Kotak Bank

How to Find CRN Number of Kotak Mahindra Bank Account

நீங்கள் Kotak Bank Mobile Banking சேவையை பயன்படுத்துபவரா? ஆம் என்றால் நீங்கள் CRN Number யை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவேளை அந்த CRN எண்ணை மறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அதற்கான தீர்வை தான் இந்த இடுகையில் உங்களுடன் பகிரப்போகிறேன்.

Kotak Bank வங்கியானது, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவை மற்றும் மொபைல் சேவை மூலம் பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

இந்த இணைய சேவை மற்றும் மொபைல் சேவையில் உள்நுழைவதற்கு CRN நம்பர் தேவைப்படும். இதில் மொபைல் வங்கிசேவையில் உள்நுழைய கட்டாயம் ஆகும்.

இந்நிலையில் நீங்கள் CRN எண்ணை மறந்துவிட்டால் ஆன்லைன் சேவையில் உள்நுழைவது கடினமாகும். எனவே அந்த மாதிரியான சூழ்நிலையில், உங்களின் வங்கிக்கணக்கு எண்ணிற்கான CRN நம்பரை எப்படி தேடி கண்டுபிடிப்பது என்பதை பற்றி விரிவாக விளக்குகிறேன்.

What is CRN Number 

CRN என்பது Customer Relationship Number ஆகும். இது வங்கிகள் வாடிக்கையாளருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான அடையாளங்காட்டியாகும். 

Read  How to Download Kotak Mahindra Bank Statement Online

வாடிக்கையாளர் ஒரு வங்கியில் அல்லது அந்த வங்கியின் பல்வேறு கிளைகளில் சேமிப்பு கணக்கு (SB), தொடர்ச்சியான வைப்பு (RD), நிலையான வைப்பு (FD), கடன் கணக்கு (Loan) என பல்வேறு கணக்குகளை வைத்திருக்கலாம்.

அந்த கணக்குகள் எல்லாம் ஒரே வாடிக்கையாளருடையது என்பதை தெளிவுபடுத்துவதற்காக வழங்கப்பட்டதே CRN Number ஆகும். ஒரு வாடிக்கையாளர் எத்தனை விதமான வங்கிக்கணக்குகளை வைத்திருந்தாலும், அவை அனைத்தும் அவரின் CRN எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஒரு வாடிக்கையாளர் CRN நம்பரை மேற்கோள் காட்டுவதன் மூலம் அவரது வங்கிக்கணக்குகள் அனைத்தையும் பார்வையிட முடியும். இவ்வாறு இணைக்கவில்லை என்றால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். 

ஒரு சில வங்கிகளில் CRN எண்ணை CIF (Customer Information File) என்றும் அழைப்பார்கள்.

How to Find Your CRN Number For Kotak Bank Account

நீங்கள் Kotak Bank Account இன் CRN Number யை மறந்துவிட்டால் அதை திரும்ப பெற முடியும். இதை கண்டுபிடிப்பதற்கு இதற்காக மூன்று முறைகள் உள்ளன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்.

Read  How to Open Kotak Mahindra Bank Zero Balance Account online

Method 1: Get CRN Number on Debit / Credit Card 

வங்கி உங்களுக்கு வழங்கிய Debit Card அல்லது Credit Card இல் இந்த 8 இலக்க CRN Number Print செய்யப்பட்டிருக்கும். எனவே நீங்கள் முதலில் உங்களின் Debit அல்லது Credit அட்டையை பார்க்கவும். அதில் உங்களின் பெயருக்கு கீழே அச்சடிக்கப்பட்டிருக்கும்.

இதற்கான படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Kotak Mahindra Debit Card Tamil

Method 2: Get CRN by Sending SMS 

ஒருவேளை உங்களிடம் கோடக் வங்கியின் டெபிட் அட்டை அல்லது கிரெடிட் அட்டை இல்லாமல் இருக்கலாம். அந்த நிலையில் நீங்கள் ஒரு SMS அனுப்புவதன் மூலம் CRN நம்பரை திரும்ப பெற முடியும்.

இதற்க்கு நீங்கள் உங்களின் மொபைலில் CRN என்று Type செய்து 9971056767 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும். அவ்வாறு அனுப்பியுடன் அந்த மொபைல் எண்ணிற்கு CRN அனுப்பப்படும்.

நீங்கள் இந்த SMS செய்தியை அனுப்பும்போது, உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து தான் அனுப்ப வேண்டும். ஒருவேளை நீங்கள் வேறு ஒரு மொபைல் எண்ணில் இருந்து அனுப்பினால் வேலை செய்யாது.

Read  How to Change / Update Kotak Mahindra Bank Email ID in Online

Method 3: Get CRN Kotak Net Banking 

நீங்கள் கோடக் வங்கியின் இணைய வங்கிசேவை மூலமாகவும் CRN நம்பரை தெரிந்துகொள்ள முடியும்.

Step 1: Kotak Net Banking என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: உங்களின் Username அல்லது Debit Card எண்னை Type செய்து Next என்பதை கிளிக் செய்க.

Enter CRN or Username - Kotak Bank Net Banking

Step 3: உங்களின் Net Banking Password யை Enter செய்து Secure Login என்பதை அழுத்தவும்.

Type Kotak Internet Banking Password

Step 4: இப்பொழுது உங்களின் Profile ஐகான் மீது கிளிக் செய்தால் CRN தெரிவதை காணலாம்.

Select Profile Option and Get Kotak CRN Number

எந்தவொரு விண்ணப்பத்தை நிரப்புவதற்கு மற்றும் ஆன்லைன் சேவைகளை Login செய்வதற்கும் Customer Relationship Number முக்கியமானதாகும். நீங்கள் அந்த எண்ணை மறந்துவிட்டால், மேற்சொன்ன மூன்று முறைகளை பயன்படுத்தி அதை கண்டுபிடிக்கலாம்.

இந்த கட்டுரை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை கீழே உள்ள Comment பிரிவில் தெரியப்படுத்துங்கள்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தமிழ் மொழியில் பெறுவதற்கு கீழே Bell பட்டனை கிளிக் செய்து Subscribe செய்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole