Aadhaar Seeding Meaning in Tamil | ஆதார் சீடிங் என்றால் என்ன?
Aadhaar Seeding Meaning in Tamil: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தொழில்நுட்பங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. முக்கியமாக வங்கித்துறைகளில் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தின் ஒரு முயற்சியாக இந்திய அரசாங்கம், அரசு திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்த முயற்சி செய்தது. இந்த முயற்சியை செயல்படுத்தும் விதமாக Aadhaar Seeding அல்லது ஆதார் விதைப்பு முறை கொண்டுவரப்பட்டது.
இந்தக் கட்டுரையானது Aadhaar Seeding என்றால் என்ன?, அது எப்படி வேலை செய்கிறது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதைப்பற்றி விளக்கும்.
Table of Contents
Aadhaar Seeding Meaning in Tamil | ஆதார் விதைப்பு என்றால் என்ன?
Aadhaar Seeding என்பது ஒரு இந்திய குடிமகனின் ஆதார் எண்ணை, பல்வேறு சேவைகள் மற்றும் ஆவணங்களுடன் இணைப்பதை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும். பொதுவாக Aadhaar Seeding ஆனது, ஒரு பயனாளியின் ஆதார் எண்ணை வங்கிக்கணக்கில் இணைக்கும் செயல் என்று அறியப்படுகிறது. ஆனால் இந்த செயல் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமில்லாமல் மொபைல் எண்கள், வாக்காளர் அட்டை,ரேஷன் கார்டு மற்றும் பான்கார்டு போன்ற தனிமனித ஆவணங்களுடன் இணைப்பதற்கும் பொருந்தும்.
இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமான ஆதார் எண்ணானது, அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முறையை மாற்றியுள்ளது. இது உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து, அரசாங்கத்திற்கு இலக்கு பலன்களை வழங்குவதை எளிதாக்குகிறது.
Bank Account இல் எப்படி Aadhaar Seeding செய்வது?
நீங்கள் உங்களின் வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றால், அதற்க்கு முதலில் உங்களின் வங்கிக்கிளைக்கு சென்று ஆதார் எண்ணை இணைப்பதற்கான கோரிக்கையை வைக்க வேண்டும். இதற்க்கு நீங்கள் வங்கியில் Aadhaar Seeding Form யை நிரப்பி வங்கியிடம் கொடுக்க வேண்டும். படிவத்தை நிரப்பி கொடுத்த பிறகு அடுத்த 24 மணி நேரத்தில், உங்களின் ஆதார் எண்ணானது வங்கிக்கணக்குடன் இணைக்கப்படும்.
சில வங்கிகள் ஆன்லைன் மூலமாகவே ஆதார் எண்ணை இணைக்கும் வசதியை வழங்குகின்றன. இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் வங்கிக்கு போகாமல் ஆன்லைன் மூலமாகவே, ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்க முடியும். இது மிகவும் எளிமையான முறையாகும். உங்களிடம் இருக்கும் கணினி அல்லது ஸ்மார்ட் போனை பயன்படுத்தியே Aadhaar Seeding யை செய்ய முடியும்.
Aadhaar Seeding எப்படி வேலை செய்கிறது?
நீங்கள் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்த பிறகு, அரசின் சலுகைகளை நேரடியாக உங்களின் வங்கிக்கணக்கில் பெறலாம். அதாவது அரசாங்க சலுகைகளான LPG Gas மானியம், OAP என்று சொல்லப்படும் முதியோர் ஓய்வூதியத்தொகை, விதவை உதவித்தொகை , மாற்றுத்திறனாளி உதவித்தொகை போன்ற பல்வேறு சலுகைகள் நேரடியாக பயனாளியின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படும்.
இந்த செயல்முறை எப்படி நடைபெறுகிறது என்றால், அரசாங்கமானது ஒரு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையை பயனாளியின் ஆதார் எண் மூலமாக அனுப்பும். அந்த ஆதார் எண் எந்த வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கிக்கணக்கில் தொகையானது வரவு வைக்கப்படும். இந்த முறைக்கு DBT (Direct Benefit Transfer) என்று பெயர்.
ஒரு பயனாளி எப்பொழுது வேண்டுமானாலும் தனது ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவர் தனது ஆதார் எண்ணில் SBI வங்கிக்கணக்கை இணைத்துள்ளதாக கொள்வோம். அவர் விரும்பினால் SBI வங்கிக்கணக்கிற்கு பதிலாக வேறொரு வங்கிக்கணக்கை (Example: Indian Bank) இணைத்துக்கொள்ள முடியும்.
அப்படி வேறொரு வங்கிக்கணக்கை இணைத்துவிட்டால், அரசாங்க சலுகைகள் அனைத்தும் அந்த புதிதாக இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும் ஒரு பயனாளர் வங்கிக்கணக்கில் Aadhaar Seeding செய்வதன் மூலம், தனது கைரேகையை வைத்தே வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும். தற்போது கிராமப்புறங்களில் இருக்கும் படிப்பறிவு இல்லாத மக்கள், இந்த முறையை பயன்படுத்தியே தங்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்கிறார்கள்.
Benefits of Aadhaar Seeding | ஆதார் இணைப்பின் பயன்கள்
- ஆதார் Seeding ஆனது, பல்வேறு நலத் நலத்திட்டங்கள் உத்தேசிக்கப்பட்ட பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை அரசாங்கம் உறுதிசெய்ய முடியும். இது இடைத்தரகர்களின் ஈடுபாட்டைக் குறைக்கிறது மற்றும் கணினியில் கசிவுகளின் வாய்ப்புகளை குறைக்கிறது.
- பல்வேறு தளங்களில் உள்ள கணக்குகளை நகல் எடுக்க ஆதார் சீட்டிங் உதவுகிறது. இதன் மூலம் ஒரே சேவை அல்லது நன்மைக்காக தனிநபர்கள் பல கணக்குகளை வைத்திருக்க முடியாது. இது வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது.
- ஆதார் விதைப்பு அடையாள சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக்குகிறது. சேவை வழங்குநர்கள் தங்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரு தனிநபரின் அடையாளத்தை விரைவாகவும் துல்லியமாகவும் சரிபார்க்கலாம்.
- ஆதார் விதைப்பு குடிமக்கள் பரந்த அளவிலான அரசாங்க சேவைகளை மிகவும் எளிமையாக அணுக அனுமதிக்கிறது. நேரடி பணப் பரிமாற்றங்கள், எல்பிஜி மானியங்கள் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் சுகாதாரத் திட்டங்கள் போன்ற சேவைகள் இதில் அடங்கும்.
- ஆதார் விதைப்பு மூலம், மோசடி நடவடிக்கைகளை அரசு மிகவும் திறம்பட கண்டறிந்து தடுக்க முடியும். இதில் போலி பயனாளிகளை கண்டறியவும், அடையாள திருட்டை தடுக்கவும் முடியும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
1. அனைத்து குடிமக்களுக்கும் Aadhaar Seeding கட்டாயமா?
Aadhaar Seeding அனைத்து குடிமக்களுக்கும் கட்டாயமில்லை. ஆனால் அரசு சலுகைகள் மற்றும் மானியங்களை பெற இது கட்டாயமாகும்.
2. பல வங்கிக் கணக்குகளுடன் எனது ஆதாரை இணைக்க முடியுமா?
முடியாது. ஒரு நேரத்தில் ஒரு வங்கிக்கணக்கை மட்டுமே ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும். தேவைப்பட்டால் ஆதார் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்.
3. எனது வங்கிக்கணக்கை ஆதாருடன் இணைக்க நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கிளைக்கு சென்று Aadhaar Seeding படிவத்தை நிரப்பி கொடுத்தால், 24 மணி நேரத்தில் லிங்க் செய்யப்படும்.
4. எனது வங்கிக்கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று எப்படி அறிந்துகொள்வது?
ஆதார் இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/bank-seeding-status என்ற தளத்திற்கு சென்று Bank Seeding Status யை அறிந்துகொள்ளலாம்.