date of Birth போன்ற தகவல்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

Transaction Limits: இதற்கான Cash Withdrawal Limit Rs.25,000 மற்றும் POS Limit Rs.25,000 ஆகும்.

Usages: இந்த அட்டையை கொண்டு இந்தியாவில் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

IB DIGI – RuPay Classic Card

வாடிக்கையாளர்கள் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் Indian Bank Digital (DIGI) கணக்கை Open செய்தால் Rupay Classic Card வழங்கப்படும்.

Transaction Limits: Classic ATM அட்டையை கொண்டு ஒரு நாளைக்கு Rs.10,000 மட்டுமே Withdraw செய்ய முடியும். மேலும் POS இன் பரிவர்த்தனையும் Rs.10,000 ஆகும்.

Usages: இந்திய பரிவர்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

முடிவுரை 

இந்த பதிவில் இந்தியன் வங்கி வழங்கும் பல்வேறு டெபிட் கார்டுகளின் வகைகளை பற்றி தெரிந்து கொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest