Meaning

Internet என்றால் என்ன? Internet Meaning in Tamil

இன்று Internet என்பது அனைவரும் பயன்படுத்தும் அடிப்படை தேவையாகிவிட்டது. ஒவ்வொரு நபரும் பல்வேறு தேவைகளுக்காக இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். தற்போது பல்வேறு அரசாங்க சேவைகளும் இணையம் மூலம் தான் வழங்குகின்றன. இவ்வாறு வேலைகள் முதல் பொழுதுபோக்குகள் வரை இன்டர்நெட் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

இந்த இன்டர்நெட் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

Internet Meaning in Tamil 

Internet என்ற வார்த்தைக்கான தமிழ் சொற்கள் 

  • இணையம் 
  • சர்வதேச கணினி வலையமைப்பு 
  • இன்டர்நெட் 
  • வலைத்தளம் 
  • தரவுகளை பரிமாறிக்கொள்ள உதவும் ஊடகம் 
  • உலகளாவிய வலைப்பின்னல் அமைப்பு 
  • உலகில் உள்ள பெரும்பாலான கணினிகளின் பிணைப்பு

இன்டர்நெட் என்றால் என்ன?

இன்டர்நெட் என்பது சாதனங்களுக்கு இடையே தொடர்பு கொள்ள உதவும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல கணினி நெட்வர்க்களின் உலகளாவிய அமைப்பாகும். இந்த இன்டர்நெட் ஆனது, நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பல்வேறு தகவல்களை பெறவும், தரவுகளை பரிமாறிக்கொள்ளவும் உதவுகிறது.

Read  RAM என்றால் என்ன? | RAM Meaning in Tamil

இது வயர்லெஸ் மற்றும் ஆப்டிகல் தொழில்நுட்பங்களால் இயக்கப்படுகிறது. தனியார், பொது, கல்வி, வணிகம், அரசாங்கம் போன்ற பல்வேறு நெட்வர்க்குகள் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டிருக்கும். 

தொலைபேசி, மின்னஞ்சல்கள், செயலிகள், காணொளிகள், இணைய தளங்கள், வழிகாட்டிகள் போன்றவை இன்டர்நெட் உதவியுடன் தான் இயங்குகிறது. இன்று நமக்கு வேண்டிய அனைத்து தகவல்களும் விரல் நுனியில் உள்ளது என்றால், அதற்க்கு காரணம் இன்டர்நெட் என்று சொன்னால் அது மிகையாகாது.

How to Work Internet?

இன்டர்நெட் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் அதை பற்றிய புரிதல் உங்களுக்கு ஏற்படும். எனவே Internet வேலை செய்யும் விதத்தை தெரிந்து கொள்வோம்.

Internet Meaning Tamil

 

நீங்கள் உங்களின் மொபைல் அல்லது கணினி மூலம் பார்க்கும் Youtube காணொளிகள், இணையதளங்கள், சமூக வலை தளங்கள் போன்ற அனைத்தும், உலகில் உள்ள ஏதாவது ஒரு டேட்டா சென்டரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக Youtube இல் பார்க்கும் வீடியோக்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள கூகிளின் டேட்டா சென்டர்களில் சேமிக்கப்பட்டுள்ளன.

Read  Youtube Meaning in Tamil | யூடியூப் பற்றிய விளக்கம்

அந்த டேட்டா சென்டரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வீடியோக்களை தான் நாம் தினமும் யூடூப்பில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சரி அங்கு இருந்து எப்படி நம் மொபைல் போன் அல்லது கணினி மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று பார்க்கலாம்.

நீங்கள் உங்களின் மொபைல் அல்லது கணினியில் இருந்து ஒரு கோரிக்கையை அனுப்புவதாக கொள்வோம். அதாவது பிரௌசரில் youtube.com என்று Type செய்து கிளிக் செய்வதாக எடுத்துக்கொள்வோம். அவ்வாறு கிளிக் செய்தவுடன் பிரௌசர் ஆனது அதை முதலில்  DNS Server க்கு அனுப்பி அந்த இணையத்தளத்திற்க்கான IP Address யை பெற்றுக்கொள்ளும்.

பிறகு உங்களின் கோரிக்கையை அந்த இணையத்தளத்திற்க்கான IP முகவரிக்கு, அதாவது சர்வருக்கு அனுப்பும். அந்த சர்வர் ஆனது  கோரிக்கையை பெற்ற பிறகு, அங்கிருந்து டிஜிட்டல் வடிவில் Data Transfer ஆகும். அந்த சர்வரில் இருந்து டேட்டா ஆனது ஆப்டிகல் பைபர் மூலம் ஆயிரக்ணக்கான மைல்கள் பயணிக்கும்.

நீண்ட தூரம் பயணித்த பிறகு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டவர்களின் மூலம் சிக்கனல்களாக பரப்பப்பட்டு மொபைல் அல்லது கணினிகளில் பெறப்படுகிறது. இந்த செயல்முறைகள் அனைத்தும் மிகக்குறுகிய நேரத்தில் அதாவது ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் நடைபெறுகிறது.

Read  கம்ப்யூட்டர் என்றால் என்ன? | Computer Meaning in Tamil

இவ்வாறு தான் இன்டர்நெட் வேலை செய்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole