Indian Bank FD Interest Rates 2022 – Fixed Deposit
Indian Bank FD Interest Rates 2022: இந்தியன் வங்கியானது Fixed Deposit கணக்குகளுக்கு வழங்கும் வட்டி விகிதம் மற்றும் அதன் திட்டங்களின் வகைகள் போன்றவற்றை பற்றி இந்த இடுகையில் உங்களுக்கு விளக்குகிறேன்.
இந்தியன் வங்கியானது மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். மற்ற வங்கிகளை போலவே தங்களின் வாடிக்கையாளர்களுக்கு Savings Account, Recurring Deposit, Fixed Deposit போன்ற பல திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
ஒவ்வொரு திட்டமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்யலாம்.
ஒரு வாடிக்கையாளர் முதலீட்டு திட்டங்களின் அம்சங்கள் மற்றும் அதன் வட்டி விகிதங்களை தெரிந்துகொள்வதன் மூலம் சரியான திட்டத்தை தேர்வு செய்ய முடியும்.
இங்கு Indian Bank வழங்கும் Fixed Deposit திட்டங்கள், அவற்றின் வகைகள் மற்றும் அதன் Interest Rate யை பற்றி உங்களுக்கு விளக்குகிறேன். இதன் மூலம் உங்களுக்கான சரியான FD திட்டத்தை தேர்வு செய்ய இந்த கட்டுரை உதவும் என்பதில் சந்தேகமில்லை.
Table of Contents
Fixed Deposit (FD) Interest Rates 2022 of Indian Bank
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள வட்டி விகிதங்கள், ரூபாய் 2 கோடிக்கும் குறைவாக மற்றும் 2 கோடி முதல் 5 கோடி வரை Deposit செய்யப்பட்ட வைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த வட்டி விகிதங்கள் 24-08-2022 அன்று முதல் நடைமுறைக்கு வரும்.
முதலீட்டு காலம் | 2 கோடிக்கும் குறைவாக | 2 கோடியில் இருந்து 5 கோடி வரை |
Interest Rate | Interest Rate | |
7 days to 14 days | 2.80 % | 2.90 % |
15 days to 29 days | 2.80 % | 2.90 % |
30 days to 45 days | 3.00 % | 2.90 % |
46 days to 90 days | 3.25 % | 2.90 % |
91 days to 120 days | 3.50 % | 2.90 % |
121 days to 180 days | 3.75 % | 2.90 % |
181 days to less than 9 months | 4.00 % | 3.90 % |
9 months to less than 1 year | 4.40 % | 3.25 % |
1 year | 5.45 % | 3.55 % |
Above 1 year to less than 2 years | 5.50 % | 3.25 % |
2 years to less than 3 years | 5.55 % | 3.25 % |
3 years to less than 5 years | 5.75 % | 3.25 % |
5 year | 5.65 % | 3.25 % |
Above 5 years | 5.65 % | 3.25 % |
மேற்கண்ட அட்டவணையில் உள்ள வட்டி விகிதங்கள் https://www.indianbank.in/departments/deposit-rates/#! என்ற இந்தியன் வங்கியின் Official Website இல் இருந்து பெறப்பட்டது.
வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறுபடலாம்.
Types of Indian Bank Fixed Deposit Schemes
Regular Fixed Deposit
இந்த திட்டமானது ஒரு மொத்த தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு Deposit செய்து அதற்க்கு Interest யை பெற அனுமதிக்கிறது.
இதற்கான வட்டித்தொகையானது மாதாந்திர அல்லது காலாண்டு இடைவெளிகளில் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து செலுத்தலாம். இதற்க்கு அதிகபட்ச உச்ச வரம்பு ஏதும் இல்லை.
வைப்பு தொகையின் முதிர்வு காலமானது குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் ஆகும்.
Money Multiplier Deposit
இந்த MMD திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 முதல் Deposit செய்யலாம். மேலும் டெபாசிட் செய்ய விரும்பினால் 100 இன் பெருக்கல்களில் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு இல்லை.
இந்த வைப்பு தொகையின் காலம் 6 மாதங்கள் முதல் 120 மாதங்கள் ஆகும். இதற்கான வட்டி காலாண்டு இடைவெளிகளில் செலுத்தப்படும்.
Short Term Deposit
Short Term Deposit என்பது குறுகிய காலத்திற்கு பணத்தை முதலீடு செய்து வட்டி வருமானத்தை பெரும் முறையாகும். இதற்கான வைப்பு காலம் 7 நாட்கள் முதல் 1 வருடம் வரை இருக்கலாம்.
குறைந்தபட்ச வைப்பு 1000 ரூபாய் முதல் தொடங்கலாம். ஆனால் அதிகபட்ச வரம்பு இல்லை.
FD Features and Benefits
- நிலையான வைப்புத்தொகையின் முதிர்வு காலம் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆகும்.
- FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும்.
- சாதாரண வாடிக்கையாளர்களின் வட்டி விகிதங்களை விட மூத்த குடிமக்கள் 0.5% கூடுதல் வட்டியை பெறலாம்.
- FD முதலீட்டிற்கான வட்டியை மாதாந்திர மற்றும் காலாண்டில் செலுத்துவதற்கான விருப்பங்கள் உள்ளன.
- நிலையான வைப்பின் மீது கடன் வசதி உள்ளது.
- Nomination செய்யும் வசதியும் உள்ளது.
- Auto Renewal செய்யும் வசதிகள் உள்ளன.
How to Open FD in Indian Bank
Indian Bank இல் நீங்கள் FD யை Open செய்ய வேண்டுமென்றால், வங்கிக்கிளைக்கு நேரடியாக சென்றோ அல்லது Mobile Banking சேவையின் மூலமாகவோ திறக்கலாம்.
Indian Bank வங்கிக்கிளைக்கு சென்று Fixed Deposit கணக்கை திறத்தல்
நீங்கள் வங்கிக்கிளைக்கு சென்று Fixed Depoist கணக்கை திறப்பதாக இருந்தால் பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படம், ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் சேமிப்பு கணக்கின் புத்தகம் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
வங்கியில் சென்று FD கணக்கை திறக்கும் படிவத்தை நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து வங்கி ஊழியரிடம் அளிக்க வேண்டும். பிறகு பணத்தை செலுத்தியவுடன் நிலையான வைப்பு கணக்கு திறக்கப்படும்.
Indian Bank Net Banking மூலம் Fixed Deposit கணக்கை திறத்தல்
நீங்கள் Indian Bank Mobile Banking மூலம் FD கணக்கை திறப்பது மிகவும் எளிதாகும். எளிய படிகள் மூலம் FD கணக்கை தொடங்கலாம்.
- இந்தியன் வங்கியின் Official செயலியான IndOASIS என்ற செயலியை Login செய்யவும்.
- Deposits என்ற Option யை கிளிக் செய்யவும்.
- Open Fixed Deposit என்பதை தேர்வு செய்யவும்.
- டெபாசிட் செய்யும் காலம், வட்டி செலுத்தும் Frequency, டெபாசிட் செய்யும் பணம் போன்ற தகவல்களை உள்ளிட்டு எளிதாக Open செய்யலாம்.
- நீங்கள் FD இல் முதலீடு செய்யும், பணமானது உங்களின் சேமிப்பு கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
சுருக்கம்
Indian Bank இல் 2021 ஆம் ஆண்டிற்கான FD Interest Rates, அதன் வகைகள் மற்றும் அம்சங்கள் போன்றவற்றை பற்றிய விவரங்களை இந்த இடுகையில் தெரிந்து கொண்டீர்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய சந்தேகங்களுக்கு கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை வெளியிடும் போது அதற்கான அறிவிப்புகளை பெறுவதற்கு கீழே உள்ள பெல் பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்.