Indian Bank

Minimum Balance in Indian Bank Savings Account

பெரும்பாலான வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வலியுறுத்துகின்றன. அவ்வாறு நீங்கள் பராமரிக்கவில்லை என்றால், அதற்கான அபராதம் வசூலிக்கப்படும். Indian Bank ம் Minimum Balance யை Maintain செய்யாத வங்கி வாடிக்கையாளர்களுக்கு, அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன.

சில வாடிக்கையாளர்களுக்கு Indian Bank இல் எவ்வளவு தொகை பராமரிக்க வேண்டும் என்று தெரிவதில்லை. இதனால் அவர்கள் தேவையில்லாமல் அபராதத்தை செலுத்த நேரிடுகிறது.

உங்களின் சேமிப்பு கணக்கில் பராமரிக்க வேண்டிய தொகையை நீங்கள் தெரிந்துகொண்டு பராமரித்தால், அபாரதத்திலிருந்து தப்பிக்கலாம்.

பொதுவாக Minimum Balance ஆனது, நீங்கள் சேமிப்பு கணக்கை வைத்திருக்கும் பகுதியை பொறுத்து மாறுபடும். அதாவது, மெட்ரோ நகரங்களில் அதிகமாகவும், கிராம புறங்களில் உள்ள வங்கிகளில் குறைந்த தொகையையும் பராமரிக்க வேண்டும்.

Minimum Balance of Indian Bank Savings Account 

வங்கிகள் இருக்கும் பகுதிகளை (Area) பொறுத்து குறைந்தபட்ச தொகையை எவ்வளவு பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி காணலாம்.

Read  How to Register Complaint in Indian Bank Online Tamil

Rural / Semi Urban 

கிராமப்புற (Rural) மற்றும் அரை நகர்ப்புறங்களில் (Semi Urban) உள்ள வங்கிக்கிளைகளில் Rs.500 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக பராமரிக்க வேண்டும்.

ஒருவேளை உங்களின் வங்கிக்கணக்கிற்கு நீங்கள் Cheque Book யை பெற்றிருந்தால் ஒவ்வொரு மாதமும் Rs.1000 ரூபாயை Minimum Balance ஆக Maintain செய்ய வேண்டும்.

Urban / Metro 

நகர (Urban) மற்றும் பெருநகரங்களில் (Metro) கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் Indian Bank Savings Account இல் Rs.1000 ரூபாயை பராமரிக்க வேண்டும்.

நீங்கள் Cheque Book வசதியை பயன்படுத்துவராக இருந்தால், உங்களின் வங்கிக்கணக்கில் Rs.2500 ரூபாயை பராமரிக்க வேண்டும்.

How to Open Indian Bank Savings Account

Indian Bank இல் நீங்கள் சேமிப்பு கணக்கை தொடங்க விரும்பினால், அதற்க்கு இரண்டு வழிகள் உள்ளன. 

Online Way 

முதலாவதாக Online மூலம் சேமிப்பு கணக்கை Open செய்யலாம். ஆன்லைனில் கணக்கை திறப்பதற்கு Aadhaar Card, Pan Card, மின்னஞ்சல் (Email) மற்றும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் போன்றவை தேவைப்படும்.

Read  How to Change Indian Bank ATM Withdrawal Limit in Online

இணையம் வழியாக கணக்கை திறந்த பிறகு உடனடியாக Account Number மற்றும் CIF Number Generate ஆகிவிடும். மேலும் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு ஆவணம் அனுப்பப்படும். அதை வங்கியில் எடுத்துச்சென்று KYC Verification செய்தால், உங்களின் கணக்கு முழுமை அடைந்துவிடும். பிறகு அப்பொழுதே உங்களின் Passbook யையும் வழங்கிவிடுவார்கள்.

Offline Way 

இந்த வகையான முறையில் நீங்கள் நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்று கணக்கை திறக்கலாம்.

நீங்கள் வங்கியில் Account யை Open செய்யும் படிவத்தை கேட்டு வாங்க வேண்டும். பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் நிரப்பி கொடுக்க வேண்டும். படிவத்துடன் உங்களின் Aadhaar Card மற்றும் Pan Card நகல்களை இணைத்து வழங்க வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்களையும் உடன் எடுத்துச்செல்ல வேண்டும்.

ஆனால் இந்த முறையில் கணக்கை திறக்கும்போது, ஒரு சில நாட்கள் ஆகலாம். எனவே உங்களின் தேவையை கருத்தில் கொண்டு ஆன்லைன் அல்லது ஆப்லைனில் சேமிப்பு கணக்கை திறக்கலாம்.

Read  How to Request Cheque Book in Indian Bank - Easy Steps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole