புஞ்சை நிலம் என்றால் என்ன?| Punjai Land Meaning in Tamil
பொதுவாக தமிழ்நாட்டில் விவசாய நிலங்களின் வகைகளை குறிப்பிடும்போது நஞ்சை மற்றும் புஞ்சை என்ற இரண்டு வார்த்தைகளை பயன்படுத்துவோம். ஆனால் அதற்க்கு அர்த்தம் என்ன என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த பதிவில் புஞ்சை என்றால் என்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
Table of Contents
புஞ்சை நிலம் என்றால் என்ன?| Punjai Land Meaning in Tamil
புஞ்சை நிலம் என்பது நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத, மழை நீரை மட்டுமே நீர் ஆதாரமாக கொண்டிருக்கும் நிலப்பகுதியாகும். புஞ்சை நிலம் என்பதை புன்செய் நிலம் என்றும் அழைக்கலாம். இந்த வகையான நிலப்பரப்பில் மழைப்பொழிவை நம்பியே விவசாயிகள் பயிரிடுகின்றனர். நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் சொந்தமாக ஆழ்துளை கிணறு போன்ற நீர் ஆதாரங்களை உருவாக்கி பயிர்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
புஞ்சை நிலத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள்
புஞ்சை நிலம் (Punjai Land) மழை நீரை நம்பியுள்ளதால் வருடம் முழுவதும் நீர் கிடைப்பதில்லை. எனவே புஞ்சை நிலத்தில் நீர்த்தேவை குறைவாக தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, பருத்தி, கேழ்வரகு, கம்பு, வரகு, வேர்க்கடலை, மிளகாய், சோளம், தினை, சிறுதினை, குதிரைவாலி, சாமை, பெருஞ்சாமை, செஞ்சாமை, பூச்செடிகள் போன்ற பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.
சில புன்செய் நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. இது நீர் தேவையை குறைத்து சிறந்த நீர் மேலாண்மைக்கு வழி வகுக்கிறது. சொட்டு நீர் பாசன முறையில் தேவையான இடத்திற்கு மட்டுமே நீர் செல்வதால், தேவைற்ற செடிகள் மற்றும் புற்கள் வளர்வது தடுக்கப்படுகிறது.
புஞ்சை நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க முடியுமா?
புஞ்சை நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முடியும். ஆனால் அந்த நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாததாகவோ அல்லது பல வருடங்களாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் தரிசு நிலங்களாகவோ இருக்க வேண்டும். இதற்க்கு NOC என்று சொல்லப்படும் தடையில்லாத சான்று வாங்க வேண்டும். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்து சரிபார்த்த பிறகு வீட்டு மனைகளுக்கான ஒப்புதலை வழங்குவார்கள்.
தற்போது நன்செய் நிலங்களை விட புன்செய் நிலங்களையே அதிகம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் இது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படும் என்பதால் அதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
FAQ
1. புஞ்சை நிலம் என்றால் என்ன?
புஞ்சை நிலம் என்பது வானம் பார்த்த பூமியாகும். அதாவது நீர் ஆதாரத்திற்கு மழையை மட்டுமே நம்பி இருக்கும் நிலமாகும்.
2. தரிசு நிலம் என்றால் என்ன?
தரிசு நிலம் என்பது நீண்ட காலமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் பயனற்று இருக்கும் நிலமாகும்.
3. புன்செய் நிலத்தில் வீடு கட்டலாமா?
புன்செய் நிலத்தில் கண்டிப்பாக வீடு கட்டலாம். ஆனால் புஞ்சை நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி வீடு கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதலை பெற வேண்டும்.