How to Request Cheque Book in Indian Bank – Easy Steps
நீங்கள் Indian Bank இல் Cheque Book யை பெறுவதற்கு விரும்புகிறீர்களா? உங்களின் கேள்வி இது தான் என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். உங்களின் கேள்விக்கான முழுமையான தகவல்களை நான் உங்களுக்கு வழங்கப்போகிறேன்.
காசோலை புத்தகம் (Cheque Book) என்றால் என்ன?
நீங்கள் வங்கி பரிவர்தனைகளில் காசோலை புத்தகம் என்ற பெயரை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அனைத்து வங்கிப்பரிவர்தனைகளிலும் காசோலை என்பது முக்கிய பங்காற்றுகிறது.
காசோலை என்பது உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து, மற்றொரு நபருக்கு பணம் வழங்கக்கோரி கோரிக்கை விடுக்கும் காகிதத்தாள்கள் ஆகும்.
நீங்கள் ஒருவரின் பெயரில் காசோலையை எழுதினால் அந்த காசோலையில் நிரப்பப்படும் பணமானது, வங்கியின் மூலம் அந்த நபருக்கு வழங்கப்படும். காசோலையில் நிரப்பிய அதே அளவு பணமானது உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. அந்த சேவைகளில் காசோலை புத்தகமும் ஒன்றாகும். ஒரு வங்கியில் கணக்கை திறக்கும்போது கூடவே Cheque Book யையும் சேர்த்து வழங்குகிறார்கள். அந்த காசோலை புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காசோலை இலைகள் (Cheque Leaf) இருக்கும்.
நீங்கள் Indian Bank இல் Bank Account யை திறக்கும்போது, உங்களுக்கு Cheque Book யை வழங்கவில்லை என்றால் காசோலை புத்தகத்திற்கு கோரிக்கை (Request) விடுக்கலாம். இந்த கட்டுரையில் நீங்கள் காசோலை புத்தகத்திற்கு கோரிக்கை விடுப்பதற்கான செயல்முறைகளை காணலாம்.
இதற்கான செயல்முறை மிகவும் எளிதானதாகும். நீங்கள் காசோலை புத்தகத்தை கோருவதற்கு 3 வழிகளை சொல்லப்போகிறேன். அவற்றில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
How to Request Cheque Book in Indian Bank
காசோலை புத்தகத்கிற்கு விண்ணப்பிக்கும் 3 முறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. Mobile Banking மூலம் கோரிக்கை விடுக்கலாம்.
2. Internet Banking மூலம் கோரிக்கை விடுக்கலாம்.
3. Home Branch இல் விண்ணப்பிக்கலாம்.
1. Request Cheque Book Through Mobile Banking
Indian Bank Mobile Banking மூலம் காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிற்கும் செயல்முறையை பார்ப்போம்.
Step 1: Indoasis என்ற Mobile Banking செயலியை திறக்கவும்.
Step 2: Value Added Services என்பதை தேர்வு செய்யவும்.
Step 3: Cheque Services என்பதை கிளிக் செய்க.
Step 4: இதில் உங்களின் Account Number, காசோலை இலைகளின் எண்ணிக்கை மற்றும் Address போன்றவற்றை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும்.
Step 5: அடுத்து வரும் படிகளை முடித்தவுடன் உங்களின் கோரிக்கை வெற்றிகரமாக அனுப்பப்படும்.
2. Request Cheque Book Through Indian Bank Internet Banking
நீங்கள் Indian Bank இன் Internet Banking சேவையை பயன்படுத்துபவராக இருந்தால் இதன் மூலமும் கோரிக்கை விடுக்கலாம்.
Step 1: உங்களின் இணைய வங்கிசேவையினை Login செய்யவும்.
Step 2: Value Added Services என்பதை அழுத்தவும்.
Step 3: பிறகு Cheque > Cheque Book Request என்பதை கிளிக் செய்க.
Step 4: அடுத்த பக்கத்தில் Account Number யை தேர்வு செய்து Transaction Password யை Enter செய்யவும். பிறகு Accept என்பதை அழுத்தவும்.
Step 5: உங்களின் பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு OTP Number வரும். அதை Enter செய்து Confirm செய்யவும். இப்பொழுது உங்களின் கோரிக்கை வெற்றிகரமாக அனுப்பட்டுவிடும்.
3. Request for Cheque book Through Indian Bank Home Branch
நீங்கள் இந்தியன் வங்கியின் Mobile Banking மற்றும் Internet Banking ஆகிய இரண்டையும் பயன்படுத்தவில்லை என்றால், நேரடியாக உங்களின் வங்கிக்கிளைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
வங்கியில் சென்று விண்ணப்பித்தல் என்பது கடினமான காரியம் அல்ல. நீங்கள் Customer Request Form யை நிரப்பி கொடுத்தாலே போதுமானது ஆகும். வங்கிக்கிளைக்கு சென்று விண்ணப்பிக்கும் செயல்முறையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.
Step 1: நீங்கள் உங்களின் வங்கிக்கிளைக்கு சென்று Customer Request Form யை கேட்டு பெறுங்கள்.
Step 2: அந்த படிவத்தில் உங்களின் பெயர், வங்கிக்கிளை, வங்கிக்கணக்கு எண் போன்றவற்றை நிரப்பவும்.
Step 3: அதில் Cheque Book Request என்பதை டிக் செய்யவும். நீங்கள் இப்போது தான் முதல் முறையாக காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், முதலாவதாக உள்ள Not Received, New Account என்பதை டிக் செய்யவும்.
Step 4: படிவத்தின் பின்புறத்தில் உங்களின் Signature, Name மற்றும் Address ஆகியவற்றை நிரப்ப வேண்டும். படிவத்தை நிரப்பிய பிறகு அதனுடன் ஆதார் அட்டையின் நகல் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும்.
Step 5: இப்பொழுது அதை வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் படிவத்தை சமர்ப்பித்த 10 நாட்களுக்குள் காசோலை புத்தகம் உங்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்.
நீங்கள் காசோலை புத்தகத்தை மொபைல் பேங்கிங் அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் விண்ணப்பிக்கும் போது, சில நேரங்களில் முடியாமல் போகலாம். அவர்கள் நேரடியாக இந்தியன் வங்கிக்கிளைக்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த கட்டுரையில் கூறிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய சந்தேகங்களுக்கு கீழே பதிவிடவும்.