கம்ப்யூட்டர் என்றால் என்ன? | Computer Meaning in Tamil

Computer Meaning in Tamil: இன்றைய உலகில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தையை கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு கணினியின் தேவை முக்கியமானதாகும். பள்ளிகள், கல்லூரிகள், வணிகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனி நபர்களின் பயன்பாடு என அனைத்து தேவைகளுக்கும் கணினி இன்றியமையாததாகும். 

அந்த கணினி என்றால் என்ன மற்றும் அதன் சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

Computer Meaning in Tamil 

Computer என்பதன் Full Form Common Operating Machine Purposely Used for Technological and Educational Research ஆகும். இதன் சுருக்கத்தையே நாம் Computer என்று அழைக்கிறோம்.

கம்ப்யூட்டர் என்பதின் மற்ற சொற்கள்:

 • கணினி 
 • கணிப்பொறி 
 • கணக்கீட்டு கருவி 
 • மேசை கணினி 
 • மடிக்கணினி 
 • தரவுகளை சேமிக்கும் இயந்திரம் 
 • உள்ளீடுகளை பொறுத்து வெளியீட்டை வழங்கும் கருவி 
 • நிரல்களின் அடிப்படையில் இயங்குபவை 
 • பல்வேறு தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மின்னணு சாதனம் 
 • தகவல்களின் நினைவகம் 
 • மதிப்பீடு செய்வது 
 • பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இயந்திரம்
 • வணிக மின்னணு இயந்திரம் 

கம்ப்யூட்டர் என்றால் என்ன?

கம்ப்யூட்டர் என்பது பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) நிரல்களை கொண்ட ஒரு மின்னணு இயந்திரம் ஆகும். இது தரவுகளை (Data) ஏற்று செயலாக்கம் (Process) செய்து இறுதியாக வெளியீட்டை (Output) கொடுக்கிறது. 

Read  LED என்றால் என்ன? | LED Meaning in Tamil

ஒரு கம்ப்யூட்டர் எப்படி செயல்பட வேண்டும் என்று முன்பே அதற்க்கு அறிவுறுத்தல்கள் (Instructions) வழங்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் நாம் கொடுக்கும் உள்ளீடுகளுக்கு ஏற்றவாறு Logic மற்றும் கணக்கீடுகளுக்கான வெளியீட்டை வழங்குகிறது. அனைத்து Computer-களும் அடிப்படையில் தரவுகளை 0 மற்றும் 1 என்ற Binary Digits ஆக சேமிக்கின்றது. இது பல்வேறு செயலாக்கத்திற்கு பிறகு நமக்கு திரையில் வெளியீடாக காட்டுகிறது.

கணினியின் வரலாறு (History of Computer)

முதன் முதலில் சார்லஸ் பாபேஜ் என்பவர், 1822 ஆம் ஆண்டு கணினியின் முன்னோடியான ஒரு பகுப்பாய்வு இயந்திரத்தை வடிவமைத்தார். இது அடிப்படை கணக்கீடுகளை செய்ய கூடிய எந்திரமாகும். இந்த இயந்திரம் நீராவியால் இயங்கக்கூடிய ஒரு என்ஜினை போன்று இருக்கும். இதுவே அடுத்தடுத்த கணினிகளை உருவாக்க காரணமாக இருந்தது. எனவே இவர் கணினியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 

கணினியின் அடுத்தடுத்த முன்னேற்றங்களை கணினிகளின் தலைமுறை (Computer Generation) என்று அழைக்கப்படுகிறது. கணினி தலைமுறைகளில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட கணினிகளின் அளவு குறைந்து அதன் செயலாக்கம் (Process) அதிகரித்தது.

1வது தலைமுறை (1St Generation):

Vacuum Tube Computer - First Generation Computer

1940 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில் முதல் தலைமுறை கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் Processor ஆக வெற்றிட குழாய்கள் (Vacuum Tubes) பயன்படுத்தப்பட்டது. இந்த தலைமுறை கம்ப்யூட்டர் ஆனது ஒரு பெரிய அறையின் அளவுக்கு இருக்கும். இந்த கணினிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் சிக்கலானவை மற்றும் விலை உயர்ந்தவை ஆகும்.

Read  புஞ்சை நிலம் என்றால் என்ன?| Punjai Land Meaning in Tamil

2வது தலைமுறை (2nd Generation):

2nd Generation Computer - Transistor

1956 முதல் 1964 வரை 2ம் தலைமுறை கணினிகள் பயன்படுத்தப்பட்டன. இதில் Processor க்கு வெற்றிட குழாய்க்கு பதிலாக Transistor பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் கணினியின் அளவு கணிசமாக குறைந்தது. இருப்பினும் ட்ரான்ஸிஸ்டரின் செயல்வேகம் குறைவாகவே இருந்தது.

3வது தலைமுறை (3rd Generation):

3rd Generation Computer - IC

3ம் தலைமுறை கணினிகளின் காலம் 1964 முதல் 1971 வரை ஆகும். இதில் Transister க்கு மாற்றாக Integrated Circuit (IC) பயன்படுத்தப்பட்டது. இதன் செயல்வேகம் ட்ரான்ஸிஸ்டரை விட அதிகம் ஆகும்.

4வது தலைமுறை (4th Generation):

4th Generation Computer - Microprocessor

1971 முதல் 1980 வரையிலான ஆண்டுகள் 4ம் தலைமுறை கம்ப்யூட்டர்கள் காலம் ஆகும். இந்த தலைமுறையில் தான் Microprocessor (VLSI) என்ற செயலி பயன்படுத்தப்பட்டது. இதன் செயல்வேகம் அதிகம் ஆகும். இந்த வகையான கணினிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

5வது தலைமுறை (5th Generation): 

5th Generation Computer

1980 முதல் தற்போது வரை 5ம் தலைமுறை ஆகும். இது ULSI அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த தலைமுறை கணினிகளின் அளவு சிறியது ஆகும். இதில் Super Conductors, Artificial Intelligence, Graphics போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

கணினியின் அடிப்படை கூறுகள் (Basic Parts of Computer)

எந்த கணினியாக இருந்தாலும் அவை சில அடிப்படை கூறுகளை (Basic Parts) கொண்டிருக்கும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

Read  Introvert Meaning in Tamil | விரிவான விளக்கங்கள்

Basic Parts of Computer

Mouse & Keyboard 

Mouse மற்றும் Keyboard ஆகிய இரண்டும் உள்ளீட்டு கருவிகளாகும். இவற்றின் மூலமாக தான் நாம் CPU க்கு உள்ளீடுகளை கொடுக்கிறோம். 

Central Processing Unit (CPU):

CPU ஆனது ஒரு கணினியின் மூளை ஆகும். இந்த பகுதியில் தான் ஒரு கணினியின் அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகின்றன. அதாவது உள்ளீடுகளை பெற்று அதை செயலாக்கம் செய்து வெளியீட்டை அளிக்கின்றன. இந்த CPU இல் Motherboard, Processor, Memory, மற்றும் பல மின்னணு கருவிகள் இருக்கும்.

Monitor

இது ஒரு வெளியீட்டு (Output) கருவியாகும். CPU ஆனது Process செய்த பிறகு அதன் வெளியீட்டை இந்த மானிட்டருக்கு அனுப்பும். அதை நாம் திரையின் மூலம் காண்போம். Printer Speakers, Headphones, Projectors போன்ற சாதனைகளும் வெளியீட்டு கருவிகளாகும்.

முடிவுரை 

இந்த பதிவின் மூலம் Computer Meaning மற்றும் அதை பற்றிய சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய கருத்துக்களை கீழே பதிவிடவும்.

இதையும் படியுங்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest