Velocity Meaning in Tamil – திசைவேகம் என்பதன் பொருள்
Velocity அல்லது திசைவேகம் என்ற சொல் இயற்பியலில் அதிகமாக பயன்படுத்தப்படும் சொல்லாகும். இதற்கான அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
Velocity Meaning in Tamil
திசைவேகம் என்பது ஒரு பொருள் பயணம் செய்யும் திசையில் ஏற்படும் இடப்பெயர்ச்சி ஆகும். அதாவது, ஒரு பொருள் பயணம் செய்யும்போது, குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட திசையில் அந்த பொருள் இடம் பெயரும் தூரமே திசைவேகம் (Velocity) ஆகும்.
திசைவேகம் ஆனது இயற்பியலில் ஒரு அடிப்படை concept ஆகும். இது முடுக்கம் மற்றும் தூரம் போன்ற பிற முக்கியமான concept களுடன் நெருக்கமாக தொடர்புடையது. முடுக்கம் என்பது நேரத்தைப் பொறுத்து திசைவேக மாற்றத்தின் வீதமாகும். அதே சமயம் தூரம் என்பது ஒரு பொருள் பயணித்த மொத்தத் தொகையாகும்.
திசைவேகம் என்பது ஒரு வெக்டர் அளவு ஆகும். ஏனெனில் அது அளவு மற்றும் திசை இரண்டையும் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு கார் கிழக்கு நோக்கி வினாடிக்கு 10 மீட்டர் (m/s) வேகத்தில் பயணித்தால், அதன் வேகம் மற்றும் திசை இரண்டையும் குறிக்க அதன் திசைவேகம் +10 m/s என எழுதப்படும். ஒருவேளை அந்த கார் திசையை மாற்றினால், அதன் வேகம் மாறாமல் இருந்தாலும், அதன் திசைவேகம் மாறும்.
திசைவேகத்திற்கான சூத்திரம்: திசைவேகம் = இடப்பெயர்ச்சி / நேரம் |
Velocity அல்லது திசைவேகத்திற்கு தொடர்புடைய மற்ற வார்த்தைகள்:
Speed | வேகம் |
Velocity change | திசைவேக மாற்றம் |
Velocity ratio | திசைவேக விகிதம் |
Velocity vector | திசைவேக வெக்டர் |
Terminal velocity | முனைய திசைவேகம் |
Instantaneous velocity | உடனடி திசைவேகம் |
Relative velocity | தொடர்புடைய திசைவேகம் |
Circular velocity | வட்ட திசைவேகம் |