Indian Bank

Indian Bank Net Banking Registration & Login: Just 5 Minutes

நீங்கள் Indian Bank இல் கணக்கு வைத்திருப்பவரா? உங்களின் வங்கி பரிவர்த்தனைகளை Online மூலம் மேற்கொண்டு நேரத்தை சேமிக்க விரும்புகிறீர்களா? உங்களின் பதில் ஆம் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். Indian Bank Net Banking-யை Register செய்து எளிதாக Online பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.  இதற்கான செயல்முறைகளை விளக்கமாக இந்த கட்டுரையில் காணலாம்.

What is Net Banking?

Net Banking என்பது வங்கிக்கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் கணக்கை Online மூலம் அணுகுவதற்கு வங்கித்தரப்பிலிருந்து கொடுக்கப்படும் ஒரு ஆன்லைன் சேவையாகும்.

வங்கிகள் வழங்கும் இந்த சேவையை Net Banking, Internet Banking மற்றும் Online Banking என்ற பெயர்களால்  அழைக்கப்படுகிறது. 

Net Banking சேவையை பயன்படுத்தி வங்கிக்கு போகாமலேயே ஆன்லைன் மூலம் நிதி பரிமாற்றங்களை செய்ய முடியும். அதாவது Fund Transfer, Recharge, Bill Payment, Mini Statement இதுபோன்ற பல்வேறு சேவைகளை வீட்டில் இருந்தே பெற முடியும். இதற்க்கு உங்களின் மொபைல் அல்லது கணினிக்கு Internet Connection இருந்தால் போதுமானது. 

How to Register For Indian Bank Net Banking in Online?

நீங்கள் Indian Bank Net Banking சேவையை Register செய்வதற்கு வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வீட்டில் இருந்தவாரே Net Banking சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.

Read  How to Deposit Cash in Indian Bank Cash Deposit Machine (CDM)

இணைய வங்கி சேவைக்கு பதிவு செய்வதற்கு முன்னர் பின்வருவனவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  • வங்கிக்கணக்கில் Mobile Number பதிவு செய்திருக்க வேண்டும்.
  • மின்னஞ்சல் (Email) முகவரியை பதிவு செய்திருத்தல்.
  • ATM Card-யை பெற்றிருக்க வேண்டும்.

 பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி இணைய வங்கி சேவைக்கு பதிவு செய்யலாம்.

Click Login for Net Banking - Indian Bank

  • இப்பொழுது இணைய வங்கியின் Login Page திறக்கும். அதில் New User என்பதை கிளிக் செய்யவும்.

Click New User - indian Bank net banking

  • இப்பொழுது Online Request பக்கம் திறக்கும். அதில் இருக்கும் 8 படிகளை (Steps) பூர்த்தி செய்ய வேண்டும்.
  • Step 1 (User Details): CIF Number அல்லது Bank Account Number இவற்றில் ஏதாவது ஒன்றை Enter செய்யவும். பிறகு Mobile எண்ணை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.
  • Account Number மற்றும் CIF Number ஆனது உங்களின் Bank Passbook இல் இருக்கும்.

Enter User Details

  • Step 2 (OTP): இப்போது உங்களின் Mobile எண்ணிற்கு OTP வரும். அதை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

Enter OTP Number

  • Step 3 (Facility Type): Type of Facility என்ற இடத்தில் View and Transaction Facility என்பதை தேர்வு செய்து Confirm என்பதை கிளிக் செய்யவும்.
Read  How to Entry Indian Bank Passbook in Passbook Print Machine

Select Facility Type

  • Step 4 (Login Password): உங்களின் Net Banking-ற்க்கான Login Password-யை Create செய்து Submit என்பதை அழுத்தவும்.

Create Login Password for indian bank net banking

  • Step 5 (Secret Question): இந்த பக்கத்தில் இருக்கும் 5 கேள்விகளில் ஏதாவது இரண்டு கேள்விகளை தேர்வு செய்யவும்.  தேர்வு செய்த அந்த கேள்விகளுக்கு பதில்களை அளித்து Submit செய்யவும்.

Provide Secret Questions answer

  • Step 6 (Activation Type): இப்பொழுது உங்களின் இணைய வங்கி சேவையை Activate செய்ய வேண்டும். Activate Through ATM Card என்பதை தேர்வு செய்து Confirm என்பதை கிளிக் செய்க.

Select Activation Type

  • Step 7 (Terms & Conditions): I Agree என்பதை கிளிக் செய்யவும்.

Tick i agree- indian bank net banking

  • Step 8 (ATM Card Details): கடைசியாக உங்களின் ATM Card தகவல்களை Enter செய்து Submit செய்யவும்.

Enter ATM Card details

  • இப்பொழுது Online Banking சேவைக்கு வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் Activation செய்யப்படும்.

indian bank net banking activation successfully

How to Set Indian Bank Transaction Password?

இந்தியன் வங்கியில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அந்த பரிவர்த்தனையை முழுமையடைய செய்வதற்கு Indian Bank Transaction Password பயன்படுகிறது.

Login Password மற்றும் Transaction Password இவை இரண்டும் வெவ்வேறானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Login Password ஆனது Net Banking-யை Login செய்வதற்கு பயன்படுகிறது. ஆனால் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதத்திற்கு Transaction Password தேவைப்படுகிறது.

இணைய வங்கி சேவை Activate  ஆகிய பிறகு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி Transaction Password-யை Set செய்ய வேண்டும்.

  • Step 1: Indian Bank Login பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • Step 2: உங்களின் User ID-யை Enter செய்து Login என்பதை கிளிக் செய்க. (இங்கு User ID என்பது உங்களின் Passbook-ல் இருக்கும் CIF நம்பர் ஆகும்)
Read  How to View Indian Bank Passbook in Online: mPassbook

Enter Your User ID Number

  • Step 3: நீங்கள் ஏற்கனவே Set செய்த Login Password-யை உள்ளிட்டு Login என்பதை கிளிக் செய்யவும்.

Enter Your Login Password

  • Step 4: இதில் புதிய Transaction Password-யை உருவாக்கி Submit என்பதை அழுத்தவும்.

Enter Your Transaction Password

  • Step 5: உங்களின் Password வெற்றிகரமாக மாற்றப்பட்டது என்ற செய்தி தோன்றுவதை காணலாம். பிறகு அதற்கு கீழே உள்ள Submit என்பதை கிளிக் செய்யவும்.

Password Reset Successfully

  • Step 6: இப்பொழுது இந்தியன் வங்கியின் நெட் பேங்கிங் திறக்கும். இங்கு உங்களின் Bank Account Number மற்றும் Account Balance போன்ற தகவல்கள் தெரிவதை காண்பீர்கள்.

Enter Your Transaction Password

முக்கியமாக நீங்கள் நினைவில் வேண்டியவை 
  • Login Password மற்றும் Transaction Password இவற்றால் குழப்பமடைய வேண்டாம். இவை இரண்டும் வெவ்வேறானவை.
  • User ID மற்றும் Password-யை மற்றவர்கள் பார்க்கும்படி எழுதிவைக்கவோ அல்லது மற்றவர்களிடம் பகிரவோ கூடாது. ஏனெனில் User ID மற்றும் Password மற்றவர்களுக்கு தெரிந்தால் அவர்களாலும் உங்களின் கணக்கை Login செய்ய முடியும்.
  • நீங்கள் Password-யை மறந்துவிட்டாலும் அதை மீட்டெடுக்கலாம்.
  • மற்றவர்களின் மொபைல் அல்லது கணினிகளில் உங்களின் கணக்கை Login செய்ய வேண்டாம்.

உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது கருத்துக்களை Comment பிரிவில் பதிவிடவும் 

தொடர்புடைய கட்டுரைகள்:

3 thoughts on “Indian Bank Net Banking Registration & Login: Just 5 Minutes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest