LED என்றால் என்ன? | LED Meaning in Tamil
LED என்ற வார்த்தையை நீங்கள் நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த LED என்பதற்கான அர்த்தம் என்ன? மற்றும் அது எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த பதிவை முழுவதும் படியுங்கள்.
Table of Contents
LED Meaning in Tamil
LED என்பதன் Full Form Light Emitting Diode ஆகும். இந்த மூன்று வார்த்தைகளின் சுருக்கத்தையே LED என்று என்கிறோம்.
மேலும் இதன் மற்ற அர்த்தங்கள் பின்வருமாறு:
- ஒளி உமிழ் டையோடு
- குறைக்கடத்தி (Semi Conductor)
- மின்னாற்றலை ஒளி ஆற்றலாக மாற்றும் சாதனம்
- ஒளி விளக்கு
- போட்டான்களை வெளியிடும் டையோடு
- எலக்ட்ரானிக்ஸ் துறையில் பயன்படுத்தப்படும் வார்த்தை
- முன்னோக்கு பயாஸில் மட்டும் வேலை செய்யக்கூடியது
LED என்றால் என்ன?
LED என்பது மின்சாரத்தை செலுத்தும் போது ஒளியை உமிழக்கூடிய ஒரு குறைக்கடத்தி (Semi Conductor) ஆகும். இந்த LED ஆனது முன்னோக்கு சார்பில் மட்டுமே இயங்கக்கூடியது. அதாவது முன்னோக்கு சார்பில் மின்சாரத்தை அனுமதித்து ஒளியை உமிழ்கிறது. பின்னோக்கு சார்பில் மின்சாரத்தை அனுமதிக்காது. இதனால் ஒளியையும் உமிழாது.
LED இன் வகைகள்
LED களின் பல்வேறு வகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
S.No | Types of LED in English | எல்.இ.டி இன் வகைகள் தமிழில் |
1 | Miniature LED | மினியேச்சர் LED |
2 | High-Power LED | உயர்-சக்தி LED |
3 | Flash LED | பிளாஷ் LED |
4 | Bi and Tri-Colour | இரு மற்றும் மூன்று வண்ணம் LED |
5 | Red Green Blue LED | சிவப்பு பச்சை நீல LED |
6 | Alphanumeric LED | எண்ணெழுத்து LED |
7 | Lighting LED | லைட்டிங் LED |
LED விளக்குகள் எப்படி வேலை செய்கிறது?
ஒளி என்பது அணுக்களால் வெளியிடப்படும் ஒரு வகை ஆற்றல் ஆகும். இதற்க்கு வேகம் இருக்கிறது ஆனால் நிறை இல்லை. ஒளியின் அடிப்படை துகள்கள் போட்டான்கள் ஆகும். அதாவது ஒரு வீட்டின் அடிப்படை துகள் செங்கல் என்று சொல்லலாம். அதே போன்று தான் ஒளியின் அடிப்படை துகள்களாக போட்டான்கள் இருக்கின்றன.
எலக்ட்ரான்கள் நகரும் போது அதன் ஆற்றல் போட்டான்களாக வெளியிடப்படுகிறது. பொதுவாக ஒரு அணுவில் இருக்கும் எலக்ட்ரான்கள் வெவ்வேறு ஆற்றல்களை பெற்றிருக்கும். எலக்ட்ரான்கள் அதிக ஆற்றல் மட்டத்திலிருந்து குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு தாவும்போது ஆற்றலை வெளியிடும்.
LED ஆனது ஒரு PN Junction வகை டையோடு ஆகும். டையோடில் முன்னோக்கு சார்பில் மின்சாரத்தை செலுத்தும் போது P இல் நேர் மின்னோட்டமும், N இல் எதிர்மின்னோட்டமும் அளிக்கப்படும். இதனால் N பகுதியில் இருக்கும் எலக்ட்ரான்கள் P பகுதியை நோக்கி தள்ளப்படும். இவ்வாறு எலக்ட்ரான்கள் நகர்வதால் அதன் ஆற்றல் போட்டான்களாக வெளியிடப்படும். LED விளக்குகள் இதன் அடிப்படையில் தான் செயல்படுகிறது.