How to Open Kotak Mahindra Bank Zero Balance Account online
Kotak Mahindra Bank இல் Zero Balance Account யை Online மூலம் எவ்வாறு Open செய்வது என்பதை பற்றிய செயல்முறையை தகுந்த விளக்க படங்களுடன் இந்த கட்டுரையில் காணலாம். இந்த கட்டுரையை நீங்கள் முழுமையாக படித்த பிறகு Kotak Bank இல் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான முழு விவரங்களையும் அறிந்திருப்பீர்கள்.
கோடக் மஹேந்திரா வங்கி தங்களின் வாடிக்கையாளர்களின் முன்னுரிமையை மனதில் வைத்து, பல சேமிப்பு கணக்குகளை வழங்குகிறது. இந்த சேமிப்பு கணக்குகள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் வகையில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை ஆன்லைன் மூலம் திறக்க அனுமதிக்கிறது. ஆன்லைன் மூலம் சேமிப்பு கணக்கை தொடங்கியவுடன், கோடக் வங்கி வாடிக்கையாளர் வீட்டிற்க்கே வந்து KYC Verification யை செய்வார்.
Table of Contents
Features of Kotak Mahindra Bank
Kotak Mahindra Bank ஆனது ஆன்லைனில் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. அவற்றில் சில அடிப்படை அம்சங்களை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
- ATM Card Apply செய்தல்
- Credit Card Apply செய்தல்
- Cheque Book க்கிற்கு விண்ணப்பித்தல்
- Home Branch யை மாற்றுதல்
- சேமிப்பு கணக்கை Upgrade செய்தல்
- மின்னஞ்சலை மாற்றுதல்
- Gift Card களை உருவாக்குதல்
- கைரேகையை வைத்து Mobile Banking யை திறத்தல்
- ஆன்லைன் மூலம் RD மற்றும் FD கணக்கை திறத்தல்
- Recharge / Bill Pay
- Rekyc Update செய்தல்
Eligibility to Open Savings Account in Kotak Bank
கோடக் வங்கியில் ஜீரோ இருப்பு சேமிப்பு கணக்கை திறக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- கணக்கை திறக்கும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- மைனர் சேமிப்பு கணக்கை தவிர, விண்ணப்பதாரர் 18 வயதை நிறைவு செய்தவராக இருக்க வேண்டும்.
- ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையை வைத்திருக்க வேண்டும்.
- நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல்.
Steps to Open Kotak Mahindra Bank Zero Balance Account Online
பின்வரும் படிகளை பின்பற்றி கோடக் வங்கியில் ஆன்லைன் மூலம் பூஜ்ய இருப்பு கணக்கை திறக்கலாம்.
Step 1: நீங்கள் முதலில் கோடக் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.kotak.com/en/personal-banking/accounts/savings-account.html என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு கோடக் வங்கியின் பலதரப்பட்ட சேமிப்பு கணக்கு இருப்பதை காண்பீர்கள். அதில் 811 Digital Bank Account என்பதிற்கு கீழே உள்ள Apply Now என்பதை கிளிக் செய்யவும்.
Step 2: உங்களின் பெயர், மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சலை Type செய்து இரண்டு Check Box களையும் டிக் செய்க. பிறகு Open Now என்ற பட்டனை அழுத்தவும் (இதில் உங்களின் பெயர் ஆதார் அட்டையில் உள்ளபடி Type செய்யவும்).
Step 3: இப்பொழுது நீங்கள் Enter செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Next என்பதை கிளிக் செய்க.
ஒருவேளை உங்களுக்கு OTP வரவில்லை என்றால், Resend OTP, Get OTP on Whatsapp, Receive a Call போன்றவற்றின் மூலம் OTP எண்ணை பெற முடியும்.
Step 4: இந்த பக்கத்தில் Kotak 811 Account யை Open செய்ய ஆதார் விவரங்களை பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்கும். அதில் Yes என்பதை அழுத்தவும்.
Step 5: உங்களின் PAN Number மற்றும் Aadhaar Number யை சரியாக Enter செய்து Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 6: இதை சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ekyc மூலம் UIDAI இல் இருந்து எனது தனிப்பட்ட விவரங்களை கோடக் வங்கி பெற நான் ஒப்புக்கொள்கிறேன் என்ற ஓப்புதல் பெறுவதாகும்.
எனவே Continue என்பதை அழுத்தவும்.
Step 7: இப்பொழுது உங்களின் Aadhaar எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். அதை உள்ளிட்டு Continue என்பதை கிளிக் செய்க.
Step 8: நீங்கள் ஆதார் OTP யை Enter செய்த பிறகு, ஆதார் அட்டையில் இருக்கும் முகவரி தோன்றும். இந்த முகவரியை Communication Address ஆக வங்கி பயன்படுத்திக்கொள்ளும். இப்பொழுது Continue என்பதை கிளிக் செய்யவும்.
Step 9: சில நேரங்களில் உங்களுக்கு கீழ்கண்டவாறு தோன்றலாம். இதில் உங்களின் முகவரிக்கு எங்களால் சேவை செய்யப்படவில்லை என்ற செய்தி தோன்றும்.
அதாவது உங்களின் ஆதார் அட்டையில் இருக்கும் முகவரிக்கு வங்கிசேவை கொடுக்கப்படவில்லை என்பதாகும்.
இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?
தற்போது 811 Lite Account யை திறக்க வேண்டும். பிறகு Full KYC யை முடித்த பிறகு 811 Account க்கு Upgrade செய்துகொள்ளலாம்.
811 Lite Account என்றால் என்ன?
இந்த வகை கணக்கில் குறைவான வரம்புகள் நிர்ணயிக்கப்பையிட்டிருக்கும். அதாவது 811 Lite கணக்கில் மாதத்திற்கு 10,000 ரூபாய் மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள முடியும். Lite கணக்கின் Virtual Prepaid Card யை கொண்டு Online Shopping செய்யலாம்.
எனவே இப்பொழுது Get 811 Lite என்பதை கிளிக் செய்யவும்.
Step 10: இப்பொழுது நீங்கள் ஒரு புதிய முகவரியை Enter செய்ய வேண்டும். நீங்கள் மீண்டும் உங்களின் ஆதார் அட்டையில் இருக்கும் முகவரியை Enter செய்தால், Error செய்தி தோன்றும்.
எனவே தற்போது உங்களுக்கு தெரிந்த ஒரு நகரத்தின் முகவரியை Enter செய்க. அல்லது உங்களின் முகவரியில் Pincode யை மட்டும் மாற்றி கொடுக்கலாம். ஏனெனில் முக்கியமாக நீங்கள் Enter செய்யும் Pincode யை வைத்து தான் வங்கிசேவை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனால் ஏதேனும் பிரச்னை வருமா என்று நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் Full KYC செய்யும் போது முகவரி தகவல்களை திருத்திக்கொள்ளலாம் என்பதால் கவலைப்பட தேவையில்லை.
முகவரியை உள்ளிட்ட பிறகு Continue என்பதை கிளிக் செய்யவும்.
Step 11: இந்த பக்கத்தில் உங்களை பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.
இதில் Gender மற்றும் Date of Birth ஆகியவை ஏற்கனவே ஆதார் கார்டில் உள்ளபடி தேர்வாகி இருக்கும்.
மீதியுள்ள Occupation, Annual Income, Father Name, Mother Name மற்றும் Marrital Status ஆகியவற்றை Enter செய்து Next என்பதை அழுத்தவும்.
Step 12: நீங்கள் உங்களின் வங்கிக்கணக்கிற்கு Nominee யை Add செய்கிறீர்களா என்று தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இங்கே அது கட்டாயம் இல்லை. இருப்பினும் நீங்கள் Nominee யை சேர்ப்பது சிறந்ததாகும்.
நாமினி என்பது உங்களுக்கு பிறகு உங்களின் வங்கிக்கணக்கு பயன்களை (ஏதாவது பணம் டெபாசிட் செய்திருந்தால்) யார் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக நியமிப்பது ஆகும்.
எனவே Yes என்பதை தேர்வு Continue என்ற பட்டனை கிளிக் செய்க. ஒருவேளை Nominee யை சேர்க்க விரும்பவில்லை என்றால் I’ll do it later என்பதை தேர்வு செய்க.
நான் இங்கு நியமானதாரரை சேர்க்க விரும்புகிறேன்.
Step 13: நீங்கள் யாரை நாமினியாக நியமிக்க விரும்புகிறீர்களோ அவரின் பெயர், உறவுமுறை மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை Enter செய்ய வேண்டும். பிறகு Continue என்பதை கிளிக் செய்க.
Step 14: Nominee இன் Communication Address யை Type செய்ய வேண்டும். அல்லது உங்களின் முகவரியும் நியமானதாரரின் முகவரியும் ஒன்று தான் என்றால், Same as my Communication Address என்பதை டிக் செய்து Continue என்பதை அழுத்தவும்.
Step 15: I Accept all applicable என்பதை டிக் செய்து Continue என்பதை அழுத்துக.
Step 16: இப்பொழுது நீங்கள் Enter செய்த அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் தெரிவதை காண்பீர்கள். இவற்றில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் Update என்பதை கிளிக் செய்து மாற்றம் செய்யலாம்.
அனைத்தும் சரியாக இருந்தால் Continue என்பதை கிளிக் செய்யவும்.
Step 17: Declaration பக்கத்தில் மூன்று Check Box களையும் டிக் செய்து Continue என்பதை கிளிக் செய்யவும்.
Step 18: நீங்கள் Full KYC Verification யை எங்கு செய்கிறீர்கள் என்று தேர்வு செய்யவும்.
உங்களின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை அப்படியே எடுத்துக்கொண்டிருந்தால், Communication Address யை தேர்வு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்தால் உங்களின் முகவரிக்கே வந்து KYC Verification யை செய்வார்கள்.
ஒருவேளை உங்களின் ஆதார் முகவரியை எடுத்துக்கொள்ளாத காரணத்தால், நீங்கள் வேறு ஒரு முகவரியை கொடுத்து இருந்தால், Any Kotak Mahindra Branch என்பதை தேர்வு செய்யவும். இதை தேர்வு செய்தால் உங்களுக்கு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு Kotak Bank இல் KYC Verification செய்யலாம்.
நீங்கள் Branch Option யை தேர்வு செய்திருந்தால், தானாகவே உங்களுக்கு அருகில் இருக்கும் வங்கிக்கிளையை தெரியப்படுத்துவதை காண்பீர்கள்.
இப்பொழுது Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 19: தற்போது நீங்கள் 6 இலக்க MPIN Number யை Set செய்ய வேண்டும். MPIN என்பது Mobile PIN ஆகும்.
நீங்கள் Kotak Mahindra Mobile Banking செயலியை Open செய்யும்போது இந்த 6 இலக்க MPIN Number யை உள்ளிட்டு தான் திறக்க முடியும்.
பின் நம்பரை Set செய்த பிறகு Continue என்பதை கிளிக் செய்க.
Step 20: Continue என்பதை கிளிக் செய்யவும்.
Step 21: இப்பொழுது உங்களின் Kotak Mahindra Bank Zero Balance Account திறக்கப்பட்டு இருப்பதை காண்பீர்கள். இதில் Account Number, CRN Number, வங்கியின் IFSC Code மற்றும் Virtual Prepaid Card போன்ற தகவல்கள் தெரியும்.
உங்களின் ஸ்மார்ட் போனில் Kotak 811 Mobile Banking செயலியை Download செய்யவும். பிறகு உங்களின் CRN Number மற்றும் MPIN யை கொண்டு அதை Login செய்யலாம்.
முடிவுரை
மேற்சொன்ன தகவல்கள் நீங்கள் புதிய ஜீரோ இருப்பு கணக்கை திறப்பதற்கு போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் கோடக் வங்கியை பற்றிய பல கட்டுரைகள் வெளியிட இருக்கிறேன். இதன் மூலம் இந்த வங்கி வழங்கும் பல்வேறு பயனுள்ள சேவைகளை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த கட்டுரையை பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.
இதுபோன்ற பல பயனுள்ள கட்டுரைகளை வெளியிடும்போது அதற்கான அறிவிப்புகளை பெற கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும்.