சைபர் குற்றம் என்றால் என்ன | Cyber Crime Meaning in Tamil

Cyber Crime Meaning in Tamil: தற்போது நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்க்கு காரணம் பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் நடைபெறுவதை பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததே ஆகும். எனவே இந்த Cyber குற்றங்களை பற்றிய அடிப்படை விவரங்களை காணலாம்.

Cyber Crime Meaning in Tamil 

Cyber = சைபர் அல்லது இணையம் 

Crime = குற்றம் 

சைபர் குற்றம் என்பதன் மற்ற வார்த்தைகள்:

  • சைபர் குற்றம் 
  • இணைய குற்றம் 
  • இன்டர்நெட் குற்றம் 
  • இணைய தகவல்களை திருடுதல் 
  • டிஜிட்டல் வடிவில் உள்ள ஆவணங்களை களவாடுதல் 
  • இணையத்தில் உலவும் தகவல்களை இடைமறித்து பெறுதல் 
  • இணையத்தின் மூலம் குற்ற செயல்களில் ஈடுபடுதல் 
  • தொழில்நுட்ப தகவல் திருட்டு 
Read  Passion Meaning in Tamil | விரிவான விளக்கம்

சைபர் கிரைம் என்றால் என்ன? | What is Cyber Crime?

சைபர் கிரைம் என்பது, மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் கணினி, இணையம் மூலமாக நடைபெறும் குற்றச் செயலாகும். இந்த சைபர் குற்றங்கள் கிரிமினல்களின் லாபத்திற்காகவும், கணினிகளை சேதப்படுத்த அல்லது செயலிழக்க வைக்க நடத்தப்படுகிறது. சிலர் தீங்கிழைக்கும் நச்சு நிரல்களை (Virus) பரப்பி இணையத்தில் பரப்பி பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

சைபர் குற்றங்களின் நோக்கங்கள் 

Cyber Meaning in Tamil

சைபர் குற்றங்களை செய்யும் கிரிமினல்களுக்கு பின்வரும் சில நோக்கங்கள் இருக்கும்.

  • தனிப்பட்ட நபர்களின் அந்தரங்க தகவல்களை அவரின் அனுமதி இல்லாமல் இணையம் வழியே திருடுதல் 
  • அந்த தகவல்களை கொண்டு அவர்களை மிரட்டுதல், பணிய வைத்தல்.
  • இன்டர்நெட் பேங்கிங் Login தகவல்களை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தகவல்களை திருடி அதன் மூலம் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்தல்.
  • சில நபர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அதை இணையத்தில் பரப்புதல்.
  •  கணினி அல்லது சாதனங்களை சேதப்படுத்துதல் அல்லது செயலிழக்க செய்தல்.
  • ஒருவரின் அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக ஆன்லைன் வழியாக அவரை கண்காணித்தல்.
  • சட்டவிரோதமாக லாபத்தை பெரும் நோக்கில் தகவல்களை மாற்றுவது, சேதப்படுத்துவது, அழிப்பது.
Read  RAM என்றால் என்ன? | RAM Meaning in Tamil

சைபர் குற்றங்களை தடுப்பது எப்படி?

How to Prevent Cybercrime: சைபர் குற்றங்களை முழுமையாக ஒழிக்க முடியாது என்றாலும், சில தற்காப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் அதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். அவை என்ன என்பதை காண்போம்.

  • மின்னஞ்சல்கள், SMS, சமூக வலைத்தளங்கள் ஆகியற்றில் வரும் தேவையற்ற இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது. ஏனெனில் அவ்வாறு கிளிக் செய்வதால் நம்முடைய சாதனத்தை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது.
  • அனைத்து பயன்பாடுகளிலும் Two-Factor Authentication (2FA) யை ஆன் செய்ய வேண்டும்.
  • உங்களின் வங்கிக்கணக்கு தகவல்கள், ATM Card தகவல்கள், Credit Card பற்றிய விவரங்கள் போன்றவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது.
  • ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள் போன்ற பல்வேறு இடங்களில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஸ்வைப் செய்து பணத்தை செலுத்துவதை விட, QR Code, UPI அடிப்படையிலான செயலிகளின் மூலம் செலுத்தலாம்.
  • மொபைல் மற்றும் கணினிகள் அவ்வப்போது செயலிகள், சாப்ட்வேர்களை அப்டேட் செய்ய வேண்டும்.
  • உங்களின் சாதனத்தில் முக்கியமான தகவல்கள் இருந்தால், அதை Backup எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களின் சாதனம் செயல் இழந்தாலும், தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
Read  லேப்டாப் என்றால் என்ன? | Laptop Meaning in Tamil

முடிவுரை 

இந்த பதிவின் மூலம் சைபர் கிரைம் மற்றும் அதை பற்றிய சில அடிப்படை தகவல்களை அறிந்திருப்பீர்கள். இதை பற்றிய உங்களின் அறிவை வளர்த்துக்கொள்வதின் மூலம் இணையத்தை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

இதையும் படியுங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest