How to Link Aadhaar to Indian Bank Account Online
உங்களின் Indian Bank Account இல் Aadhaar Number யை Link செய்ய வேண்டுமா? ஆம் என்றால் அதற்கான வழிமுறையை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். நான் உங்களுக்கு வீட்டில் இருந்தவாறே எவ்வாறு ஆதார் எண்ணை, இந்தியன் வங்கிக்கணக்குடன் இணைப்பது என்பதை பற்றி விரிவாக சொல்லப்போகிறேன்.
நான் சொல்லப்போகும் இந்த ஆன்லைன் வழிமுறையின் மூலம் ஒருசில நிமிடங்களில் வங்கிக்கணக்கை ஆதாருடன் இணைக்க முடியும். ஏனெனில் இதற்கான Online வசதியை இந்தியன் வங்கி வழங்கியுள்ளது.
எனவே இதற்காக நீங்கள் வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.
வங்கிக்கணக்கை ஏன் ஆதாருடன் Link செய்ய வேண்டும்?
வங்கிக்கணக்கை ஆதாருடன் இணைப்பது மத்திய அரசால் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைகிறார்கள்.
ஏனெனில் அரசாங்கம் தகுதியுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. இதற்க்கு முன்பு மக்கள் இந்த சலுகைகளை பெறுவதற்கு அலுவலகங்களுக்கு சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர்.
ஆனால், தற்போது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் நேரடியாக மக்களுக்கு சென்று சேரும்.
இது எப்படி என்று கேட்கிறீர்களா?
நிச்சயமாக கூறுகிறேன். ஏனெனில் இதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
மக்கள் தங்களின் வங்கிக்கணக்குகளில் ஏதாவது ஒரு Bank Account இல் Aadhaar Number யை Link செய்ய வேண்டும்.
பிறகு அரசாங்கம் அளிக்கும் அனைத்து சலுகைகளும் Aadhaar Number மூலமாகவே அனுப்பப்படும். அப்படி ஆதார் எண்ணின் மூலமாக அனுப்பும்போது, அந்த ஆதார் எண் எந்த வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த கணக்கிற்கு பணமானது வரவு வைக்கப்படும்.
இவ்வாறு தான் பணமானது பயனாளரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
Aadhaar நம்பரை வேறொரு கணக்கிற்கு Link செய்ய முடியுமா?
நீங்கள் இதுவரை உங்களின் வங்கிக்கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை மற்றும் இப்பொழுது தான் இணைக்கப்போகிறீர்கள் என்றால், உங்களுக்கு எந்த சந்தேகமும் எழ வாய்ப்பில்லை.
ஆனால் சில நபர்கள் தன்னுடைய Aadhaar Number யை ஏற்கனவே ஒரு Bank Account இல் Link செய்திருப்பார்கள். அப்படி Link செய்யப்பட்ட வங்கிக்கணக்கை அவர் பயன்படுத்தாமல் இருக்கலாம் அல்லது செயலிழந்து இருக்கலாம்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் அவரால் அரசாங்க நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் இருக்கலாம்.
இப்பொழுது அந்த நபருக்கு, என்னுடைய ஆதார் எண்ணை வேறொரு வங்கிக்கணக்கில் இணைக்க முடியுமா என்ற சந்தேகம் வரலாம். இது ஒரு நியாயமான சந்தேகம் தான்.
இதற்கான விடை என்னவென்றால் நிச்சயமாக முடியும் என்பதாகும். அதாவது ஒரு நபர் ஏற்கனவே வங்கிக்கணக்கில் ஆதாரை இணைத்திருந்தாலும், அந்த நபர் நினைத்தால் வேறொரு வங்கிக்கணக்கிற்கு ஆதாரை லிங்க் செய்ய முடியும். அப்படி லிங்க் செய்துவிட்டால், அரசாங்க நிதி சலுகைகளை ஆதாருடன் இணைக்கப்பட்ட புதிய வங்கிக்கணக்கில் பெறுவார்.
Indian Bank கணக்கை Aadhaar உடன் Link செய்ய என்ன தேவை
ஆன்லைன் செயல்முறைக்கு எந்த ஆவணமும் தேவை இல்லை. உங்களின் Bank Account Number மற்றும் Aadhaar Number இவை இரண்டு எண்களும் இருந்தாலே போதுமானது ஆகும்.
மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களின் வங்கிக்கணக்கு மற்றும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சரிபார்ப்புக்காக OTP எண்ணை உள்ளிட வேண்டியதிருக்கும்.
How to Link Aadhaar to Indian Bank Account Online
நீங்கள் Indian Bank இல் கணக்கை வைத்திருப்பவராக இருந்தால், உங்களின் கணக்கில் Online மூலம் எளிதாக Aadhaar Number யை Link செய்ய முடியும்.
அதற்கான செயல்முறையை Step by Step ஆக கீழே சொல்கிறேன்.
Step 1: நீங்கள் முதலில் இந்தியன் வங்கி கணக்கு மற்றும் ஆதார் இணைப்பு இணையதளமான https://apps.indianbank.in/aadhaarseeding/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: உங்களின் Indian Bank Account நம்பரை Enter செய்யவும். பிறகு I Agree என்ற Check Box யை டிக் செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது உங்களின் இந்தியன் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Verify OTP என்ற பட்டனை அழுத்தவும்.
Step 4: உங்களின் Aadhaar எண்ணை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: இப்பொழுது உங்களின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Verify Aadhaar OTP என்பதை அழுத்தவும்.
Step 6: இந்த பக்கத்தில் உங்களின் ஆதார் அட்டையில் இருப்பதை போன்ற பெயர் இடம் பெற்றிருக்கும்.
அதற்க்கு கீழே, நீங்கள் ஏற்கனவே மற்ற வங்கியில் ஆதார் எண்ணை லிங்க் செய்துள்ளீர்களா என்று கேட்கும். ஆம் என்றால் Yes என்பதை தேர்வு செய்து அந்த வங்கியின் பெயரை தெரிவு செய்யவும்.
ஒருவேளை நீங்கள் இப்போது தான் முதல் முறையாக இணைக்கிறீர்கள் என்றால் No என்பதை தேர்வு செய்யுங்கள்.
நான் ஏற்கனவே India Post Payment Bank வங்கியில் Link செய்துள்ளதால் Yes என்பதை தேர்வு செய்துள்ளேன்.
பிறகு கடைசியாக உள்ள Seed Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.
Step 7: இப்பொழுது தோன்றும் ஒரு Pop Up திரையில் Aadhaar Seeding Initiated. This will be effected in 24 Houres. Status may be checked in same portal. என்ற செய்தி தோன்றுவதை காண்பீர்கள்.
தற்போது நீங்கள் வெற்றிகரமாக இந்தியன் வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை லிங்க் செய்துவிட்டீர்கள். இது அடுத்த 24 மணி நேரத்திற்கு இணைக்கப்படும். இதை ஆதார் இணையதளத்தில் சென்று Check Aadhaar / Bank Linking Status என்ற Option யை பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
சுருக்கம்
இந்த கட்டுரையில் இந்தியன் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை எவ்வாறு ஆன்லைன் மூலம் இணைப்பது என்பதை பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொண்டீர்கள். நீங்கள் ஏற்கனவே வேறொரு வங்கியில் இணைத்திருந்தாலும் அதை மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் இதை பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே Comment பிரிவில் பதிவிடவும்.
இதுபோன்ற பல பயனுள்ள கட்டுரைகளை வெளியிடும் போது, அதற்கான அறிவிப்புகளை பெற கீழே உள்ள பெல் பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள். அல்லது எங்களின் சமூக வலைத்தளங்களை பின்பற்றலாம்.