Sukanya Samriddhi Yojana (SSY) Scheme Eligibility, Interest Rate
Table of Contents
What is Sukanya Samriddhi Yojana (SSY)
Sukanya Samriddhi Yojana (SSY) என்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை சமாளிக்கும் பொருட்டு மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இது பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு சிறிய சேமிப்பு திட்டமாகும்.
இந்த திட்டத்திற்கான கணக்கை பெண் குழந்தைகளின் பெயரில் Post Office, தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் திறக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் சிறிய தொகையை Deposit செய்து, வருங்காலத்தில் பெண் குழந்தைகளின் செலவினங்களை சமாளிக்கலாம். இந்த சுகன்ய சம்ரிதி யோஜனா திட்டத்தை செல்வ மகள் சேமிப்பு திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
Interest Rate for Sukanya Samriddhi Scheme
Sukanya Samriddhi Scheme-ல் வட்டி விகிதம் (Interest Rate) ஒவ்வொரு காலாண்டிலும் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஏப்ரல் – ஜூன் காலாண்டிற்கான (Q1-2020) வட்டி விகிதம் 7.6% என்று நிர்ணயிக்கப்பட்டது. பிறகு இதுவரை அந்த வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
தற்போது 01.01.2023 to 31.03.2023 காலாண்டிற்கு வட்டி விகிதம் 7.6% என்றே நிணயிக்கப்பட்டுள்ளது.
இந்த SSY திட்டமானது கூட்டு வட்டியை (compounded interest) கொண்டதாகும்.
இத்திட்டத்தின் முந்தைய கால வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Period | Interest Rate (%) |
2022-23 (Jan – Mar) | 7.6 |
2022-23 (Oct – Dec) | 7.6 |
2022-23 (July – Sep) | 7.6 |
2022-23 (April – Jun) | 7.6 |
2021-22 (Jan – Mar) | 7.6 |
2021-22 (Oct – Dec) | 7.6 |
2021-22 (July – Sep) | 7.6 |
2021-22 (April – Jun) | 7.6 |
2020-21 (Jan – Mar) | 7.6 |
2020-21 (Oct – Dec) | 7.6 |
2020-21 (July – Sep) | 7.6 |
2020-21 (April – Jun) | 7.6 |
2019-20 (Jan – Mar) | 8.4 |
2019-20 (Oct – Dec) | 8.4 |
2019-20 (July – sep) | 8.4 |
2019-20 (April – Jun) | 8.5 |
2018-19 (Jan – Mar) | 8.5 |
2018-19 (Oct – Dec) | 8.5 |
2018-19 (July – Sep) | 8.1 |
2018-19 (April – Jun) | 8.1 |
2017-18 (Jan – Mar) | 8.1 |
2017-18 (Oct – Dec) | 8.3 |
2017-18 (July – Sep) | 8.3 |
2017-18 (April – Jun) | 8.4 |
Minimum and Maximum Deposit at Sukanya Yojana
Sukanya Yojana Account-ன் குறைந்தபட்ச பங்களிப்பு Rs.250 ஆகும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் Rs.1000 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் ஒரு நிதியாண்டிற்கான அதிகபட்ச பங்களிப்பு தொகை Rs.1,50,000 ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச தொகையாவது முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை முதிர்வு வரை வட்டியை ஈட்டும்.
Maturity Period For SSY Account
Sukanya Samriddhi Yogana திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், உங்களின் பங்களிப்பு 15 ஆண்டுகள் மட்டும் செலுத்தினால் போதும். மீதம் உள்ள 6 ஆண்டுகளுக்கு செலுத்த தேவையில்லை. SSY கணக்கின் முதிர்வு காலம் வரை வட்டியின் மூலம் சம்பாதிக்கப்படுகிறது.
ஒரு பெண் குழந்தையின் பெயரில் 1 வயதில் கணக்கை ஆரம்பிக்கும்போது, அந்த குழந்தையின் 15 வயது வரை உங்களின் பங்களிப்பு செலுத்த வேண்டும். பெண்ணின் வயது 21 ஆகும் போது கணக்கு முதிர்ச்சி அடையும்.
மேலும் படிக்க – Kisan Vikas Patra: Post Office – சேமிப்பு திட்டம்
Partial withdrawal
பெண்ணின் வயது 18-யை அடைந்தவுடன், உயர் கல்வி செலவினங்களுக்காக நிலுவை தொகையின் 50% வரை திரும்ப பெறலாம்.
Premature Closure of Sukanya Samriddhi Account
திருமண செலவினங்களின் நோக்கத்திற்காக 18 வயதை பூர்த்தி செய்த பெண்ணால் மட்டுமே கணக்கை முன்கூட்டியே மூட முடியும். இருப்பினும், சில காரணங்களுக்காக கணக்கை முன்கூட்டியே மூட அனுமதிக்கிறது.
Sukanya Samriddhi Yojana Account-யை முன்கூட்டியே Closure செய்வதற்கான மேலும் சில காரணங்கள்:
- பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தையின் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான செலவுகளுக்கு முன்கூட்டியே கணக்கை மூடலாம்.
- பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தை துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால், பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் கணக்கின் இறுதித்தொகை மற்றும் வட்டியை உரிமை கோர தகுதியுடையவர்கள் ஆவர்.
Transfer of Sukanya Samriddhi Yojana Account
Sukanya Samriddhi Yojana Account-ன் முக்கிய வசதிகளில் ஒன்று, இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் இன்னொரு பகுதிக்கு கணக்கை எளிதாக மாற்றலாம்.
நீங்கள் வேறு ஒரு இடத்திற்கு குடியேறும்போது, SSY கணக்கை தற்போது உள்ள Post Office-ல் இருந்து உங்களுக்கு அருகில் உள்ள மற்றொரு Post Office-க்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்காக உங்களின் தற்போதைய கணக்கு உள்ள Post Office-ல் சென்று பரிமாற்ற கோரிக்கை படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை உங்களின் SSY கணக்கை வங்கியில் திறந்திருந்தால், அதனை Transfer செய்ய இதே போன்ற பரிமாற்ற படிவங்களை நிரப்ப வேண்டும். SSY கணக்கை Transfer செய்வதற்கான படிவங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் கிடைக்கின்றன.
மேலும் படிக்க – National Saving Certificate (NSC): தபால் சேமிப்பு
Eligibility for Sukanya Samriddhi Yojana Scheme
ஒரு SSY Account-யை திறப்பதற்கான முக்கிய தகுதிகள்:
- Sukanya Samriddhi Yojana Account-யை ஒரு பெண் குழந்தையின் பெயரில் அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் மட்டுமே திறக்க முடியும்.
- கணக்கை திறக்கும்போது பெண் குழந்தைக்கு 10 வயது அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.
- ஒரு பெண் குழந்தைக்கு ஒரே ஒரு Sukanya Samriddhi Account-யை மட்டுமே திறக்க முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை திறக்க முடியாது.
- ஒரு குடும்பத்திற்கு இரண்டு SSY கணக்குகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுவர். அதாவது ஒரு குடும்பத்தில் முதல் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே SSY கணக்கை திறக்க முடியும்.
- ஒரே பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தால், அந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மற்றொரு பிரசவத்தில் பிறக்கும் பெண் குழந்தை என மூன்று பேருக்கும் கணக்கை திறக்கலாம்.
Benefits of Sukanya Samriddhi Yojana
பெண் குழந்தைகளின் நலனுக்கான இத்திட்டத்தில் முக்கிய நன்மைகள்:
- இத்திட்டத்தில் முதலீடு செய்யும்போது வருமான வரி சட்டப்பிரிவு 80C கீழ் ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம்.
- SSY திட்டத்தில் குறைந்தபட்சம் Rs.250 முதல் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
- இத்திட்டம் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடைய உத்தரவாத வருமான திட்டமாகும்.
- SSY திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பெரிதும் பயன்படும் சிறந்த திட்டமாகும்.
மேலும் படிக்க – Senior Citizen Savings Scheme (SCSS): Post Office: சேமிப்பு திட்டம்
How to Open SSY Account
உங்களுக்கு அருகில் உள்ள Post Office அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார், பொதுத்துறை வங்கிகளில் SSY திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் கிடக்கின்றன.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கான படிவத்தை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
Sukanya Samriddhi Yojana Application Form
விண்ணப்பத்தை நிரப்ப தேவையான தகவல்கள்:
- பெண் குழந்தையின் பெயர் (Name of Girl Child)
- கணக்கை திறக்கும் பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (Name of Parent/Guardian)
- ஆரம்ப வைப்பு தொகை (Initial Deposit Amount)
- பெண் குழந்தையின் பிறந்த தேதி (Date of Birth of Girl Child)
- பெண் குழந்தையின் பிறந்த தேதிக்கான சான்று (Birth Certificate)
- பெற்றோர் / பாதுகாவலரின் அடையாள சான்று (ID Details)
- KYC ஆவணங்கள் (Any Other KYC Documents)
படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர், இறுதியாக கையொப்பம் இட்டு Post office / Bank Branch-ல் சமர்ப்பிக்க வேண்டும். படிவத்தை சமர்ப்பிக்கும் போது அனைத்து ஆவணங்களின் நகல்களையும் அதனுடன் இணைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
முடிவுரை
Sukanya Samriddhi Yojana திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த முயற்சியாகும். சிறுமியின் சிறப்பான எதிர்காலத்திற்கு முறையாக சேமிக்க பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும்.
இத்திட்டம் மக்களுக்கு மலிவு விலையில் வைக்கப்பட்டுள்ளதால் சிறிய வைப்பு திட்டங்களில் நல்ல வருமானம் தருகிறது. சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. எனவே இத்திட்டத்தில் சேர்ந்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குங்கள்.