How to Register Complaint in Indian Bank Online Tamil
Indian Bank இன் சேவைகளில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அதை பற்றி புகார் அளிக்கலாம். இவ்வாறு Complaint யை Register செய்வதற்கு வங்கிக்கு போகவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தவாறே Online மூலம் புகாரை பதிவு செய்யலாம். அதை பற்றிய முழு தகவல்களையும் இந்த இடுகையில் காணலாம்.
Indian Bank ஆனது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கியில் 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் பாராட்டும் வகையில் சிறந்த சேவைகளை இந்தியன் வங்கி வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக Internet Banking, Indoasis செயலி மூலம் மொபைல் பேங்கிங் போன்ற சேவைகளை வழங்கியுள்ளது.
இருப்பினும் சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் வங்கிசேவைகளில் சில சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது வங்கிசேவைகளில் ஏற்படும் குறைபாடு மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறுதல் போன்றவற்றால் சிரமங்கள் ஏற்படலாம்.
அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அதை பற்றி வங்கியில் புகார்களை எழுப்பலாம். இந்த புகார்கள் எதிர்கால பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வுகளை கொண்டு வருகிறது. இதன் மூலம் வங்கிகள் இன்னும் நன்றாக செயல்பட முடியும்.
நீங்கள் ஒரு Indian Bank வாடிக்கையாளராக இருந்தால், அதில் ஒரு புகாரை எவ்வாறு Register செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகும்.
இந்தியன் வங்கியில் புகார் அளிக்கக்கூடிய பல்வேறு வழிமுறைகளை பற்றி நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
புகாரை அளிப்பதற்கு நீங்கள் நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆன்லைன் மூலம் புகார் அளிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை நான் உங்களுக்கு விளக்குவேன்.
இந்தியன் வங்கி புகார் அளிப்பதை பற்றிய சுருக்கம்:
Name of Bank | Indian Bank |
Service Category | Complaint |
Service Mode | Online & Offline |
Complaint Website | https://www.indianbank.in |
Toll Free Number | 1800 425 00000 |
Table of Contents
Complaint யை Register செய்வதற்கு முன்பு நினைவுகொள்ள வேண்டியவை
நீங்கள் புகார் அளிப்பதற்கு முன்பாக சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- நீங்கள் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு அது Under Progress இல் இருந்தால், நீங்கள் மீண்டும் புகார் அளிக்க வேண்டாம். அவ்வாறு மீண்டும் புகார் அளித்தால் உங்களுக்கு தீர்வு கிடைப்பதால் தாமதம் ஏற்படலாம். ஏனெனில் உங்களின் புகார் ஏற்கனவே தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மீண்டும் புகார் அளிக்கும்போது அது இடையூறை ஏற்படுத்தும்.
- வங்கியின் கொள்கைப்படி, உங்களின் புகார் அதிகபட்சமாக 21 நாட்களுக்குள் தீர்க்கப்படும் அல்லது பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
- ATM Transaction தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால், நீங்கள் Transaction செய்த நாளில் இருந்து 5 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலான பரிவர்த்தனை தோல்விகள் (Transaction failed) அடுத்த 5 வேலை நாட்களுக்குள் மீண்டும் வரவு வைக்கப்படும். அப்படி 5 நாட்களுக்குள் வரவு வைக்காவிட்டால் இந்த Portal இல் புகார் அளிக்கலாம்.
- POS/ UPI / Internet Banking பரிவர்த்தனை தோல்விகள் தொடர்பான புகார்கள் இருந்தால், 1 நாள் வரை காத்திருக்கவும். ஏனெனில் பரிவர்த்தனை தோல்வி அடைந்த 1 நாளில் மீண்டும் வரவு வைக்கப்படும். அவ்வாறு வரவு வைக்காவிட்டால் இந்த போர்ட்டலில் புகார் அளிக்கலாம்.
இப்பொழுது இந்தியன் வங்கியில் புகாரை அளிக்கக்கூடிய வழிகளை ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்.
Method 1: How to Register Complaint in Indian Bank Official Site Online
Indian Bank ஆனது அதன் Official Website இல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. அவற்றில் வாடிக்கையாளர் Online மூலம் புகார் அளிப்பது முக்கியமானதாகும்.
Indian Bank Online Portal இல் புகாரை அளிப்பதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
Step 1: இந்தியன் வங்கியின் இணையதளமான https://www.indianbank.in என்ற தளத்திற்கு செல்லவும்.
Step 2: அதில் Contact > Customer Supports > Customer Complaints என்றவாறு தேர்வு செய்யவும்.
Step 3: இப்பொழுது ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் Customer Grievance Redressal System என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 4: Continue என்ற பட்டனை அழுத்தவும்.
Step 5: தற்போது புகாரை பதிவு செய்வதற்கான ஒரு பக்கம் திறக்கவும். இதில் Customer Type என்ற இடத்தில் நீங்கள் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் Indian Bank Customer என்று தேர்வு செய்யவும்.
பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். * என்று இருக்கும் இடத்தில் கட்டாயம் நிரப்ப வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.
Step 6: கடைசியாக Submit என்பதை கிளிக் செய்தவுடன், உங்களுக்கு ஒரு Complaint Ticket Number கிடைக்கும். அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த Ticket Number ஆனது உங்களின் Complaint Status யை அறிந்து கொள்ள உதவுகிறது.
Method 2: Register Complaint Through Indian Bank Helpline Number
நீங்கள் இந்தியன் வங்கியின் Tollfree Helpline Number யை அழைத்தும் புகாரை பதிவு செய்ய முடியும். ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய உங்களுக்கு நேரமில்லை என்று நினைத்தால், இந்த முறை எளிதானது ஆகும்.
Customer Care அதிகாரியுடன் தொடர்பு கொண்டு நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனையை கூறுவதன் மூலமும் சிக்கலை தீர்க்கலாம். நீங்கள் கூறும் பிரச்சனையின் வகையை அறிந்துகொண்டு அந்த அதிகாரியே புகாரை பதிவு செய்துகொள்வார்.
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய Customer Care Number 1800 425 00 000 அல்லது 1800 425 4422 ஆகும்.
Method 3: Register Complaint Through Indoasis Mobile App
Indoasis Mobile App என்பது இந்தியன் வங்கியின் Mobile Banking செயலியாகும். இந்த செயலியின் மூலமும் நீங்கள் புகாரை பதிவு செய்ய முடியும். அதற்கான படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: |
Step 1: உங்களின் MPIN யை உள்ளிட்டு Indoasis செயலியை திறக்கவும்.
Step 2: வலது மேல் புறத்தில் உள்ள மூன்று கோடுகளை அழுத்தவும்.
Step 3: Raise / Track Complaints என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 4: இப்பொழுது திறக்கும் பக்கத்தில் உங்களின் புகாரை பதிவு செய்யலாம்.
மேலே கூறிய மூன்று வழிகளில் ஏதாவது ஒரு வழிமுறையை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம்.
மேலும் படிக்க – How to Change MPIN and MTPIN in Indian Bank: Indoasis App
முடிவுரை
ஒரு வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கினாலும், சில நேரங்களில் அதில் சிரமங்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இதை வங்கிக்கு புகாராக தெரிவிக்கும் போது வருங்காலத்தில் இதற்க்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு வழி வகுக்கலாம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை வெளியிடும்போது அதை அறிவிப்புகளாக பெறுவதற்கு கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும்.