How to Register and Login Kotak Mahindra Mobile Banking
Kotak Mahindra Bank வழங்கும் Mobile Banking சேவையின் மூலம் உங்களின் Debit Card மற்றும் Credit Card யை எளிதாக நிர்வகிக்க முடியும். மேலும் இந்த மொபைல் பேங்கிங் சேவை மூலம் நீங்கள் Online பரிவர்தனைகளையும் மேற்கொள்ள முடியும். ஒரு கோடக் வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையை எவ்வாறு Register செய்வது மற்றும் Login செய்வது என்பதை பற்றி இந்த இடுகையில் காணலாம்.
Kotak Mahindra Bank Account வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் மற்றும் இணைய வங்கிசேவையை பயன்படுத்தி பல்வேறு ஆன்லைன் பயன்களை பெறமுடியும். அவற்றில் மொபைல் மூலம் பெரும் வசதிகளை பற்றி இங்கே காணலாம்.
கோடக் வங்கி தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை மொபைல் சேவை மூலம் வழங்குகிறது. இதனால் நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை குறைகிறது. எனவே கோடக் வழங்கும் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி உங்களின் நேரத்தை சேமிக்கலாம்.
அப்படி என்னென்ன சேவைகளை கோடக் வங்கி வழங்குகிறது என்று கேட்கிறீர்களா?
அதை பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளேன்.
Table of Contents
கோடக் வங்கி மொபைல் பேங்கிங்கில் வழங்கும் சேவைகள்
- Kotak Bank இன் Savings, Current, Recurring Deposit போன்ற அனைத்து கணக்குகளின் Balance யை சரிபார்க்க முடியும்.
- Transaction History மற்றும் Statement யை காண இயலும்.
- Recurring Deposit மற்றும் Fixed Deposit கணக்குகளை ஆன்லைன் மூலமாகவே திறக்க முடியும்.
- நீங்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யும்போது அதற்கான முதிர்வு தொகையை கணக்கிடும் Calculator வசதியையும் வழங்குகிறது.
- RD மற்றும் FD கணக்கு தொகையை ஆன்லைன் மூலம் முன்கூட்டியே பெரும் வசதியை அளிக்கிறது.
- MMID யை உருவாக்கவும், Cancel செய்யவும் அனுமதிக்கிறது.
- IMPS / NEFT / RTGS மூலம் பணத்தை Transfer செய்யலாம்.
- UPI மூலம் Scan செய்து பணத்தை செலுத்தும் வசதியும் இந்த பயன்பாட்டில் உள்ளது.
- Bill கட்டணங்களை செலுத்த முடியும்.
- Debit Card மற்றும் Credit Card களை நிர்வகிக்கலாம்.
- ATM Center களில் Cardless முறையில் பணத்தை Withdrawal செய்யலாம்.
- Cheque Book க்கிற்கு Request செய்யும் வசதியை கொண்டுள்ளது.
- Email ID யை மாற்றம் செய்யலாம்.
- Nomination யை Update செய்யலாம்.
- MPIN அல்லது கைரேகையை கொண்டு மொபைல் பேங்கிங் செயலியை Login செய்யலாம்.
மேலும் படிக்க – Difference Between NEFT, RTGS & IMPS Transfer
How to Register / Activate For Kotak Mobile Banking service
நீங்கள் கோடக் வங்கியின் மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்த முதலில் Register / Activate செய்ய வேண்டும்.
எப்படி பதிவு செய்வது என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம். அதற்கான முழு தகவல்களையும் நான் உங்களுக்கு வழங்குகிறேன்.
பின்வரும் படிகளை பின்பற்றுவதன் மூலம் மொபைல் பேங்கிங் சேவையை பதிவு செய்யலாம்.
Step 1: நீங்கள் Google Playstore யை திறந்து Kotak – 811 & Mobile Banking என்ற செயலியை Download செய்யவும்.
Step 2: அதை Open செய்து Click Here to Log in என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: Yes, Send secure SMS now என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் இந்த பட்டனை அழுத்துவதற்கு முன்பு வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பர் அந்த போனில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும். மேலும் அந்த நம்பரில் குறைந்தபட்சம் 2 ரூபாய் Balance இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
Step 4: Send secure SMS now என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: இப்பொழுது உங்களின் மொபைல் நம்பர் SMS மூலம் தானாகவே Verify செய்யப்பட்டு Verification Successful என்ற வருவதை காண்பீர்கள்.
இப்பொழுது Continue என்பதை அழுத்தவும்.
Step 6: உங்களின் CRN Number மற்றும் 6 இலக்க MPIN Number யை Type செய்து Submit என்பதை அழுத்தவும்.
ஒருவேளை உங்களின் CRN Number மற்றும் MPIN தெரியவில்லையென்றால், Forgot CRN மற்றும் Forgot MPIN Option யை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
Step 7: உங்களின் போட்டோவை Set செய்யும் Option வரும். இதில் நேரடியாக Selfi எடுத்தோ அல்லது ஏற்கனவே மொபைல் போனில் இருக்கும் போட்டோவையோ பதிவேற்றி Set செய்யலாம்.
ஆனால் இது கட்டாயம் இல்லை. உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், அதை அப்படியே விட்டுவிட்டு Next என்பதை கிளிக் செய்யவும்.
Step 8: உங்களின் ஸ்மார்ட் போனில் Fingerprint Option இருந்தால் Yes என்பதை தேர்வு செய்யவும். இதன் மூலம் Kotak 811 Mobile Banking செயலியை உங்களின் கைரேகையை வைத்து திறக்கலாம்.
Step 9: I Agree என்பதை அழுத்துக.
Step 10: இப்பொழுது உங்களின் Fingerprint வெற்றிகரமாக Enable செய்யப்படும்.
இப்பொழுது நீங்கள் கோடக் மொபைல் பேங்கிங் செயலியை வெற்றிகரமாக Register / Activate செய்துவிட்டீர்கள்.
How to Login Kotak 811 Mobile Banking App
நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்தவுடன் கோடக் செயலியை Login செய்வது மிகவும் எளிதாகும்.
அதற்கான படிகள் இங்கே:
Step 1: உங்களின் மொபைலில் கோடக் செயலியை Open செய்யவும்.
Step 2: இப்பொழுது Login செய்வதற்கு Fingerprint மற்றும் MPIN என்று இரண்டு விதமான Option இருக்கும். அதில் Fingerprint யை தேர்வு செய்து கைரேகையை வைத்தால் Login ஆகிவிடும். அல்லது 6 இலக்க MPIN எண்ணை Type செய்தும் Login செய்யலாம்.
Step 3: தற்போது கோடக் செயலி வெற்றிகரமாக Login செய்யப்பட்டு Dashboard திறக்கும். இப்பொழுது அதில் இருக்கும் சேவைகளை நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
முடிவுரை
இன்று நீங்கள் கோடக் மொபைல் பேங்கிங் செயலியை எவ்வாறு பதிவு மற்றும் Login செய்வது என்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொண்டீர்கள். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு எளிதாக புரியும் என்று நம்புகிறேன்.
இது போன்ற வங்கிகளை பற்றிய பல பயனுள்ள கட்டுரைகளை வெளியிடும்போது அதை பற்றிய அறிவிப்புகளை பெறுவதற்கு, கீழே Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் Follw செய்யலாம்.