How to Lock / Unlock Online Transaction in Indian Bank
Indian Bank ஆனது உங்களின் Online Transaction களை Lock மற்றும் Unlock செய்யும் வசதியினை வழங்குகிறது. இது உங்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. இந்த வசதியினை உங்களுக்கு தேவைப்படும்போது Enable / Disable செய்துகொள்ளலாம்.
இன்றைய நவீன உலகில் அனைத்து வாடிக்கையாளர்களும் Mobile Banking மற்றும் Internet Banking வசதியினை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த வசதியின் மூலம் அனைத்து பண பரிவர்தனைகளையும் வீட்டில் இருந்தவாறே மேற்கொள்ளலாம்.
சில வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கில் உள்ள Account Balance யை தெரிந்து கொள்வதற்கு மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங் சேவையை பயன்படுத்தலாம்.
இன்னும் சிலர் கணக்கின் இருப்பு மற்றும் Account Statement ஆகிய இரண்டிற்காகவும் ஆன்லைன் சேவையை பயன்படுத்தலாம். அவர்களுக்கு Money transfer செய்ய விருப்பவில்லை என்றால், கணக்கின் பாதுகாப்புக்காக Online Transaction களை முடக்கி வைக்கலாம்.
இப்படி முடக்குவதால் என்ன பயன் என்று யோசிக்கிறீர்களா?
ஆன்லைன் பரிவர்த்தனைகளை முடக்கினால், நீங்கள் எந்த வங்கிக்கணக்கிற்கும் பணத்தை Transfer செய்ய முடியாது. மேலும் Mobile Recharge, Bill Payment போன்ற எதையும் செய்ய முடியாது. ஒருவேளை நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய விரும்பினால், அதன் மீது உள்ள தடையை நீக்கிவிட்டு மேற்கொள்ளலாம். அதாவது Unlock செய்தபிறகு பரிவர்த்தனைகளை தொடரலாம்.
Indian Bank இன் Indoasis என்ற மொபைல் செயலியின் மூலம் உங்களின் அனைத்து ஆன்லைன் பரிவர்தனைகளையும் முடக்கவும் மற்றும் செயல்படுத்தவும் முடியும்.
இதற்கான செயல்முறையை பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கப்போகிறேன்.
Table of Contents
How to Lock / Unlock Indian Bank Online Transaction
பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை முடக்கலாம் மற்றும் செயல்படுத்தலாம்.
1. How to Unlock Online Transaction
Step 1: முதலில் நீங்கள் Indoasis என்ற Indian Bank மொபைல் பேங்கிங் செயலியை Open செய்ய வேண்டும்.
Step 2: Value Added Services என்ற Option யை தேர்வு செய்க.
Step 3: Transaction Lock / Unlock என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இதில் Internet Banking மற்றும் Mobile Banking என்ற இரண்டு தேர்வுகள் இருக்கும். நீங்கள் எதனுடைய Transaction களை Lock செய்ய விரும்புகிறீர்களோ அதில் Lock என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
Step 5: இப்பொழுது உங்களின் MTPIN என்ற Mobile Transaction PIN நம்பரை Enter செய்து Submit செய்யவும்.
Step 6: உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.
Step 7: இப்பொழுது Locked Transactions Successfully என்ற செய்தி தோன்றுவதை காண்பீர்கள்.
2. How to Unlock Online Transaction
Step 1: Indoasis செயலியை Open செய்யவும்.
Step 2: ஏற்கனவே மேலே சொல்லப்பட்ட அதே முறையில் செல்லவும்.
Step 3: தற்போது முடக்கப்பட்ட பரிவர்த்தனை சிவப்பு நிறத்தில் தோன்றும். அதில் Unlock என்பதின் மீது கிளிக் செய்யவும்.
Step 4: உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP Number யை Enter செய்து Submit செய்யவும்.
Step 5: தற்போது Unlocked Transactions Successfully என்ற செய்தி தோன்றும்.
இந்த கட்டுரையில் இந்தியன் பேங்க் மொபைல் பேங்கிங் மூலமாக பரிவர்த்தனைகளை எவ்வாறு முடக்குவது மற்றும் செயல்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த வசதியானது பரிவர்தனைகளுக்கான கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். உங்களுக்கு தேவைப்பட்டால் இதை பயன்படுத்தி பயன்பெறலாம்.