Debit Card Meaning in Tamil | டெபிட் கார்டு என்றால் என்ன?
இன்று வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நிச்சயமாக ஒரு டெபிட் கார்டையும் வைத்திருப்பார்கள். ஏனெனில் இது அவர்களின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த டெபிட் கார்டை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம், உங்களின் தேவைகளுக்கு Debit Card யை இன்னும் சிறப்பாக பயன்படுத்த முடியும்.
டெபிட் என்றால் என்ன? இது எதற்க்காக பயன்படுகிறது மற்றும் இது எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றிய பல்வேறு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
Debit Card Meaning in Tamil | டெபிட் கார்டு என்றால் என்ன?
டெபிட் கார்டு என்பது, உங்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை ATM இயந்திரத்தின் மூலம் எடுக்க உதவும் ஒரு பிளாஸ்டிக் அட்டையாகும். பொதுவாக டெபிட் கார்டை ATM Card என்றும் அழைப்பார்கள். இந்த Debit Card யை பயன்படுத்தி நீங்கள் பணத்தை எடுக்கும்போது, அது உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக கழிக்கப்படும்.
டெபிட் கார்டை பயன்படுத்தி ATM இயந்திரத்தில் பணத்தை எடுப்பது மட்டும் இல்லாமல் Recharge, Bill Payment மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை போன்ற பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
டெபிட் கார்டின் மற்ற பெயர்கள்
பொதுவாக வங்கிகளில் இதை டெபிட் கார்டு என்றே அழைப்பார்கள். இருப்பினும் இது வேறு சில பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அவை பின்வருமாறு:
- ATM Card
- Bank Card
- Withdrawal Card
- Plastic Card
- Cash Card
- Payment Card
- Electronic Check Card
- Key Card
Debit Card இன் அமைப்பு
டெபிட் அட்டையானது பின்வரும் தகவல்களை கொண்டிருக்கும்.
- வங்கியின் பெயர்
- EMV Chip
- 16 இலக்க Debit Card Number
- Expiry Date
- Card Holder Name
- Debit Card யை தயாரித்த நிறுவனத்தின் பெயர்
- Magnetic Stripe
- CVV Number
டெபிட் கார்டு எவ்வாறு வேலை செய்கிறது?
நீங்கள் Debit Card க்கு Apply செய்து பெற்ற பிறகு, அதை ஒரு ATM Machine மூலமாகவோ அல்லது Internet Banking மூலமாகவோ Activate செய்ய வேண்டும். Activate செய்த பிறகு டெபிட் கார்டை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
நீங்கள் வங்கியில் டெபிட் கார்டை பெறும்போது அந்த கார்டை உங்களின் வங்கிக்கணக்குடன் லிங்க் செய்து கொடுப்பார்கள். எனவே உங்களின் Bank Account இல் பணம் இருந்தால் அதை டெபிட் கார்டை பயன்படுத்தி எடுக்கலாம்.
ATM இயந்திரத்தில் டெபிட் கார்டை பயன்படுத்தி பணத்தை Withdrawal செய்யும்போது 4 இலக்க ATM PIN Number யை Enter செய்ய வேண்டும். அப்பொழுது தான் உங்களால் பணத்தை எடுக்க முடியும். இதன் மூலம் உங்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் ATM Card யை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியாது.
நீங்கள் டெபிட் கார்டை ATM இயந்திரத்தில் சொருகும்போது, அது சரியான டெபிட் கார்டா என்று சரிபார்க்கும். டெபிட் கார்டு சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களின் வங்கிக்கணக்குடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தும். பிறகு எடுக்க வேண்டிய தொகையை என்டர் செய்து, கடைசியாக ATM PIN Number யை என்டர் செய்ய வேண்டும்.
நீங்கள் என்டர் செய்த தொகை உங்களின் வங்கிக்கணக்கில் இருந்தால், பணம் Withdraw ஆகும். இவ்வாறு தான் டெபிட் கார்டு வேலை செய்கிறது.
டெபிட் கார்டின் பயன்கள் | Benefits of Debit Card
- உங்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை Withdrawal செய்ய நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. ATM Card யை கொண்டே பணத்தை எடுக்கலாம்.
- பகல் அல்லது இரவு போன்ற எந்த நேரத்திலும் பணத்தை எடுக்க அல்லது வங்கி இருப்பை சரிபார்க்க டெபிட் கார்டு உங்களை அனுமதிக்கிறது.
- டெபிட் கார்டை கொண்டு ஆன்லைன் ஷாப்பிங், பில்களை செலுத்துதல், ரீச்சார்ஜ் செய்தல் மற்றும் கடைகளில் கட்டணங்களை செலுத்துதல் போன்ற பல்வேறு பரிவர்த்தனைகளை செய்யலாம்.
- டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது 4 இலக்க பின் நம்பரை உள்ளிட வேண்டும். இது நீங்கள் மட்டும் தான் பரிவர்த்தனையை அங்கீகரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
- நீங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போதும், வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு SMS மூலம் விழிப்பூட்டல்களை பெறுவீர்கள்.
- டெபிட் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ நீங்கள் New Debit Card க்கு Apply செய்யலாம்.
டெபிட் கார்டின் குறைபாடுகள்
- நீங்கள் டெபிட் கார்டை பயன்படுத்துபவராக இருந்தால், ஆண்டிற்கு ஒருமுறை Annual Fee செலுத்த வேண்டும். இந்த கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும்.
- டெபிட் கார்டு தொலைந்துபோதல், சேதமடைதல் போன்ற காரணங்களுக்கு புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- அட்டையை தொலைத்துவிட்டால் அது வேறு யாருக்காவது கிடைக்கும் பட்சத்தில் பணம் திருடப்பட வாய்ப்புள்ளது.
- டெபிட் கார்டுகளின் மூலம் ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டும் தான் எடுக்க முடியும். அதாவது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் எடுக்க முடியாது.