Indian Bank

How to Register Indian Bank Mobile Banking: IndPay App

நீங்கள் Indian Bank இல் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரா ? வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறே பண பரிமாற்றம் (Money Transfer), Recharge, Bill Pay போன்றவற்றை செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா ? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் ஆம் என்றால், இந்த கட்டுரை உங்களின் தேவையை பூர்த்தி செய்யும். Indian Bank Mobile Banking சேவையை Register செய்யும் செயல்முறைகளை Step by Step ஆக இதில் காணலாம்.

ஒரு காலத்தில் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நேரடியாக வங்கிக்கிளைக்கு போகவேண்டிய நிலை இருந்தது. அப்பொழுது வங்கியுனுள் சென்று பரிவர்த்தனைகளை முடித்து திரும்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

ஆனால், இப்பொழுது அந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது வங்கிக்கிளைக்கு போகாமலேயே அனைத்து விதமான வங்கிசேவைகளையும் வீட்டில் இருந்தவாறே பெறமுடியும். 

Indian Bank ஆனது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு, மின்னல் வேக வங்கி சேவைகளை வழங்குகிறது. இதற்காக Mobile Banking சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியன் வங்கி வழங்கும் Mobile Banking App மூலம் வங்கி சேவைகளை எங்கிருந்தும் அணுகலாம். இந்த மொபைல் பேங்கிங் செயலியை Google Play Store அல்லது Apple Store இல் இருந்து Download செய்து கொள்ளலாம்.

இந்தியன் வங்கி மொபைல் பேங்கிங் சேவைகள் 

இந்தியன் வங்கியின் மொபைல் பேங்கிங் மூலம் கீழ்கண்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

  • Indian Bank Account Balance Enquiry
  • Mini Statement
  • Fund Transfer
  • Scan & Pay
  • Bill Pay
  • Mobile / DTH Recharge
  • Transaction Lock/Unlock
  • Change PIN
  • Email Statement
  • Cheque Services
  • e-Deposits
  • m-Passbook
Read  How to Change Indian Bank ATM Withdrawal Limit in Online
மொபைல் பேங்கிங்யை பதிவு செய்ய தேவையானவை:
  • வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பர் 
  • CIF Number (Customer Identification Number)
  • ATM Card 
  • ஸ்மார்ட் போன் 
கவனத்தில் கொள்ளவேண்டியவை:

நீங்கள் மொபைல் வங்கி சேவையை பதிவு செய்வதற்கு முன்பு கீழ்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • நீங்கள் எந்த மொபைல் போனில் மொபைல் வங்கி சேவையை பதிவு செய்ய நினைக்கிறீர்களோ அந்த மொபைலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் சிம் கார்டை Insert செய்திருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் பதிவு செய்யும்போது மொபைல் எண்ணின் மூலம் Automatic Verification நடக்கும்.
  • உங்களின் மொபைல் எண்ணில் குறைந்தபட்சம் 1.50 காசுகள் இருக்க வேண்டும். ஏனெனில் மொபைல் SMS Verification இன் போது SMS -க்கான கட்டணம் Charge செய்யப்படும்.
  • மேலே குறிப்பிட்ட CIF Number என்பது, ஒரு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் வங்கி தகவல்களை டிஜிட்டல் வடிவில் வைத்திருக்கும் ஒரு File ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு தனித்துவ CIF Number இருக்கும்.
Read  How to View Indian Bank Passbook in Online: mPassbook

How to Register Indian Bank Mobile Banking 

நீங்கள் Indian Bank Mobile Banking யை பதிவு செய்வதற்கான செயல்முறைகள் Step by Step ஆக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

Step 1: நீங்கள் முதலில் Google Play Store அல்லது Apple Store இல் இருந்து IndPay என்ற App யை Install செய்ய வேண்டும்.

Install Indpay app

Step 2: Install செய்து முடித்த பின்னர் IndPay செயலியை Open செய்க. இப்பொழுது Login என்பதை கிளிக் செய்க.

Click Login Button

Step 3: உங்களின் CIF Number யை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

Enter your Indian Bank CIF Number

Step 4: இப்பொழுது மொபைல் எண்ணை தேர்வு செய்ய வேண்டும். அதாவது நீங்கள் வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பரை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பிறகு Automatic SMS Verification நடக்கும்.

Select Register Mobile Number

Step 5: Register Through ATM Card என்பதை கிளிக் செய்க.

Select ATM Card Option- indian bank mobile banking

Step 6: உங்களின் ATM கார்டின் 16 இலக்க எண், ATM Pin, Expiry Date போன்ற தகவல்களை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.

Enter Your ATM Card Details

Step 7: இப்பொழுது 4 இலக்க MPIN நம்பரை Set செய்ய வேண்டும். Set செய்த பிறகு Submit என்பதை கிளிக் செய்க.

Read  How to Activate Indian Bank New ATM Card: Step by Step Guide

Set Yout MPIN

Step 8: இதில் 4 இலக்க MTPIN நம்பரை Set செய்ய வேண்டும். பிறகு Submit என்பதை கிளிக் செய்க.

Set Your MTPIN

நீங்கள் Submit என்பதை கிளிக் செய்தவுடன், உங்களின் Mobile Banking வெற்றிகரமாக Register செய்யப்பட்டுவிடும்.

Your indian bank mobile banking registration successfull

What is MPIN and MTPIN 

நீங்கள் Indian Bank Mobile Banking இல் MPIN மற்றும் MTPIN ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

MPIN:

MPIN என்பது Mobile PIN ஆகும். அதாவது, இந்த பின் நம்பர் ஆனது IndPay App யை Login செய்ய பயன்படுகிறது.

MTPIN:

MTPIN என்பது Mobile Transaction PIN ஆகும். அதாவது IndPay App மூலம் நீங்கள் Fund Trnsfer, Mobile Recharge, DTH Recharge போன்ற பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது இந்த MTPIN தேவைப்படும்.

இந்த இரண்டு பின் நம்பர்களையும் Set செய்யும்போது, இரண்டிற்கும் ஒரே பின் நம்பரை கொடுக்கக்கூடாது. மாறுபட்ட பின் நம்பரை கொடுக்க வேண்டும்.

அதாவது MPIN க்கு 5896 என்று கொடுத்தால் MTPIN க்கும் 5896 என்ற அதே நம்பரை கொடுக்க கூடாது. வேறு ஒரு 4 இலக்க பின் நம்பரை கொடுக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து செயல்முறைகளையும் முடித்த பின்பு, உங்களின் Mobile Banking சேவையை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த செயலியை Login செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

One thought on “How to Register Indian Bank Mobile Banking: IndPay App

  • Pandurangan

    This is very important for all

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole