Meaning

கிரஷ் என்றால் என்ன? | Crush Meaning in Tamil

Crush Meaning in Tamil: கிரஷ் என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தையை எந்த அர்த்தத்துடன் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? ஏனெனில் கிரஷ் என்ற ஆங்கில வார்த்தையானது பல அர்த்தங்களை கொடுக்கிறது. அதை பற்றிய தகவல்களை எடுத்துக்காட்டுகளுடன் இந்த பதிவில் காணலாம்.

Crush Meaning in Tamil 

Crush என்ற வார்த்தை பல்வேறு அர்த்தங்களை கொடுக்கிறது. இருப்பினும் அந்த வார்த்தையை நாம் எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து அதன் பொருள் மாறுபடும். 

கிரஷ் என்ற வார்த்தைக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் அர்த்தங்களை பார்க்கலாம். 

வ.எண் Crush என்பதன் தமிழ் பொருள் ஆங்கிலத்தில் 
1ஈர்ப்பு Attraction
3தற்காலிக காதல் உணர்வு Temporary Love Feel
3அழுத்துதல் Pressing 
4நொறுங்குதல் Crumple
5நசுக்குதல் Crushing 
6கசக்கு Bitter 
7நெருக்கடி Crisis 
8அமுக்குதல் Compression 
9கூட்டம் Crowd
10உடைதல் Breaking Down

Love Crush Meaning in Tamil – Explanation

Crush Meaning | Teen Age Love

இளம் வயதினர் இந்த கிரஷ் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிப்பார்கள். குறிப்பாக தங்களின் எதிர்ப்பாலினரை குறிப்பிடுவதற்கு இதை பயன்படுத்துவார்கள்.

சிலர் Crush என்றால் காதல் என்று கூறுவார்கள். ஆனால் கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இந்த இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா? இந்த மாதிரியான குழப்பங்கள் உங்களுக்குள் இருந்தால், இந்த கட்டுரையில் தெளிவு பெறுவீர்கள். 

Read  Introvert Meaning in Tamil | விரிவான விளக்கங்கள்

உண்மையில் கிரஷ் மற்றும் காதல் இவை இரண்டும் வெவ்வேறாகும். இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை தெரிந்துகொள்வதின் மூலம் ஒரு தெளிவு பெறலாம்.

Crush மற்றும் Love ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள் அட்டவணப்படுத்தப்பட்டுள்ளது:

கிரஷ் (Crush) காதல் (Love) 
ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் மீது ஏற்படும் அதீத ஈர்ப்பு. நீண்ட காலம் ஒருவரின் மீது மாறாமல் இருக்கும் அன்பு. 
அனைத்து கிரஷ்களும் காதலாக மாறுவதில்லை. அனைத்து காதல்களும் முதலில் கிரஷில் இருந்தே ஆரம்பிக்கின்றன.
இது ஒருவரை விரும்பும் உணர்வு.ஆழ்ந்த பாசம் மற்றும் அக்கறையின் உணர்வு.
கிரஷ் உணர்வை உணர்வது எளிது. Love என்பது மெல்ல மெல்ல வளரும் உணர்வு. எனவே இதை உணர சிறிது காலம் ஆகும்.
இது சுயநலத்திற்கு முக்கியத்துவம் தரும். இதில் சுயநலம் இருக்காது. 
ஒரு கட்டத்தில் தீங்காக மாற வாய்ப்புள்ளது.அன்பு என்பது அனைவராலும் போற்றப்படும் உயர்ந்த ஒழுக்கம் ஆகும்.
கிரஷ் உணர்வில் ஒருவரின் வெளிப்புற தோற்றம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.காதல் உணர்வில் மனம் முக்கியத்துவம் பெறுகிறது.
நன்கு அறிமுகம் இல்லாத ஒருவரிடம் கிரஷ் ஏற்படலாம். நீண்ட காலம் அறிமுகம் கொண்ட ஒருவரிடம் காதல் ஏற்படும்.
ஆசை நிறைவேறியவுடன் அல்லது கவர்ச்சி பண்புகளை இழந்தவுடன் Crush எளிதில் தேய்ந்துவிடும்.காதல் என்றும் குறையாது மற்றும் மாறாது.
கிரஷ் என்பது பெரும்பாலும் டீன் ஏஜ் (Teenage) நபர்களுடன் தொடர்புடைய உணர்வு.காதல் என்பது பெரும்பாலும் புரிந்துகொள்ளும் திறன் உள்ளவர்களுடன் தொடர்புடையது.
Read  Passion Meaning in Tamil | விரிவான விளக்கம்

டீன் ஏஜ் Crush – சில வாக்கியங்கள்

இளம் வயதினர் பயன்படுத்தும் Crush வார்த்தையை சில வாக்கியங்களில் காணலாம்.

1. நான் அவள் மீது கிரஷ் ஆக இருக்குறேன் என்று அனைவருக்கும் தெரியும்.

2. அவள் \ அவன் என்னுடைய கிரஷ்.

3. அவளை பார்த்ததிலிருந்து அவளின் மீது காதல் (Crush) கொண்டேன்.

4. ஆரம்பத்தில் அவன் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது.

5. நான் அவன் மீது ஆர்வமாக இருக்கிறேன் என்று என் தோழிகளுக்கு தெரியும்.

6. அவன் நேற்று அந்த பெண்ணை பார்த்ததில் இருந்து, அவள் நினைவாகவே இருக்கிறான்.

7. நான் இன்று பேருந்தில் பயணம் செய்யும் போது ஒரு அழகான பெண்ணை பார்த்தேன். அந்த காட்சிகளை என்னால் மறக்க முடியவில்லை.

8. பெரும்பாலும் டீன் ஏஜ் காதல் ஒரு ஈர்ப்பால் மட்டுமே தோன்றுவதாகும். இது குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும்.

9. முன்பின் தெரியாத ஒருவரிடம் ஏற்படும் காதல் என்பது ஈர்ப்பால் உருவாகியதாகும். 

10. Crush என்பது தற்காலிகமாக ஏற்படும் ஒரு காதல் உணர்வு ஆகும்.

11. ஒரு காதலின் முதல் படி கிரஷ் தான் இருப்பினும் அனைத்து கிரஷ்களும் காதலாக மாறாது.

கிரஷ் வார்த்தையின் மற்ற வாக்கியங்கள் 

எதையாவது நசுக்கி அழித்தல்.

Read  நிலநடுக்கம் என்றால் என்ன? | Earthquakes Meaning in Tamil

உதாரணமாக:

1. அவர் பானையின் மீது ஏறி அதை கடினமாக நசுக்கினார் (Crush). இதனால் அந்த பானை பல துண்டுகளாக உடைந்தது.

2. ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் காவல் துறையினர் வைத்திருந்த தடுப்பு வேலியை நசுக்கினார்கள்.

3. லாரி ஆனது இருசக்கர வாகனத்தின் மீது ஏறி நசுக்கியது.

4. அரசாங்கம் ஏழைகளின் உரிமைகளை நசுக்குகிறது.

5. கரும்புலிருந்து அதன் சாற்றை பிரிப்பதற்காக இயந்திரத்தில் நசுக்குகிறார்கள்.

அழுத்தத்தை கொடுத்தல்.

உதாரணம்:

1. காற்றானது பூமியை அனைத்து பக்கத்தில் இருந்தும் சமமாக அழுத்துகிறது.

2. கடலின் ஆழத்தில் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும்.

கவரப்படுத்தல் 

உதாரணம்:

1. பெரும்பாலான இளைஞர்கள் பைக்கை வேகமாக ஓட்டுவதில் மோகம் கொண்டுள்ளனர்.

2. இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் கிரிக்கெட் மீது மோகம் கொண்டுள்ளனர்.

3. காதல் கதை சினிமாக்கள் இளைஞர்களை அதிகமாக கவர்ந்திழுக்கிறது.

கிரஷ் பற்றிய மேலும் சில வார்த்தைகள்:

English தமிழில் 
She is My Crush அவள் என்னுடைய கிரஷ் 
My First Crush என்னுடைய முதல் ஈர்ப்பு  
She is Crush Girl அவள் இனிமையானவள்
I was very Crush with her நான் அவளுடன் மிகவும் அன்பாக இருந்தேன்
I have met my first crush yesterdayநேற்று நான் எனது முதல் காதலை சந்தித்தேன் 

கடைசி வார்த்தைகள் 

Crush என்ற ஆங்கில வார்த்தையின் பல்வேறு அர்த்தங்கள் மற்றும் கிரஷ் மற்றும் காதல் இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை பற்றியும் தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

இதையும் படியுங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest