How to Reset Indian Bank Transaction Password – Just 5 Minutes
Indian Bank இன் Transaction Password யை நீங்கள் மறந்துவிட்டால், அதை எப்படி Online மூலமாக Reset செய்வது என்பதை பற்றிய செயல்முறையை உங்களுக்கு விளக்குகிறேன்.
முதலில் Indian Bank இல் Transaction Password என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
நீங்கள் Indian Bank இன் Internet Banking சேவையை பயன்படுத்தும் போது இரண்டுவிதமான கடவுச்சொற்களை பயன்படுத்துவீர்கள். அவை Login Password மற்றும் Transaction Password ஆகும்.
Login Password என்பது உங்களின் இணைய வங்கிசேவையில் உள் நுழைய பயன்படும் கடவுச்சொல் ஆகும். அதாவது, நீங்கள் இணைய வங்கி சேவையை Login செய்யும்போது Username மற்றும் password யை உள்ளிடுவீர்கள். இதுவே லாகின் கடவுச்சொல் ஆகும்.
Transaction Password என்பது நீங்கள் இணைய வங்கிசேவையில் உள் நுழைந்தயுடன், ஏதாவது பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்க்கு இந்த பரிமாற்ற கடவுச்சொல் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, பண பரிமாற்றம், ஆன்லைனில் ATM Pin நம்பரை மாற்றுதல் போன்றவற்றிக்கு பரிமாற்ற கடவுச்சொல் தேவைப்படும்.
இப்பொழுது இரண்டு கடவுச்சொற்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெரிந்துகொண்டீர்கள். அடுத்தது, பரிமாற்ற கடவுச்சொல்லை எப்படி Reset செய்வது என்பதை பற்றி காண்போம்.
Table of Contents
How to Reset Indian Bank Transaction Password Online
நீங்கள் இரண்டு வழிகளில் Indian Bank Net Banking Transaction Password யை Reset செய்யலாம். முதலாவதாக உங்களின் ATM Card மற்றும் ATM PIN நம்பரை கொண்டு மீட்டெடுக்கலாம். இரண்டாவதாக Secret Question க்கு பதில் அளிப்பதன் மூலமும் மீட்டெடுக்கலாம்.
இதில் மிகவும் எளிதான வழிமுறை என்னவென்றால் Indian Bank Debit Card யை கொண்டு மீட்டெடுப்பதாகும். ஏனெனில் நீங்கள் Secret Question யை அமைக்கும்போது அதற்க்கு என்ன பதில் அளித்தீர்கள் என்று மறந்திருக்கலாம். எனவே ATM அட்டை மூலம் மீட்டெடுப்பதே எளிதாகும்.
சரி, ATM அட்டையின் மூலம் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கான செயல்முறையை காண்போம்.
Step 1: உங்களின் Indian Bank Internet Banking யை Login செய்யவும்.
Step 2: Login செய்த பிறகு Option என்பதை கிளிக் செய்க.
Step 3: Forgot Transaction Password என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இதில் ஏற்கனவே ATM Card என்று தேர்வாகி இருக்கும். உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், ATM Card Details போன்றவற்றை Enter செய்து Submit செய்யவும்.
Step 5: உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Confirm என்பதை அழுத்துக.
Step 6: இப்பொழுது உங்களின் புதிய Transaction Password யை Type செய்ய வேண்டும். பிறகு Submit என்பதை கிளிக் செய்யவும்.
Step 7: இப்போது உங்களின் பரிமாற்ற கடவுச்சொல் வெற்றிகரமாக Change செய்யப்பட்டிருக்கும்.
How to Change Indian Bank Transaction Password
நீங்கள் சில நேரங்களில் உங்களின் பரிவர்த்தனை கடவுச்சொல்லை Change செய்ய நினைக்கலாம். அப்படி மாற்ற நினைக்கும்போது உங்களுக்கு ஏற்கனவே பரிவர்த்தனை கடவுச்சொல் தெரிந்திருந்தால், நீங்கள் எளிதாக கடவுச்சொல்லை மாற்றலாம்.
Step 1: உங்களின் இணையவங்கி சேவையினை Login செய்து Option என்பதை அழுத்தவும்.
Step 2: Change Transaction Password என்பதை தேர்வு செய்யவும்.
Step 3: உங்களின் தற்போதைய பரிவர்த்தனை கடவுச்சொல் மற்றும் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு Submit செய்யவும். இப்பொழுது வெற்றிகரமாக பரிவர்த்தனை கடவுச்சொல் மாற்றப்பட்டுவிடும்.
இன்று இந்தியன் வங்கியில் பரிவர்த்தனை கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டெடுப்பது மற்றும் மாற்றுவது என்பதை பற்றி அறிந்துகொண்டோம். நீங்கள் மேலும் வங்கிகளை பற்றிய பல தகவல்களை அறிய எங்களின் இணையதளத்திற்கு வருகை தாருங்கள்.