How to Entry Indian Bank Passbook in Passbook Print Machine
ஒரு காலத்தில் வங்கியின் Passbook யை Entry செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. உங்களின் Indian Bank இன் Passbook யை Passbook Print Machine மூலம் ஒரு சில நிமிடங்களிலேயே Entry செய்ய முடியும். இதற்கான செயல்முறைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
Table of Contents
What is Bank Passbook?
Bank Passbook என்பது ஒரு வாடிக்கையாளர் தனது வங்கிக்கணக்கில் நடக்கும் அனைத்து பரிவர்தனைகளையும், சுருக்கமான அறிக்கையாக பெரும் புத்தகமாகும்.
நீங்கள் Indian Bank இல் Savings Account யை திறக்கும்போதே, வங்கித்தரப்பில் இருந்து பாஸ்புக்கையும் கொடுத்துவிடுவார்கள்.
Passbook Printing Machine
இதற்கு முன்பு வரைக்கும் வங்கியில் பாஸ்புக்கை Entry செய்ய வேண்டுமென்றால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தொழில்நுட்பம் வளர வளர வங்கியின் சேவைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒரு ATM Card யை கொண்டு இயந்திரத்தில் பணத்தை எடுப்பது போல, Passbook Printing இயந்திரத்தில் நீங்களே உங்களின் வங்கி புத்தகத்தை Entry செய்ய முடியும். இவ்வாறு செய்வது கடினமான செய்ய ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும் இந்த இயந்திரத்தில் பாஸ்புக்கை வைத்து Print எடுத்துக்கொள்ளலாம்.
தற்போது ஒவ்வொரு வங்கிளையிலும் பாஸ்புக்கை அச்சடிக்கும் இயந்திரத்தை நிறுவியுள்ளனர். இந்த வசதியை பயன்படுத்தி உங்களின் நேரத்தை சேமிக்க முடியும்.
How to Entry Indian Bank Passbook in Printing Machine
உங்களின் வங்கிப்புத்தகத்தை இயந்திரத்தின் மூலம் எவ்வாறு அச்சடிப்பது என்பதை பற்றி Step by Step ஆக பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
Step 1: நீங்கள் முதலில் உங்களின் வங்கிப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு, உங்களின் வங்கிக்கிளைக்கு செல்லவும்.
Step 2: அங்கு வங்கிப்புத்தகத்தை Entry செய்வதற்கான Barcode ஸ்டிக்கரை கேட்கவும். பிறகு வங்கி பணியாளரே உங்களின் பாஸ்புக்கின் பின்புறத்தில் Barcode ஸ்டிக்கரை ஒட்டி தருவார்.
Step 3: இப்பொழுது வங்கியினுள் அல்லது வங்கிக்கு வெளியே இருக்கும் Passbook Printing Machine யை அணுகவும்.
Step 4: இயந்திரத்தின் திரையில் உள்ள Touch Here To Start என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யவும். இங்கு தமிழ் என்று தேர்வு செய்துள்ளேன்.
Step 6: இப்போது உங்களின் பாஸ்புக்கில் காலியாக உள்ள பக்கத்தை திறந்து இயந்திரத்தின் உள்ளே செலுத்தவும்.
Step 7: இப்பொழுது உங்களின் QR Code (Barcode) ஸ்கேன் செய்யப்பட்டு, வங்கித்தகவல்களை பெறும்வரை காத்திருக்கவும். இயந்திரமானது உங்களின் வங்கித்தகவல்களை பெற்ற பிறகு, கணக்காளரின் பெயர் மற்றும் வங்கிக்கணக்கு எண் போன்றவற்றை திரையில் காட்டும்.
மேலும் அதே நேரத்தில் உங்களின் Passbook Print ஆக ஆரம்பிக்கும்.
Step 8: முழுவதும் Print செய்யப்பட்ட பிறகு, தானாகவே உங்களின் வங்கிப்புத்தகம் வெளியே தள்ளப்படும். இப்பொழுது உங்களின் புத்தகத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பு: சில நேரங்களின் நீங்கள் நீண்ட காலமாக வங்கிப்புத்தகத்தை Entry செய்யாமல் இருக்கலாம். இந்நிலையில் உங்களின் பரிவர்த்தனைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், இயந்திரத்தில் ஒரு பக்கம் முழுமையாக அச்சடிக்கப்பட்டதும் வேறொரு புதிய பக்கத்தை திறந்து வைக்க வேண்டும்.