How to Booking LPG Cylinder Online | இண்டேன் கேஸ்

இன்றைய காலகட்டத்தில் LPG Gas என்று சொல்லப்படும் சமையல் எரிவாயு அடிப்படை தேவையாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் இருப்பதை காண்பீர்கள். சிலிண்டர்களில் எரிவாயு தீர்ந்துவிட்டால், Refill சிலிண்டருக்கு Booking செய்ய வேண்டும். அதை எவ்வாறு மற்றும் எந்தெந்த வழிகளில் Booking செய்யலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Refill Cylinder களுக்கு இணையதளம், மொபைல் செயலி, IVRS, மற்றும் Whatsapp போன்றவற்றின் மூலம் புக்கிங் செய்யலாம். இந்த ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக காணலாம்.

LPG Gas என்றால் என்ன?

LPG Gas என்பது எரிபொருள் தேவைக்காக பயன்படுத்தும் திரவ பெட்ரோலிய வாயுவாகும் (Liquefied Petroleum Gas). சிலிண்டர்களில் உள்ள பெட்ரோலிய வாயுவானது திரவ நிலையில் இருக்கும். நாம் அதை பயன்படுத்தும் போது வாயு நிலையில் வெளியேறும்.

கேஸ் சிலிண்டரில் புரொப்பேன் மற்றும் பியூட்டேன் என்ற வாயுக்கள் உள்ளது. இவை இரண்டும் மணமற்ற வாயுக்கள் ஆகும். எனவே அவற்றில் எத்தில் மெர்காப்டன் போன்ற வாசனையூட்டும் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் கேஸ் கசியும் போது வாசனையின் மூலம் கண்டுபிடித்து விடலாம். 

How to Booking Gas Cylinder Through Online – Indane Portal

Indane Gas இன் இணையதளமான Indane Portal Website மூலம் சிலிண்டருக்கு புக் செய்யலாம். நீங்கள் முதல் முறையாக இந்த இணையதளத்திற்கு செல்கிறீர்கள் என்றால், முதலில் அதில் ஒரு கணக்கை தொடங்க வேண்டும். அதற்க்கு நீண்ட நேரம் பிடிக்காது சில நிமிடங்களில் கணக்கை திறந்துவிடலாம்.

ஒருமுறை நீங்கள் கணக்கை Register செய்த பிறகு வழக்கமாக உங்களின் கணக்கை திறந்து சிலிண்டர்களுக்கு புக் செய்யலாம். 

1. Register Account in Indane Gas 

Step 1: முதலில் https://cx.indianoil.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: நீங்கள் இப்பொழுது தான் இந்த இணையதளத்திற்கு வருகிறீர்கள் என்பதால் Register என்பதை கிளிக் செய்யவும்.

Register Account For Indane Gas

Step 3: கேஸ் புத்தகமானது யாரின் பெயரில் உள்ளதோ அவர்களின் பெயர் மற்றும் கேசில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு Proceed என்பதை அழுத்தவும்.

Indian Gas Registration

Step 4: இப்பொழுது அந்த மொபைல் எண்ணிற்கு 4 இலக்க OTP Number வரும். அதை உள்ளிட்டு Verify என்பதை கிளிக் செய்க.

OTP Indane Gas

Step 5: இந்த பக்கத்தில் Password யை Set செய்ய வேண்டும். இந்த Password மூலம் தான் ஒவ்வொரு முறையும் கணக்கை Login செய்ய முடியும்.

Step 6: இப்பொழுது உங்களின் Indane Gas Account வெற்றிகரமாக உருவாகிவிடும். அதில் உள்ள LPG என்பதை கிளிக் செய்யவும்.

LPG

Step 7: இப்பொழுது Link Your Existing LPG Connection என்பதிற்கு கீழே உள்ள Link Now என்பதை கிளிக் செய்க.

Link LPG ID Online

நீங்கள் கணக்கை திறக்கும்போது கேசில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு திறந்ததால், Link Now என்பதை கிளிக் செய்தவுடன் தானாகவே உங்களின் LPG Number யை லிங்க் செய்துகொள்ளும். இப்பொழுது திரையில் காணும் Re Login என்பதை கிளிக் செய்தால் கணக்கில் இருந்து வெளியே வந்துவிடும்.

தற்போது Indane Gas இணையதளத்தில் Account யை Register செய்யும் செயல்பாடுகள் முழுவதும் முடிந்தது. நீங்கள் இந்த இணையதளத்தை முதல் முறையாக பயன்படுத்துபவராக இருந்தால் மட்டுமே மேற்கண்டவாறு கணக்கை Register செய்ய வேண்டும்.

ஒருமுறை Register செய்த பிறகு நேரடியாக கணக்கை திறந்து LPG Gas யை Booking செய்யலாம்.

2. How to Booking Gas Cylinder Online 

Step 8: https://cx.indianoil.in/ என்ற இணையதளத்தில் உள்ள Sign in என்பதை கிளிக் செய்க.

Sign in Indane Account

Step 9: மொபைல் எண்ணை உள்ளிட்டு Continue என்பதை அழுத்துக.

Indian Oil Gas Account Login

Step 10: Password யை உள்ளிட்டு Submit செய்க.

Indane Gas Sign in

Step 11: LPG என்பதை கிளிக் செய்யவும்.

LPG Gas

Step 12: முதலாவதாக உள்ள Book Your Cylinder என்பதை கிளிக் செய்க.

Order Your Cylinder online

Step 13: Refill Cylinder Request for என்ற இடத்தில் LPG Refill 14.2 Kg என்பதை தேர்வு செய்க. பிறகு கடைசியாக உள்ள Book Now என்பதை அழுத்தவும்.

Order Your Cylinder online

இப்பொழுது வெற்றிகரமாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு புக்கிங் செய்துவிட்டீர்கள். அதற்கான SMS யை மொபைல் எண்ணில் வந்துவிடும். தேவைப்பட்டால் சிலிண்டருக்கான பணத்தை உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து Net banking, Debit Card, UPI போன்றவற்றின் மூலமாகவே செலுத்தலாம்.

How to Booking Cylinder Through Mobile App 

உங்களின் மொபைல் செயலி மூலம் எவ்வாறு Refill Cylinder க்கு Booking செய்வது என்று காணலாம்.

Step 1: உங்களின் மொபைல் போனில் உள்ள Play Store இல் IndianOil ONE என்ற App யை இன்ஸ்டால் செய்யவும்.

Step 2: App யை Open செய்து இடது புறத்தில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்யவும்.

Indian Oil Mobile App

Step 3: Login / Sign Up என்பதை அழுத்தவும்.

Indian Oil Mobile App Login

Step 4: உங்கள் கணக்கின் மொபைல் நம்பர் மற்றும் Password யை Enter செய்து Login Now என்பதை அழுத்தவும்.

Login Indian Oil App

கணக்கை இன்னும் நீங்கள் Regsiter செய்யவில்லை என்றால், அது குறித்து மேலே விளக்கப்பட்டுள்ளது. அந்த செயல்முறையின் மூலம் கணக்கை Register செய்யலாம்.

Step 5: Order Cylinder என்பதை கிளிக் செய்யவும்.

Gas Booking in Mobile App

Step 6: பிறகு கடைசியாக உள்ள Order Now என்பதை கிளிக் செய்த சிலிண்டர் புக் செய்யப்பட்டுவிடும். 

How to Booking Cylinder Through IVRS

நீங்கள் 77189 55555 என்ற IVRS எண்ணை தொடர்பு கொண்டும் கேஸ் புக்கிங் செய்யலாம். அதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:

Step 1: உங்களின் கேஸ் சிலிண்டரில் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 77189 55555 என்ற IVRS Number க்கு Call செய்யவும்.

Step 2: Call செய்தவுடன் அந்த மொபைல் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள உங்களின் LPG எண்ணின் தகவல்களை கூறுவார்கள். அவை அனைத்தும் சரியாக பட்சத்தில் அதை உறுதி செய்ய 1 என்ற எண்ணை அழுத்த வேண்டும்.

Step 3: இப்பொழுது சிலிண்டர் புக் செய்ய மீண்டும் 1 என்ற எண்ணை எழுதியவுடன் சிலிண்டர் புக் செய்யப்படும்.

How to Booking Cylinder by Missed Call Service 

சிலிண்டரை புக் செய்ய இது மிகவும் எளிமையான முறையாகும். படிப்பறிவு இல்லாத மக்களுக்கும் இந்த முறை எளிதாக இருக்கும். Missed Call கொடுப்பதன் மூலம் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். 

இதற்க்கு நீங்கள் LPG Gas இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 8454955555 என்ற எண்ணிற்கு Missed Call கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தவுடன் உங்களுக்கான சிலிண்டர் புக் செய்யப்படும்.

How to Booking Cylinder Through Whatsapp  

பொதுவாக ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் Whatsapp செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். அந்த செயலி மூலமாகவும் கேஸ் சிலிண்டரை புக் செய்யலாம்.

Whatsapp செயலியின் மூலம் LPG Gas இல் பதிவு செய்த மொபைல் நம்பர் அல்லது பதிவு செய்யாத மொபைல் என எந்த நம்பரில் இருந்தும் புக்கிங் செய்யலாம்.

LPG இல் பதிவு செய்த மொபைல் எண்ணில் Book செய்தல்:

முதலில் 7588888824 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் சேமித்த எண்ணிற்கு Whatsapp செயலியில் இருந்து REFILL என்றும் Type செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் சிலிண்டர் புக் செய்யப்படும்.

LPG இல் பதிவு செய்யாத மொபைல் எண்ணில் இருந்து Book செய்தல்:

நீங்கள் சேமித்த எண்ணிற்கு Whatsapp செயலியில் இருந்து REFILL# <17 இலக்க ConsumerID> என்று Type செய்து அனுப்ப வேண்டும். உதாரணமாக, REFILL#7500034515689754 என்று அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அனுப்பியவுடன் சிலிண்டர் புக் செய்யப்படும். 

முடிவுரை 

இந்த பதிவின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை புக்கிங் செய்யும் பல்வேறு முறைகளை பற்றி தெரிந்து கொண்டீர்கள். மேற்கண்ட முறைகளில் ஏதாவது ஒரு முறையின் மூலம் சிலிண்டரை புக் செய்யலாம். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

FAQs

1. இண்டேன் கேஸ் சிலிண்டரை எந்தெந்த வழிகளில் புக் செய்யலாம்?

இண்டேன் கேஸ் சிலிண்டரை இணையதளம், Indian Oil One மொபைல் செயலி, IVRS, Missed Call Service மற்றும் Whatsapp செயலி போன்றவற்றின் மூலம் புக் செய்யலாம்.

2. இண்டேன் கேஸ் சிலிண்டரை புக் செய்த பிறகு அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த முடியுமா?

முடியும். இண்டேன் இணையதளம் அல்லது Indian Oil One மொபைல் செயலி மூலம் அதற்கான தொகையை செலுத்தலாம்.

3. இண்டேன் கேஸ்ஸில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆன்லைன் மூலம் மாற்ற முடியுமா?

https://cx.indianoil.in/webcenter/portal/LPG/pages_bookyourcylinder என்ற இணையதளத்தில் உங்களின் இண்டேன் கேஸ் கணக்கை லாகின் செய்து மொபைல் நம்பரை அப்டேட் செய்யலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest