News

10th Public Exam Result 2023 in Tamil Nadu: Check Result Now

10th Public Exam Result 2023 in Tamil Nadu: இன்று 10 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் (Public Exam Results) அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிடுகிறது. இதில் காலை 10 மணிக்கு 10th Exam Result வெளியிடப்படுகிறது. பிறகு பிற்பகல் 2 மணிக்கு 11th Exam Result  வெளியிடப்படுகிறது. இப்பொழுது 10th Exam Results யை எந்த இணையதளத்தில் எப்படி பார்ப்பது என்பதை பற்றி காண்போம்.

நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

இந்த ஆண்டு 9 லட்சம் மாணவ மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். அதற்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பிடும் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதை தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம், SMS, நூலகம், தாங்கள் படித்த பள்ளிகள் ஆகிய இடங்களில் தெரிந்துகொள்ள ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்வது மிகவும் எளிதாகும்.

Read  tnresults.nic.in 11th Exam Result 2023 Tamilnadu

நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணைய வசதியுடன் கூடிய மொபைல் அல்லது கணினி மூலம் 10th (SSLC) Exam Results யை தெரிந்துகொள்ள முடியும். உங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். 

Name of State Tamilnadu 
Department Directorate of Government Examinations
Students Class 10th (SSLC)
10th Exam Results Date 19/05/2023
Exam Results Released Time 10 AM
Needed For Exam Result Registration Number, Date of Birth 
Website Link www.tnresults.nic.in

இதையும் படியுங்கள்:

TN Velaivaaippu Online New Registration: Full Guide

10th Exam Results யை எவ்வாறு பார்ப்பது?

Step 1: இணைய வசதியுடன் கூடிய உங்களின் மொபைல் அல்லது கணினியில் www.tnresults.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Step 2: இந்த பக்கத்தில் உள்ள SSLC – April 2023 Results என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Read  Amount Debited or Credited in Bank Meaning in Tamil

TN-Board-Results-SSLC Exam Results

 

Step 3: உங்களின் 10th Registration Number மற்றும் Date of Birth யை Enter செய்து Get Marks என்பதை அழுத்தவும்.

SSLC-May 2022 Results Tamilnadu - Registration Number

Step 4: இப்பொழுது உங்களின் SSLC Exam Results தெரிவதை காண்பீர்கள்.

SSLC-May 2022 Results Tamilnadu

இந்த தேர்வு முடிவுகளில் நீங்கள் ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள், மொத்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற்றுள்ளீர்களா என்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole