Vlog Meaning in Tamil | Vlog என்றால் என்ன?
நீங்கள் Vlog என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். இந்த பதிவின் மூலம் அதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். Vlog என்பதன் Meaning என்ன? மற்றும் Vlogging யை தொடங்க என்னென்ன தேவை போன்ற தகவல்களை காணலாம்.
உங்களின் ஆன்லைன் பார்வையாளர்களுடன் என்றும் தொடர்பில் இருக்கவும், புதிய Followers யை அதிகரிக்கவும் Vlogging ஒரு சிறந்த முறையாகும். தற்போது Youtube, Facebook, Instagram, இணையதளம் போன்ற ஆன்லைன் தளங்களில் Vlog யை தொடங்குபவர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர்.
உங்களுக்கு Vlog தொடங்குவதற்கு ஆர்வமாக இருந்தால், முதலில் அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது அவசியமாகும். சரி வாருங்கள் அதை பற்றி தெரிந்துகொள்வோம்.
Table of Contents
Vlog என்றால் என்ன?
Vlog என்பது தங்களின் எண்ணங்கள், கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு வீடியோ பதிவு மூலம் வெளிப்படுத்தும் செயல்முறையாகும். இதை இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அன்றாட நிகழ்வுகளை வீடியோ வடிவத்தில் செய்யும் ஒரு டைரி போன்றதாகும்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் தனது பயண அனுபவங்களை வீடியோவாக வெளியிடலாம். இன்னும் சிலர் காடுகள், மலைப்பிரதேசங்கள், அணைகள், ஆறுகள், சுற்றுலா தளங்கள், வழிப்பாட்டு தலங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று அதை வீடியோவாக எடுத்து வெளியிடுவார்கள். இந்த மாதிரியான செயல்கள் அனைத்தும் Vlogging ஆகும்.
இந்த வீடியோக்களை Youtube, Instagram, Facebook போன்ற ஆன்லைன் தளங்களில் வெளியிடுவார்கள். இதன் மூலம் Vlog செய்பவரின் அன்றாட நிகழ்வுகளை பார்வையாளர்கள் தெரிந்துகொள்வார்கள். இவ்வாறு எப்பொழுதும் பார்வையாளர்கள், Vlogging செய்பவருடன் தொடர்பில் இருப்பார்கள்.
சில நபர்களுக்கு Blog மற்றும் Vlog ஆகிய இரண்டிற்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் குழப்பமடைவார்கள். எனவே அதற்கான விளக்கத்தை காண்போம்.
Vlog மற்றும் Blog க்கு இடையே உள்ள வேறுபாடு:
Blog | Vlog |
உள்ளடக்கங்கள் (Content) வீடியோக்களுக்கு பதிலாக அனைத்தும் உரை வடிவில் வெளியிடப்படுகிறது. | உள்ளடக்கங்கள் (Content) அனைத்தும் வீடியோக்களாக வெளியிடப்படுகிறது. |
உள்ளடக்க உரைகள் WordPress, Blogger, Wix போன்ற Hosting தளங்களில் வெளியிடப்படுகின்றன. | Vlog க்கள் பெரும்பாலும் Youtube, Facebook, Instagram போன்ற தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. |
Blog ஆனது Vlog யை போல அதிக ஈடுபாடு கொண்டது அல்ல. | Vlog கள் அதிக ஈடுபாடு கொண்டவை மற்றும் அதிக பார்வையாளர்களை சென்றடைகிறது. |
படிக்கக்கூடிய மற்றும் கவர்ச்சிகரமான உள்ளடக்கத்தை எழுத வேண்டும். இதில் தேவையான இடங்களில் படங்களை சொருகலாம். | நல்ல வீடியோக்களை உருவாக்க தரமான வீடியோ மற்றும் குரல் பதிவு இருத்தல் வேண்டும். |
இது எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். | இது வீடியோக்களை வெளியிட விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாகும். |
Vlog யை பற்றிய மேலும் சில தகவல்கள்
- உள்ளடக்கங்கள் வீடியோ வடிவில் வெளியிடப்படும்.
- யோசனைகள், தகவல்கள், அனுபவங்கள் ஆகிய அனைத்தும் காணொளியாக வெளியிடப்படும்.
- வேடிக்கை மற்றும் ஆர்வத்திற்காக எடுக்கப்படும் குறும் படம்.
- உங்களின் அன்றாட நிகழ்வுகளை வீடியோ பதிவுகளாக செய்வதின் மூலம் பிற்காலத்தில் சிறந்த நினைவு பொக்கிஷங்களுக்காக சேமித்தல்.
- உங்களின் வாழ்க்கையில் நிகழும் முக்கிய தருணங்களை டைரியில் எழுதி வைப்பதை போன்று, அதை வீடியோ வடிவில் உருவாக்கும் செயல்.
- சிந்தனைகளை பார்வையாளர்களுடன் நேரடியாகவும் விரைவாகவும் பகிர்ந்துகொள்ளுதல்.
Vlog தொடங்க என்ன தேவை?
பொதுவாக ஆரம்பத்தில் Vlogging செய்வதற்கு என்னென்ன தேவைப்படும் என்று காணலாம்.
- Camera or Smartphone
- Tripods & Mobile Holder
- Microphones
நீங்கள் Vlog செய்வதற்கு மேற்கண்ட மூன்று பொருட்கள் போதுமானது ஆகும். இதற்காக நீங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

உங்களிடம் ஏற்கனவே மொபைல் போன் இருக்கும். எனவே உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட் போனை வைத்தே Vlog ஆரம்பிக்கலாம். Tripods & Mobile Holder மற்றும் Microphone ஆகிய இரண்டை மட்டும் வாங்கினால் போதுமானது. Mini Tripods ஆனது ஆயிரம் ரூபாய்க்குள்ளாகவே கிடைக்கிறது. எனவே ஆரம்பத்தில் சிறிதளவு பணத்தை வைத்தே தொடங்கலாம்.

நீங்கள் மேற்கண்ட பொருட்களை வாங்கிய பிறகு அவற்றை சரியான முறையில் இணைக்க வேண்டும். Tripod மற்றும் Mobile Holder ஆனது ஸ்மார்ட் போனை பிடித்துக்கொள்வதற்கு பயன்படுகிறது. Microphone யை மொபைல் உடன் இணைக்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் நீங்கள் பேசும்போது இரைச்சல் குறைக்கப்பட்டு குரல் தரமானதாக இருக்கும்.
இப்பொழுது நீங்கள் Vlog யை தொடங்க தயாராக உள்ளீர்கள்.