How to Download Kotak Mahindra Bank Statement Online

நீங்கள் உங்களின் Kotak Bank Account இன் Statement யை Online மூலம் Download செய்ய விரும்புகிறீர்களா? ஆம் என்றால் அதற்கான செயல்முறையை பற்றி நான் உங்களுக்கு விளக்குகிறேன். இந்த கட்டுரை உங்களுக்கு நிறைவான தகவல்களை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு வங்கி வாடிக்கையாளர், தனது கணக்கின் பரிவர்த்தனை விவரங்களை தெரிந்துகொள்வதற்கு வங்கிக்கணக்கு அறிக்கையை பெற விரும்பலாம். ஆனால் இதற்காக வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை.

இந்த அறிக்கையை நீங்கள் இணைய வங்கிச்சேவை அல்லது மொபைல் வங்கிச்சேவையின் மூலம் பெற முடியும். இதற்கான செயல்முறைகளை பற்றி படிப்படியாக உங்களுக்கு சொல்ல போகிறேன். இதை பின்பற்றினாலே உங்களின் கணக்கின் வங்கி அறிக்கையை பெறலாம்.

Bank Statement என்றால் என்ன?

ஒரு Bank Statement என்பது வங்கிக்கணக்கின் அனைத்து பரிவர்த்தனை விவரங்களை வழங்கும் ஒரு ஆவணமாகும். 

அதாவது நீங்கள் உங்கள் வங்கிக்கணக்கில் பணத்தை Deposit செய்திருக்கலாம், Withdrawal செய்திருக்கலாம் மற்றும் மற்றொரு கணக்கிற்கு Transfer செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் பரிவர்த்தனையின் தேதி, பரிவர்த்தனை எண், பரிவர்த்தனை செய்யப்பட்ட பணம் போன்ற விவரங்களை ஒரு ஆவணமாக பெறலாம்.

Read  How to Register and Login Kotak Mahindra Mobile Banking

 உங்களின் Kotak Bank இன் Account Statement யை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பெறலாம்.

1. How to Downlad Kotak Bank Account Statement via Net Banking

நீங்கள் கோடக் வங்கியின் இணைய வங்கிச்சேவையின் மூலம் எவ்வாறு கணக்கு அறிக்கையை Download செய்வது என்பதை பற்றி காண்போம்.

Step 1: Kotak Mahindra Bank இணையதளத்திற்கு சென்று உங்களின் Internet Banking யை Login செய்யவும்.

Login Kotak Bank Net banking

Step 2: இடது புறத்தில் Services என்பதற்கு கீழே உள்ள Statements என்பதை கிளிக் செய்யவும்.

Click Statements

Step 3: பிறகு முதலாவதாக உள்ள Account Statements என்பதை கிளிக் செய்யவும்.

Step 4: உங்களுக்கு எத்தனை நாட்களுக்கான அறிக்கை வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்து Download Statements என்ற லிங்கை அழுத்திய பிறகு Download > PDF என்பதை அழுத்தவும்.

Download Kotak Bank Statement

இப்பொழுது உங்களின் கணக்கு அறிக்கை PDF வடிவத்தில் பதிவிறக்கம் ஆகும்.

Step 5: அந்த PDF ஆவணத்தை திறந்து கணக்கு அறிக்கையை பார்க்கலாம்.

Read  How to Find CRN Number of Kotak Mahindra Bank Account

Kotak Bank Statement View

2. How to Downlad Kotak Bank Account Statement via 811 Mobile Banking App 

Step 1: உங்களின் மொபைல் போனில் Kotak 811 Mobile Banking App யை Login செய்யவும்.

Step 2:  செயலியை திறந்தவுடன் Service Request > Statement என்பதை தேர்வு செய்க.

Services Request and Statement

Step 3: இதில் Account மற்றும் Credit Card ஆகிய இரண்டின் அறிக்கைகளையும் பெற முடியும். இப்பொழுது இங்கு Accounts என்பதை தேர்வு செய்கிறேன்.

Choose Accounts

Step 4: Account Level Statement என்பதை கிளிக் செய்யவும்.

Account Level Statement

Step 5: இந்த பக்கத்தில் எத்தனை மாதங்களிற்கான அறிக்கை வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அதற்க்கு கீழே Email மற்றும் Post என்ற இரண்டு தேர்வுகள் இருக்கும். 

இதில் Email என்று தேர்வு செய்தால் கணக்கு அறிக்கை உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். Post என்று தேர்வு செய்தால் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். 

Choose Kotak Bank Statement Period

இங்கு Email என்று தேர்வு செய்துள்ளேன். பிறகு கடைசியாக உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.

Step 6: உங்களின் Email யை சரிபார்த்து Confirm என்பதை அழுத்தவும்.

Confirm For Kotak Bank Email Statement

Step 7: இப்பொழுது உங்களின் கணக்கு அறிக்கை வெற்றிகரமாக மின்னஞ்சலுக்கு அனுப்பட்டிருக்கும்.

Read  How to Open Kotak Mahindra Bank Zero Balance Account online

Email Statement Send Successsfully

3. Download Kotak Bank Official Website  

Step 1: https://www.kotak.com/en/transaction-services/statement.html என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Step 2: உங்களின் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி அல்லது CRN Number இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி Send OTP என்பதை கிளிக் செய்யவும்.

OTP Send

Step 3: பிறகு உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை Enter செய்து Confirm என்ற பட்டனை அழுத்தவும்.

Step 4: Select என்பதை கிளிக் செய்யவும்.

Kotak Bank Statement

Step 5: Send e-Statement on Email என்பதை தேர்வு செய்து தேதியை தேர்வு செய்ய வேண்டும். பிறகு Submit என்பதை கிளிக் செய்த உங்களின் மின்னஞ்சலுக்கு கணக்கு அறிக்கை அனுப்பப்படும்.

Select Date for Statement

இந்த கட்டுரையில் கோடக் வங்கிக்கணக்கின் அறிக்கையை Download செய்வதற்கான மூன்று வழிகளை பற்றி தெரிந்து கொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பல பயனுள்ள கட்டுரைகளை வெளியிடும் போது அதற்கான அறிவிப்புகளை பெறுவதற்கு கீழே உள்ள பெல் பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *