PDF Meaning in Tamil | PDF என்பதின் அர்த்தம் என்ன?
நீங்கள் PDF என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். முக்கியமாக கணினி, லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் போன்ற சாதனங்களை பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம் இந்த வார்த்தையை அறிந்திருப்பீர்கள். ஆனால் இதற்கான முழு அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
Table of Contents
PDF Meaning in Tamil | PDF என்பதன் அர்த்தம்
PDF என்பதின் முழு ஆங்கில விரிவாக்கம் Portable Document Format ஆகும். இதை தமிழில் கையடக்க ஆவண வடிவமைப்பு என்று சொல்லலாம். இது ஒரு ஆவணத்தின் வடிவமாகும் (Document Format). இந்த PDF ஆனது அடோப் சிஸ்டத்தால் (Adobe Systems) உருவாக்கப்பட்டது.
ஒரு சாதனத்தில் இருக்கும் வன்பொருள், மென்பொருள் அல்லது இயக்க முறைமை (Operating System) போன்ற எதையும் கருத்தில் கொள்ளாமல், ஆவணங்களை நம்பகத்தன்மையுடன் வழங்குவதற்கும் பரிமாறுவதற்கும் இந்த PDF Format பயன்படுத்தப்படுகிறது.
PDF ஆவணங்களில் என்னென்ன உள்ளடக்கம் இருக்கும்?
பொதுவாக PDF வடிவில் இருக்கும் ஆவணங்களில் பல்வேறு உள்ளடக்கங்கள் இருக்கலாம். அதாவது PDF ஆவணங்களில் உரை, படங்கள், ஹைப்பர்லிங்க்கள், படிவங்கள் மற்றும் மல்டிமீடியா கூறுகள் போன்ற பல்வேறு கூறுகள் இருக்கலாம். ஒரு PDF ஆவணத்தை எந்த சாதனத்தில் அல்லது இயங்குதளங்களில் திறந்தாலும், அது ஒரே மாதிரியாக தான் தோன்றும்.
எனவே படிவங்கள், மின் புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் சட்ட ஒப்பந்தங்கள் போன்ற அசல் வடிவமைப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய ஆவணங்களை பகிர்வதற்கு PDF ஒரு பிரபலமான தேர்வாக உள்ளது.
PDF ஆவணங்களை எப்படி உருவாக்குவது?
PDF ஆவணங்களை பல்வேறு வழிகளில் உருவாக்க முடியும். MS Word, Google Document போன்ற Word Processing மென்பொருள்கள், கிராபிக்ஸ் டிசைன் மென்பொருள் மற்றும் ஸ்கேனிங் சாதனங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து PDF ஆவணங்களை உருவாக்கலாம். மேலும் ஆன்லைனில் இலவசமாக உரை ஆவணங்கள் மற்றும் படங்களை PDF ஆவணமாக மாற்றம் செய்யும் வசதிகளும் உள்ளன.
Adobe Acrobat Reader என்ற மென்பொருள் அல்லது மற்ற மூன்றாம் தரப்பு PDF viewers மென்பொருள்கள் மூலம் PDF ஆவணங்களை ஓபன் செய்து பார்க்கலாம் அல்லது அதில் திருத்தங்களை செய்யலாம். மேலும் PDF ஆவணங்களில் உள்ள ஒரு முக்கியமான வசதி என்னவென்றால், PDF ஆவணத்தை கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி மற்றவர்கள் அணுகாதவாறு பாதுகாக்க முடியும்.
உதாரணமாக, நீங்கள் ஆதார் இணையதளத்தில் இருந்து உங்களின் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யும்போது, அது PDF வடிவில் இருப்பதை காணலாம். மேலும் அந்த ஆதார் ஆவணம் கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. உங்களின் பெயரின் முதல் 4 எழுத்துக்கள் மற்றும் பிறந்த ஆண்டு இதை கடவுச்சொல்லாக உள்ளிட்டால் மட்டுமே, ஆதார் அட்டையை ஓபன் செய்ய முடியும்.