Youtube Meaning in Tamil | யூடியூப் பற்றிய விளக்கம்
இன்று Youtube செயலி இல்லாத மொபைல் போன் இல்லை என்று சொல்லலாம். நாளுக்கு நாள் யூடியூப்பின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏனெனில் மக்களிடையே அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Youtube என்றால் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்க்கு பின்னால் இருக்கும் பல விஷயங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். யூடியூபை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
Youtube Meaning in Tamil
- யூடியூப்
- வளையொலி
- வீடியோக்களை பகிர்ந்துகொள்ளும் தளம்
- வீடியோக்களை பதிவேற்றும் தளம்
- எண்ணிலடங்காத காணொளிகளை கொண்டிருக்கும் தளம்
Youtube என்றால் என்ன?
Youtube என்பது இலவசமாக வீடியோக்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு இணையத்தளமாகும். எண்ணற்ற வீடியோக்களை கொண்டுள்ள இந்த தளத்தில் யார் வேண்டுமானாலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். யூடியூபை விடியோக்களின் உலகம் என்றும் சொல்லலாம்.
ஆன்லைனில் காணொளிகளை பார்ப்பதற்கு யூடியூப் தளம் எளிதாக்குகிறது. இதில் உள்ள காணொளிகளை உலகில் யாருடன் வேண்டுமானாலும் நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியும்.
யூடியூப்பின் தோற்றம் பற்றிய விளக்கம்
யூடியூபை சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து 2006 ஆம் ஆண்டு 1.65 பில்லியன் டாலருக்கு கூகிள் நிறுவனம் வாங்கியது. பிறகு Youtube படிப்படியாக வளர்ச்சி கண்டு இன்று வீடியோக்களின் உலகம் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
உலகிலேயே கூகிள் தேடுபொறிக்கு அடுத்ததாக Youtube தளத்தையே அதிகமாக பார்வையிடுகின்றனர். 2020 இல் Youtube நிறுவனம் 19.8 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.
Youtube நிறுவனம் விளம்பரங்களின் மூலமாகவே அதிகமான வருவாயை ஈட்டுகிறது. தற்போது விளம்பரங்கள் மட்டும் இல்லாமல் தொலைத்தொடர்பு சேனல்கள், மூவி ஸ்ட்ரீமிங் தளங்கள் போன்ற பல்வேறு சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
ஜிமெயில் கணக்கை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் Youtube Channel யை தொடங்க முடியும். தொடங்கி சொந்த வீடீயோக்களை பதிவேற்றம் செய்யலாம். நீங்கள் காணொளியை பதிவேற்றம் செய்து Publish செய்த பிறகு, உலகில் உள்ள அனைவராலும் அந்த காணொளியை பார்க்க முடியும்.
ஒவ்வொரு நாளும் Youtube இல் உள்ள காணொளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கிறது. அதாவது ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் சராசரியாக 30,000 மணி நேரம் அளவுள்ள வீடியோக்கள் புதியதாக பதிவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இது நாட்கள் போக போக இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
யூடியூப் இல் பணமாக்குதல் (Monetization)
Youtube தளத்தில் உங்களின் சொந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதிலிருந்து வருவாய் ஈட்டலாம். அதாவது உங்களின் சொந்த படைப்பு காணொளிகளை Youtube Channel இல் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த காணொளிகளில் Youtube நிறுவனம் விளம்பரங்களை ஓட விட்டு அதன் மூலம் வரும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை படைப்பாளிகளுக்கு வழங்குகிறது.
படைப்பாளிகள் பதிவேற்றம் செய்யும் காணொளிகள் அனைத்தும் Youtube இன் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்போது தான் பணமாக்குதலுக்கான அனுமதி கிடைக்கும். ஒருவேளை விதிகளை மீறும் பட்சத்தில் பணமாக்குதல் நிரலில் இருந்து வெளியேற்றப்படுவார்.
யூடியூப் எடுத்துக்காட்டு வரிகள்
- வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக நியாயமான வருவாயை ஈட்டும் சிறந்த தளங்களில் Youtube ஒன்றாகும்.
- யூடியூபில் வெற்றி பெறுவதற்கு பொறுமையும் கடின உழைப்பும் முக்கியமாகும்.
- Youtube இல் லட்சக்கணக்கான படைப்பாளிகள் நல்ல வருவாயை ஈட்டிக்கொண்டு வருகின்றனர்.
- கற்றல்களுக்கான ஒரு சிறந்த தளம் Youtube ஆகும்.
- உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறந்த இடமாக Youtube விளங்குகிறது.
- Youtube ஆனது பல வீடியோக்களை கொண்ட ஒரு பெரிய நூலகம் போன்றது.
- மார்க்கெட்டிங் செய்ய சிறந்த தளமாக இதை பயன்படுத்தலாம்.