RAM என்றால் என்ன? | RAM Meaning in Tamil

RAM என்ற வார்த்தையை நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். ஸ்மார்ட் போன், கணினி போன்றவற்றை வாங்கும்போது RAM யையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் முக்கிய விவரக்குறிப்புகளில் (Specification) ரேம் நினைவகம் முக்கிய பங்கை வகிக்கிறது.

எனவே ரேம் நினைவகத்தை பற்றி அடிப்படை விவரங்களை தெரிந்துகொள்வது சிறப்பானதாக இருக்கும். இந்த பதில் அதை பற்றிய சில முக்கிய தகவல்களை காணலாம்.

RAM Meaning in Tamil 

RAM = Random Access Memory 

RAM யை குறிப்பிடக்கூடிய மற்ற வார்த்தைகள்:

  • ரேம் 
  • ரேண்டம் ஆக்ஸஸ் மெமரி 
  • நினைவகம் 
  • தரவுகளை சேமிக்கக்கூடிய மெமரி 
  • தற்காலிக நினைவகம் (Short Term Memory)
  • CPU இல் இருக்கும் முக்கிய கருவி 
  • Transistor மற்றும் Capacitor ஆல் உருவாக்கப்படும் நினைவகம் 
  • மின்னணு சுற்று கருவி 
  • குறைக்கடத்திகளால் (Semi Conductors) ஆன கருவி 
Read  கிரஷ் என்றால் என்ன? | Crush Meaning in Tamil

RAM என்றால் என்ன?

RAM - Random Access Memory

RAM என்பது மொபைல், கணினி போன்ற கம்ப்யூட்டிங் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வன்பொருள் ஆகும். அப்ளிகேஷன் புரோகிராம்கள் செயல்பாட்டில் இருக்கும் போது, அவற்றின் தரவுகள் தற்காலிகமாக இந்த RAM Memory இல் சேமிக்கப்படும். கணினியை அணைக்கும் போது ரேம் மெமரியில் உள்ள தரவுகள் இழக்கப்படும்.

ஒரு கம்ப்யூட்டிங் சாதனம் வேகமாக செயல்படுவதில் ரேம் மெமரி முக்கிய பங்கை வகிக்கிறது.

RAM Memory இன் வேலை என்ன? | Work of RAM Memory 

ரேம் நினைவகத்தின் உதவியால் தான் அனைத்து செயலிகள், சாப்ட்வேர்கள் இயங்குகின்றன. இந்த ப்ரோக்ராம்கள் இயங்க தற்காலிகமான நினைவகமாக செயல்படுகிறது.

நாம் மொபைல் போனில் ஒரு செயலியை திறப்பதாக கொள்வோம். அந்த செயலி இயங்குவதற்கு CPU இன் உதவி தேவை. எனவே RAM மெமரி ஆனது நிரந்தர நினைவகத்தில் (ROM) உள்ள அந்த செயலியின் தரவுகளை எடுத்து Process செய்ய CPU க்கு வழங்குகிறது.

இவ்வாறு அந்த செயலி இயங்கும் வரை அவற்றின் தரவுகளை RAM மெமரியில் வைத்திருக்கும். ஒருவேளை அந்த செயலியை Close செய்துவிட்டால், RAM இல் உள்ள அந்த செயலியின் தரவுகளை இழந்துவிடும். 

Read  LED என்றால் என்ன? | LED Meaning in Tamil

இதை இன்னும் எளிதாக கூற வேண்டுமானால், ஒரு பணத்தை சேமிக்கும் லாக்கரை நிரந்தர நினைவகமாக (ROM) எடுத்துக்கொள்வோம். அதில் உள்ள பணத்தை எண்ணும் நபர் CPU ஆகவும், பணத்தை எண்ணுவதற்கு வசதியாக ஒரு டேபிளை RAM நினைவகமாகவும் நினைத்துக்கொள்வோம்.

அந்த நபர் லாக்கரில் உள்ள பணத்தை டேபிளின் மீது வைத்து எண்ணி, சிறிது நேரத்தில் அதை மீண்டும் லாக்கரில் வைத்துவிடுகிறார். அந்த டேபிளை போன்று தான் ரேம் மெமரியும் ஆகும். ஒரு ப்ரோகிராமை Run செய்யும் போது, ரேம் மெமரி ஆனது தற்காலிகமாக CPU க்கு தேவைப்படும். 

அந்த ப்ரோகிராமை மூடிவிட்டால் ரேம் மெமரியில் உள்ள டேட்டாக்களை இழந்துவிடும். இவ்வாறு ரேம் ஆனது ஒரு தற்காலிக நினைவகமாக செயல்படுகிறது.

ரேம் வகைகள் | Types of RAM 

ரேம் நினைவகம் இரண்டு வகைப்படும்.

DRAM vs SRAM Tamil

1. Dynamic Random Access Memory (DRAM)

இது ஒரு நிலையற்ற நினைவகம் (Volatile Storage) ஒவ்வொரு சில மில்லி வினாடிகளில் தன்னிடம் இருக்கும் தகவல்களை புதுப்பித்து கொண்டே இருக்கும். Power இருந்தால் மட்டுமே இது தரவை சேமிக்கும். இது மலிவான விலையில் கிடைப்பதால் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது.

Read  கம்ப்யூட்டர் என்றால் என்ன? | Computer Meaning in Tamil

2. Static Random Access Memory (SRAM)

தரவை சேமிக்க Power தேவைப்படும். ஆனால் DRAM யை போன்று இதை தொடர்ந்து புதுப்பிக்க தேவையில்லை. SRAM ஆனது வேகமானது மற்றும் DRAM யை விட குறைவான சக்தியை பயன்படுத்துகின்றன.

இதன் விலை அதிகம் என்பதால் SRAM யை முக்கியமாக கணினியின் செயலிக்குள் Cache Memory ஆக சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.

முடிவுரை 

ரேம் நினைவகத்தில் உட்பிரிவில் இன்னும் பல வகைகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் குறிப்பிடவில்லை. இந்த பதிவில் RAM Memory யை பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்துகொண்டீர்கள். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest