How to View Indian Bank Passbook in Online: mPassbook
Indian Bank இல் நீங்கள் புதிய Savings Account யை திறக்கும் போது Passbook யையும் வழங்குவார்கள். இந்த பாஸ்புக்கில் உங்களின் பரிவர்தனைகளின் விவரங்கள் சுருக்கமாக Print செய்யப்பட்டிருக்கும். mPassbook யை பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? இல்லை என்றால் கவலை வேண்டாம். mPassbook என்றால் என்ன மற்றும் அதை Online மூலம் எப்படி பயன்படுத்துவது போன்றவற்றை பற்றி இந்த கட்டுரையில் சொல்கிறேன்.
முதலில் mPassbook என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.
mPassbook என்பது, வங்கி வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன் வாயிலாக தங்களின் பாஸ்புக்கை டிஜிட்டல் வடிவத்தில் பார்க்கும் Mobile Passbook ஆகும்.
உங்களின் பண பரிவர்த்தனைகளின் வரலாற்றை அச்சிடுவதற்கு நீங்கள் வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்த மொபைல் பாஸ்புக்கின் மூலமாகவே நீங்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
வாடிக்கையாளர் ஒரு பரிவர்த்தனையை செய்த உடனே தானாகவே mPassbook இல் Print ஆகிவிடும். இவ்வாறு நீங்கள் எத்தனை பரிவர்த்தனைகள் செய்தாலும், Indian Bank mPassbook இல் தானாகவே Print செய்துகொள்ளும்.
Indian Bank இல் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு வாடிக்கையாளரும் இந்த Digital Passbook யை பயன்படுத்த இயலும்.
இதற்க்கு நீங்கள் Indian Bank Mobile Banking செயலியை Download செய்து Register செய்தாலே போதுமானது ஆகும்.
How to View Your Indian Bank Passbook on Mobile Phone – mPassbook
நீங்கள் இன்னமும் இந்தியன் வங்கி மொபைல் பேங்கிங்கில் பதிவு செய்யவில்லை என்றால் Indoasis App யை பதிவிறக்கம் செய்து Register செய்யவும்.
Register செய்த பிறகு பின்வரும் செயல்முறையை பயன்படுத்தி உங்களின் mPassbook யை பார்க்கலாம்.
Step 1: உங்களின் Indian Bank Mobile Banking செயலியை திறந்து Login செய்யவும்.
Step 2: இப்பொழுது Indoasis செயலியின் Dashboard திறக்கும். அதில் M-PASSBOOK என்ற Option யை கிளிக் செய்க.
Step 3: தற்போது ஒரு காலியான பாஸ்புக் பக்கம் திறக்கும். அதில் உங்களின் Account Number யை தேர்வு செய்ய வேண்டும்.
Step 4: View என்பதை கிளிக் செய்க.
Step 5: இப்போது Load ஆகி உங்களின் வங்கி கணக்கு எண்ணிற்கான mPassbook Open ஆகும். நீங்கள் வைத்திருக்கும் Physical பாஸ்புக்கில் உள்ள அனைத்து தகவல்களும் இந்த மொபைல் பாஸ்புக்கிலும் இருக்கும். இதை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் திறந்து பார்க்கலாம்.
மேலும் இதில் சில கூடுதல் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அது என்னவெனில் இந்த மொபைல் பாஸ்புக்கை நீங்கள் Download செய்யவும் முடியும். அல்லது உங்களின் மின்னஞ்சல் (Email) முகவரிக்கு அனுப்பலாம். ஆனால் பாஸ்புக்கை மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுமென்றால், உங்களின் வங்கிக்கணக்கில் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்திருக்க வேண்டும்.
கடைசியாக உங்களுக்கு சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வைத்திருக்கும் Physical பாஸ்புக்கில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கட்டாயம் Enter செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனால் இது உண்மை கிடையாது. பாஸ்புக்கை Enter செய்வது என்பது உங்களின் சொந்த விருப்பம் மட்டுமே ஆகும். பாஸ்புக்கை Enter செய்யாமல் இருப்பதால் உங்களின் கணக்கிற்கு எந்த பிரச்சனையும் வராது.
எனவே Mobile Passbook யை பயன்படுத்தி தேவையில்லாத அலைச்சலை தவிர்த்திடுங்கள். இது முற்றிலும் இலவச சேவையாகும்.