IndOASIS: Indian Bank Mobile Banking App Registration
இந்தியன் வங்கியானது சமீபத்தில் IndOASIS என்ற புதிய Mobile Banking App யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய செயலியின் மூலம் பல்வேறு ஆன்லைன் வங்கி சேவைகளை மொபைல் மூலமாக பெற முடியும். இந்த செயலியை எவ்வாறு Registration செய்வது என்பதை பற்றி உரிய விளக்கப்படங்களுடன் இந்த கட்டுரையில் காணலாம்.
வங்கிகள் வழங்கும் மொபைல் பேங்கிங் சேவையானது, வாடிக்கையாளர்களின் நேரத்தை பெருமளவு சேமிக்கிறது. அதாவது எண்ணற்ற வங்கி சேவைகளை, தங்களின் மொபைல் மூலம் பெற முடியும்.
வங்கிகள் தங்களின் வாடிக்கையாளரிகளுக்கு வழங்கும் மொபைல் சேவைகளை மேம்படுத்த, அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிடுகிறது.
Indian Bank ஆனது இதற்க்கு முன்பு வரை Indpay என்ற செயலி மூலமாக தான், மொபைல் பேங்கிங் சேவையை வழங்கி வந்தது. ஆனால் தற்போது IndOASIS என்ற புதிய Mobile Banking செயலியை வெளியிட்டுள்ளது.
இந்த செயலியானது, Indpay App யை விட மிகவும் மேம்படுத்தப்பட்ட செயலியாகும். பல்வேறு கூடுதல் வசதிகள் இந்த செயலியில் சேர்க்கப்பட்டு உள்ளது.
OASIS என்பதன் விரிவாக்கம்:
O – One
A – App
S – Simple
I – Integral
S – Secure
Table of Contents
How to Register IndOASIS Mobile Banking App
இந்த செயலியை பயன்படுத்த நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படியென்றால் அதற்கான செயல்முறைகளை பற்றி படிப்படியாக காணலாம்.
இந்த செயலியை பதிவு செய்வதற்கு முன்பு பின் வருவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
- உங்களின் Indian Bank கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரின் சிம் கார்டு ஆனது, நீங்கள் இந்த செயலியை Register செய்யும் போனில் இருக்க வேண்டும்.
- உங்களின் போனில் குறைந்தபட்சம் Rs 1.50 Balance இருக்க வேண்டும். ஏனெனில் தானியங்கி SMS சரிப்பார்ப்பின் போது 1.50 ரூபாயை SMS கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.
- முக்கியமாக இந்த செயலியை பதிவு செய்யும்போது Wifi யை ஆப் செய்திருக்க வேண்டும். மொபைல் Data மூலமாக தான் பதிவு செய்ய முடியும்.
பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி நீங்கள் எளிதாக இந்த செயலியை Register செய்யலாம்:
Step 1: உங்களின் மொபைல் போனில் Google Play Store அல்லது App Store இல் இருந்து IndOASIS என்ற App யை Install செய்யவும்.
Step 2: பிறகு அந்த செயலியை கிளிக் செய்து Open செய்க.
Step 3: Allow என்பதை கிளிக் செய்க.
Step 4: Language பக்கத்தில் நீங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்க.
Step 5: இப்பொழுது ஒரு Pop Up திரையில் ஒரு செய்தி தோன்றும். அதில் OK என்பதை அழுத்துக.
Step 6: உங்களின் CIF Number யை Enter செய்து Send SMS என்பதை கிளிக் செய்க. இது உங்களின் Bank Passbook இல் இருக்கும்.
Step 7: SMS Verification முடிந்தவுடன் Proceed என்பதை அழுத்தவும்.
Step 8: இப்பொழுது தோன்றும் Pop Up திரையில் Ok என்பதை அழுத்துக.
Step 9: IndOASIS Activation: உங்களின் OndOASIS Mobile Banking செயலியை எதை பயன்படுத்தி Activate செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்க.
இங்கு ATM Card என்பதை தேர்வு செய்துள்ளேன். உங்களின் ATM Card Number, Expiry Date மற்றும் ATM PIN நம்பரை Enter செய்து Activate என்பதை அழுத்தவும்.
Step 10: MPIN: இதில் நன்கு இலக்க PIN நம்பரை Enter செய்து Proceed என்பதை கிளிக் செய்க.
MPIN என்றால் Mobile PIN ஆகும். இது செயலியை Login செய்வதற்கு பயன்படுகிறது.
Step 11: MTPIN: இந்த பக்கத்தில் நான்கு இலக்க MTPIN எண்ணை Enter செய்து Submit செய்ய வேண்டும்.
MTPIN என்றால் Mobile Transaction PIN ஆகும். இந்த பின் நம்பரானது, செயலி மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பயன்படுகிறது.
MPIN மற்றும் MTPIN இவை இரண்டுமே ஒரே நம்பராக இருக்க கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது நீங்கள் வெற்றிகரமாக Indoasis மொபைல் செயலியை Register செய்துவிட்டீர்கள். உங்களின் மொபைல் திரையில் Your Registration has been completed Successfully என்று தோன்றுவதை காண்பீர்கள்.
இப்பொழுது நீங்கள் மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
How to Login IndOASIS Mobile Banking
நீங்கள் ஒருமுறை IndOASIS Mobile Banking செயலியில் Registration செய்த பிறகு அதை Login செய்து பயன்படுத்தலாம். அதை எவ்வாறு Login செய்வது என்பதை பற்றி காண்போம்.
Step 1: உங்களின் மொபைலில் உள்ள IndOASIS செயலியை Open செய்யவும்.
Step 2: நீங்கள் ஏற்கனவே Registration செய்யும்போது Set செய்த 4 இலக்க MPIN Number யை Enter செய்க.
Step 3: இப்பொழுது உங்களின் மொபைல் பேங்கிங் செயலி Login ஆகிவிடும். இப்பொழுது Account Balance Check செய்தல், Transaction செய்தல், Mini Statement பார்த்தல், DTH மற்றும் Mobile Recharge செய்தல் போன்றவற்றை செய்யலாம்.
How to Enable Finger Print Login in Indoasis App
பொதுவாக Indoasis App யை Login செய்யும் போது 4 இலக்க MPIN Number யை பயன்படுத்தி தான் Open செய்வீர்கள். ஆனால் இன்னும் வசதியாக உங்களின் Finger Print யை வைத்து Login செய்யும் வசதியை இந்தியன் வங்கி வழங்குகிறது. அதை எப்படி Enable செய்து பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
Step 1: நீங்கள் Indoasis செயலியை Registration செய்த பிறகு 4 இலக்க MPIN யை கொடுத்து Login செய்யவும்.
Step 2: Login செய்த பிறகு கீழே உள்ள Settings என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 3: இதில் முதலாவதாக உள்ள Finger Print என்பதை ON செய்யவும்.
Step 4: இப்பொழுது உங்களின் கைரேகையை (Finger) வைக்கவும்.
Step 5: தற்போது நீங்கள் வெற்றிகரமாக கைரேகையை Activate செய்துவிட்டீர்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக Your Fingerprint login activation has been successfully என்ற செய்தி வ்ருவதை காண்பீர்கள்.
இப்பொழுது ஒவ்வொரு முறையும் Indoasis செயலியை திறக்கும்போது கைரேகையை வைத்து திறக்கலாம்.
இதையும் படியுங்கள்: |
Frequently Asked Questions (FAQ)
Indoasis செயலி என்றால் என்ன?
Indoasis செயலி என்பது இந்தியன் வங்கியால் வெளியிடப்பட்ட மொபைல் பேங்கிங் செயலியாகும்.
Indoasis செயலி பாதுகாப்பானதா?
ஆம் பாதுகாப்பானது. பயனர் தங்களின் நிதி பரிவர்த்தனைகளை எளிதாகவும், பாதுக்காப்பாக மேற்கொள்ளலாம். செயலியை PlayStore அல்லது App Store இல் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய கூடாது.
Indpay App செயல்பாட்டில் உள்ளதா?
செயல்பாட்டில் இல்லை. அதற்க்கு பதிலாக தான் Indoasis செயலியை அறிமுகம் செய்துள்ளது.
Finger Print Lock வசதி உள்ளதா?
ஆம் உள்ளது. Finger Print வசதியை Enable செய்வதன் மூலம் செயலியை கைரேகையை வைத்து திறக்கலாம்.
Registration முடித்து login செய்யும்போது login failed என்று வருகிறது..
இதை எப்படி சரி செய்வது?
சில சமயங்களில் technical பிரச்சனையால் அவ்வாறு வரலாம். நீங்கள் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் அல்லது மற்றொரு நாளில் முயற்சி செய்யுங்கள்