Types of Indian Bank Savings Account: Full Details – Tamil
நீங்கள் Indian Bank இல் ஒரு சேமிப்பு கணக்கை தொடங்க விரும்பினால், அதற்க்கு பல்வேறு தேர்வுகளை இந்தியன் வங்கி வழங்குகிறது. ஒவ்வொரு சேமிப்பு கணக்கும் சிறந்து விளங்குகிறது. வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப வழங்கும் Savings Account Types பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஏனெனில் அப்போது தான் உங்களுக்கான சேமிப்பு கணக்கை தேர்வு செய்ய உங்களுக்கு வசதியாக இருக்கும்.
இப்பொழுது இந்தியன் வங்கி வழங்கும் பல்வேறு விதமான சேமிப்பு கணக்குகளின் Interest Rate, Minimum Balance, ATM Card Facility மற்றும் Cash Withdrawal Limits போன்றவற்றின் விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
Table of Contents
Types of Indian Bank Savings Account
1. Savings Bank
Eligibility: தனிநபர் (Individual) அல்லது Joint Account ஆக Open செய்யலாம். படிப்பறிவு இல்லாத மற்றும் பார்வை இழந்த நபர்கள் இந்த வகையான சேமிப்புக்கணக்கை திறக்கலாம்.
Interest Rates:
Features (முக்கிய அம்சங்கள்): Cheque Book Facility, Debit Card/ ATM Card, Nomination Facility.
மெட்ரோ பகுதிகளில் மற்ற வங்கிகளின் ATM Center களின் மூலம் 3 இலவச பரிவதர்த்தனைகளை மேற்கொள்ளலாம். மெட்ரோ அல்லாத பகுதிகளில் 5 இலவச ATM பரிவர்த்தனைகளை செய்யலாம்.
சேமிப்பு கணக்கிற்கான வட்டியானது ஒவ்வொரு காலாண்டின் இறுதியில் செலுத்தப்படும்.
Minimum Amount: கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் Cheque Book வாங்காத கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொகையாக Rs.500 யை பராமரிக்க வேண்டும். ஒருவேளை Cheque Book இருந்தால் Rs.1000 ரூபாயை பராமரிக்க வேண்டும்.
மாணவர்கள் உதவித்தொகையை (scholarship) பெறுவதற்காக கணக்கை திறத்தால், எந்த தொகையையும் பராமரிக்க தேவையில்லை.
2. IB Smart Kid
Eligibility: 18 வயதிற்கு கீழே இருக்கக்கூடிய அனைத்து குழந்தைகளும் IB Smart Kid Account யை திறக்கலாம். இதில் குழந்தைகள் தனி நபராக மட்டும் தான் கணக்கை திறக்க முடியும். தாய் அல்லது தந்தை அல்லது பாதுகாவலர் இவற்றில் யாராவது ஒருவர் குழந்தையின் பெயரில் திறக்கலாம்.
Cheque Facility: காசோலை வசதி உண்டு
Minimum Balance: காசோலை புத்தகத்தை பெறாத சேமிப்புக்கணக்கில் Rs.100 ரூபாயை குறைந்தபட்ச இருப்பு தொகையாக பராமரிக்க வேண்டும்.
காசோலை புத்தகத்தை பெற்றிருக்கும் சேமிப்பு கணக்கில் Rs.250 யை குறைந்தபட்ச இருப்பாக பராமரிக்க வேண்டும்.
ATM Card: 10 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ATM அட்டை வழங்கும் வசதி உள்ளது.
Normal SB: 18 வயதை நிறைவு செய்த பிறகு Normal Savings Account ஆக Convert செய்ய வேண்டும்.
3. IB For Women – Mahila Shakti (பெண் சக்தி)
Eligibility: 18 வயதை பூர்த்தி அடைந்த பெண்கள் இந்த வகையான கணக்கை திறக்கலாம்.
Minimum Balance: மாத சராசரி தொகையாக Rs.1000 ரூபாயை பராமரிக்க வேண்டும்.
Facility: AMC உடன் Rupay Platinum Debit Card இலவசம், ஓவர் டிராஃப்ட் வசதி உள்ளது.
4. Small Account
Eligibility: தனிநபர்கள் இந்த வகையான கணக்குகளை திறக்க முடியும். சர்வைவர் போன்ற செயல்பாட்டு விதிமுறைகளுடன் Joint Account யை திறப்பதும் அனுமதிக்கப்படுகிறது.
KYC: Small Account யை திறக்க விரும்பும் நபர், மாநில அரசாங்கத்தின் அதிகாரியால் கையொப்பம் இடைப்பட்ட NREGA அட்டையை பயன்படுத்தலாம். இருப்பினும் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பம் இடுவதின் மூலமாகவும் திறக்கலாம்.
Minimum Balance & Charges For AMB: குறைந்தபட்ச தொகையை பராமரிக்க தேவையில்லை. இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
Transactions: கணக்கில் உள்ள பணத்தை பணம் எடுக்கும் படிவத்தின் மூலமே Withdrawal செய்ய முடியும். இதற்க்கு ATM அட்டை வழங்கப்படாது.
வங்கிக்கணக்கின் இருப்பானது அதிகபட்சமாக Rs.50000 ரூபாயை தாண்டக்கூடாது.
மிகவும் குறைந்த வருமானம் உள்ள நபர்கள் இந்த கணக்கை திறக்கலாம்.
5. IB DIGI – Online SB Account
Eligibility: இந்தியாவில் வசிக்கும் 18 வயதை நிறைவு செய்த எந்தஒரு தனிநபருக்கு Online SB Account யை Open செய்யலாம்.
இதில் Joint Account யை தொடங்க முடியாது. இந்த வசதியை ஸ்மார்ட் மொபைல் போன் அல்லது இணையதளம் மூலம் பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர் ஆன்லைன் மூலம் கணக்கை திறக்க Aadhaar Number, PAN Card, Mobile Number மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொண்டிருக்க வேண்டும்.
ATM Card Facility: Rupay Classic Debit Card வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
Maximum Withdrawal Limit: ஒரு நாளைக்கு அதிகபட்சமாக Rs .10,000 ரூபாய் வரை Withdrawal செய்யலாம்.
Transactions: ஒரு நிதியாண்டிற்கு அனைத்து வரவுகளின் (Credits) மொத்த தொகை Rs.2 லட்சத்திற்கு அதிகமாக இருக்க கூடாது.
Normal Account: வாடிக்கையாளர் Online மூலம் கணக்கை திறந்த பிறகு, ஒரு வருடத்திற்குள் வங்கிக்கு சென்று KYC Verification செய்ய வேண்டும். மேலும் அவ்வாறு KYC சமர்ப்பிக்கும் போது சேமிப்பு கணக்கின் வகையையும் தேர்வு செய்ய வேண்டும்.
Indian Bank Savings Account யை Open செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
நீங்கள் வங்கியில் திறக்கும் அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கும் KYC Verification செய்ய வேண்டும். அதற்க்கு தேவையான Documents பின்வருமாறு:
- Aadhaar Card
- PAN Card
மேற்கண்ட ஆவணங்களின் அசல் மற்றும் நகல் ஆகிய இரண்டையும் எடுத்துச்செல்ல வேண்டும். மேலும் உங்களின் பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்களையும் கொண்டு போக வேண்டும்.
மேலே கூறிய Indian Bank Savings Account Types பற்றி தகவல்கள், உங்களுக்கு சேமிப்பு கணக்கை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.