Amount Debited or Credited in Bank Meaning in Tamil
நீங்கள் ஒரு வங்கிக்கணக்கை வைத்திருப்பவராக இருந்தால், உங்களின் Bank Account இல் ஒரு பரிவர்த்தனை (Transaction) நடைபெறும்போது Amount Credited அல்லது Amount Debited என்ற செய்தி SMS மூலம் வருவதை கண்டிருப்பீர்கள். ஆனால் இதற்கான அர்த்தம் என்ன என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதற்கான விளக்கத்தை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
Table of Contents
Amount Debited in Bank Meaning in Tamil
Debited மற்றும் Credited என்பது வங்கிக்கணக்குகளுக்கு இடையேயான நிதியின் நகர்வை விவரிக்க கணக்கியல் மற்றும் நிதியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும்.
ஒரு கணக்கிலிருந்து ஒரு தொகை டெபிட் செய்யப்பட்டால், அந்த கணக்கின் இருப்பு குறைக்கப்பட்டது என்று அர்த்தம். பொதுவாக நிதி திரும்பப் பெறப்பட்டதாலோ (Withdrawal) அல்லது செலவு (Expence) ஏற்பட்டதாலோ பணம் டெபிட் செய்யப்பட்டது என்ற குறுந்செய்தி வரும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ATM Card மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்றோ பணத்தை Withdrawal செய்யும்போது, Amount Debited என்ற குறுந்செய்தியை பெறுவீர்கள்.
உங்களின் ATM Card அல்லது Mobile Banking மூலமாக Recharge, Bills செலுத்துதல், Insurance போன்றவற்றிக்கு பணத்தை செலுத்தும்போதும் Debited என்ற செய்தியை தான் பெறுவீர்கள்.
Amount Credited in Bank Meaning in Tamil
ஒரு வங்கிக்கணக்கில் தொகை வரவு வைக்கப்படும் போது, அதாவது பணத்தை டெபாசிட் செய்யும்போது அந்த கணக்கின் இருப்பு அதிகரிக்கும். இவ்வாறு பணத்தை செய்தால் Amount Credited என்ற குறுந்செய்தியை பெறுவீர்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளர் தனது வங்கிக்கணக்கில் Cash Deposit Machine மூலமாகவோ அல்லது வங்கியில் சென்றோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவோ பணத்தை செலுத்தினால் அது Credit செய்யப்பட்டதாக அர்த்தம்.
சுருக்கமாக, Debit என்பது ஒரு கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது, Credit என்றால் அந்த கணக்கில் பணம் சேர்க்கப்பட்டது ஆகும்.