PF (Provident Fund) என்றால் என்ன? | PF Meaning in Tamil
PF Meaning in Tamil: பொதுவாக PF என்ற வார்த்தை அனைவரும் சரளமாக பயன்படுத்துவதை காணலாம். முக்கியமாக மத்திய, மாநில மற்றும் தனியார் துறைகளில் வேலை புரியும் அனைத்து தொழிலாளர்களும் பேசப்படும் முக்கிய வார்த்தையாக PF உள்ளது. இது தொழிலாளர்களின் எதிர்கால நலன் குறித்து என்பதால், இதை பற்றி அனைவரும் தெரிந்திருப்பது அவசியமாகும். PF என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பும் நபர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Table of Contents
PF என்றால் என்ன? | PF Meaning in Tamil
PF அல்லது Provident Fund என்பது தொழிலாளர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆகும். இது தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் மாத ஓய்வூதியம், விபத்து காப்பீடு போன்ற பல்வேறு பண பலன்களை வழங்குகிறது. PF நிதியானது EPFO என்று சொல்லப்படும் Employees Provident Fund Organisation என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இதை இன்னும் விரிவாக கூற வேண்டும் என்றால், EPFO இல் உறுப்பினராக இருக்கும் ஒரு தொழிலாளியின் மாத சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அதை அந்த தொழிலாளியின் PF Account இல் டெபாசிட் செய்வார்கள். மேலும் அதே அளவு பணத்தை முதலாளி தரப்பில் இருந்தும் செலுத்தப்படும்.
தொழிலாளி மற்றும் முதலாளி இந்த இருவரின் பங்களிப்பும் தொடர்ந்து PF கணக்கில் செலுத்திக்கொண்டே வருவார்கள். இது எதிர்காலத்தில் தொழிலாளிக்கு ஒரு மொத்த தொகையாக கிடைக்கும். இதுமட்டும் இல்லாமல் தொழிலாளி ஒய்வு பெரும் வயதில் மாதம் ஓய்வூதியம், பணியில் இருக்கும்போது இறந்துவிட்டால் EDLI என்ற விபத்து காப்பீடு திட்டம் போன்ற மற்ற பலன்களையும் பெற முடியும்.
How to Calculate PF Contribution in Salary & Check PF Balance
PF பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியுமா?
தொழிலாளர்களின் PF Account இல் இருக்கும் மொத்த தொகையை எடுக்க ஓய்வூதிய வயது வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்க்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து விலகி இரண்டு மாதங்களுக்கு பிறகு Final Settlement படிவமான Form 19 யை விண்ணப்பித்து மொத்த தொகையையும் Withdraw செய்துகொள்ளலாம்.
அல்லது PF கணக்கில் உள்ள ஒரு சிறு தொகை மட்டும் உங்களுக்கு தேவைப்பட்டால், PF Advance படிவமான Form 31 யை விண்ணப்பித்து பணத்தை திரும்பப்பெறலாம். இதை நீங்கள் பணியில் இருக்கும்போது எடுக்கலாம்.
ஆனால் மாத ஓய்வூதியத்தை 50 வயதிற்கு மேல் தான் பெற முடியும். 50 வயதில் முதல் 57 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் மாத ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தால் குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தை பெறலாம். 58 வயதில் விண்ணப்பித்தால் Regular ஓய்வுதியதையும், 59 அல்லது 60 வயதில் விண்ணப்பிக்கும்போது உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தையும் பெறலாம்.
இந்த பதிவில் PF தொடர்பான சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.