SIP என்றால் என்ன? Mutual Funds முதலீட்டு திட்டம்
நீங்கள் உங்களின் பணத்தை ஆபத்து (Risk) குறைந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளீர்களா? அப்படியென்றால் மியூச்சுவல் ஃபண்ட்களில் உள்ள SIP திட்டம் சரியான தேர்வாக இருக்கும். ஆனால் உங்களுக்கு SIP திட்டத்தை பற்றி தெரியவில்லையா? கவலையை விடுங்கள். இந்த பதிவில் அதை பற்றி தான் விரிவாக காணப்போகிறோம்.
பொதுவாக அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் வெறும் நினைத்தால் மட்டுமே ஆகிவிட முடியுமா?
நிச்சயமாக இல்லை. அதற்கான செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே கனவை நனவாக்க முடியும்.
ஒருவர் பணக்காரர் ஆக வேண்டுமென்றால் மாத சம்பளத்தை மட்டுமே வாங்கிக்கொண்டு இருந்தால் போதாது. அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு முதலீடு செய்யும் பணமானது பிற்காலத்தில் நமது கனவை நனவாக்கும்.
SIP Meaning in Tamil
SIP = Systematic Investment Plan
சிப், முதலீட்டு திட்டம், மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்
SIP என்றால் என்ன?
SIP என்பது மாத மாதம் அல்லது ஒவ்வொரு காலாண்டிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் செயல் முறையாகும். Systematic Investment Plan என்பதன் சுருக்கத்தையே SIP என்று அழைக்கிறோம். நீண்ட கால முதலீட்டிற்கு இது சிறந்த திட்டமாகும்.
பொதுவாக Reccuring Deposit (RD) திட்டத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் மாத மாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்திக்கொண்டு வர வேண்டும். SIP திட்டமும் கிட்டத்தட்ட அதே போன்று தான் மாத மாதமோ அல்லது ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறையோ செலுத்த வேண்டும்.
குறைந்த பட்சம் Rs.500 ரூபாயில் இருந்து மியூச்சுவல் ஃபண்ட்டில் உள்ள SIP திட்டத்தில் முதலீடு (Investment) செய்யலாம். SIP இல் குறைந்த தொகையில் இருந்து முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளதால், இந்த திட்டம் மக்களிடையே பிரபலமடைந்து உள்ளது.
Recurring Deposit திட்டத்தில் முதலீடு செய்யும் போது 6% முதல் 7% சதவீதம் வரை வட்டி கிடைக்கும். ஆனால் SIP திட்டத்தில் சந்தை மதிப்பை பொறுத்து 12% சதவீதம் அல்லது அதற்க்கு மேற்பட்ட வட்டி கிடைக்கலாம்.
SIP திட்டம் எப்படி வேலை செய்கிறது?
நீங்கள் SIP திட்டத்தில் பணத்தை முதலீடு செய்த பிறகு, அந்த பணத்தை நிதித்துறையில் சிறந்த அனுபவம் பெற்ற நிறுவனங்களால் மற்ற திட்டங்களில் முதலீடு செய்து நிர்வகிக்கப்படுகிறது. முதலீடு செய்த நாளில் இருக்கும் சந்தை மதிப்பை (NAV அல்லது நிகர சொத்திருப்பு மதிப்பு) அடிப்படையாக கொண்டு உங்களுக்கு சில யூனிட்கள் வாங்கப்படுகின்றன.
ஒவ்வொரு முறை நீங்கள் முதலீடு செய்யும்போதும், அன்றைய சந்தை விலை நிலவரப்படி கூடுதல் யூனிட்கள் வாங்கப்பட்டு அது உங்களின் கணக்கில் சேர்க்கப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் சந்தை மதிப்பு நிலவரப்படி, வேறுபட்ட விலைகளில் அலகுகள் வாங்கப்படுவதால் முதலீடு செய்யும் நபர்கள் ரூபாய் மதிப்பீட்டு சராசரியாக்கம் மற்றும் கூட்டு வட்டியின் பயனை பெறுகிறார்.
ரூபாய் மதிப்பு சராசரியாக்கம் என்றால் என்ன?
பொதுவாக சந்தைகள் ஏற்ற இறக்கங்களை காணும் நிலையற்ற தன்மையில் இருக்கும். இதனால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான சரியான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் ரூபாய் மதிப்பு சராசரியாக்கம் இதிலிருந்து உங்களை வெளியேற்றுகிறது.
எவ்வாறெனில், நீங்கள் மாத மாதம் தொடர்ந்து முதலீடு செய்வதால், நீங்கள் முதலீடு செய்யும் செய்யும் பணமானது, விலை குறைவாக இருக்கும் போது அதிக அலகுகளையும், விலை அதிகமாக இருக்கும் போது குறைந்த எண்ணிக்கையிலான அலகுகளையும் ஈட்டுகிறது.
உதாரணமாக, நீங்கள் மாத மாதம் Rs.100 ரூபாயை முதலீடு செய்வதாக கொள்வோம்.
கூட்டு வட்டி
SIP களில் முதலீடு செய்யும் போது அது கூட்டு வட்டியினை வழங்குகிறது. கூட்டு வட்டியானது நீங்கள் எவ்வளவு விரைவாக முதலீட்டை செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக லாபத்தை அளிக்கும்.
SIP திட்டத்தில் உள்ள அம்சங்கள்
- இந்த திட்டத்தில் மாதத்திற்கு அல்லது காலாண்டிற்கு ஒரு முறை முதலீடு செய்யலாம்
- ஒரு முதலீட்டாளர் 500 ரூபாய் என்ற குறைந்த தொகையையும் செலுத்த முடியும்.
- நீங்கள் உங்களின் வங்கிக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை வழங்கினால், ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் பணமானது வங்கிக்கணக்கில் இருந்து தானாக கழிக்கப்படும். இதனால் ஒவ்வொரு முறையும் பணத்தை நீங்களே செலுத்த வேண்டிய அவசியமில்லை.
- சந்தை ஏற்ற இறக்கங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை.
- நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
- முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேறலாம்.
முடிவுரை
ரிஸ்க் குறைந்த நீண்ட கால முதலீட்டு திட்டத்திற்கு SIP சிறந்த முதலீட்டு திட்டமாகும். நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்பவராக இருந்தால், இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். நீங்கள் எவ்வளவு விரைவாக இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமான லாபத்தை பெறலாம். இந்த திட்டத்தை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.