How to Write ATM Card Missing Letter in Tamil
ATM Card Missing Letter Format in Tamil: உங்களின் ATM Card யை தொலைத்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று குழப்பமாக உள்ளதா? இதோ இந்த பதிவு உங்களுக்கானது தான். இதில் ஏடிம் அட்டை தொலைந்துவிட்டது என்று கூறி புதிய ஏடிம் கார்டுக்கு விண்ணப்பிக்க கடிதத்தை (Letter) எப்படி எழுதுவது என்று பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் வங்கிக்கணக்கை வைத்திருக்கும் அனைவரும் ATM Card என்று சொல்லப்படும் Debit Card யை வைத்திருப்பார்கள். இதன் மூலம் தானியங்கி இயந்திரத்தின் உதவியுடன் எளிதாக பணத்தை Withdraw செய்யலாம்.
ஆனால் சில நேரங்களில் நாம் Debit Card யை தவறவிட்டுவிடுகிறோம். அப்படி தவறவிடும் ATM Card ஆனது மற்றவர்களின் கைகளுக்கு சென்றால், அது நமது வங்கிக்கணக்கில் பண இழப்பை ஏற்படுத்தலாம்.
ஏனெனில் அந்த ATM அட்டையின் PIN Number தெரிந்தால், யார் வேண்டுமானாலும் அந்த வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். எனவே ATM Card யை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.
Table of Contents
ATM Card தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் உங்களின் ATM அட்டையை எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், சில நேரங்களில் அதை தவறவிடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அவ்வாறு தொலைந்துவிட்டால் அடுத்த என்ன செய்வது என்று பார்க்கலாம்.
உங்களின் ஏடிம் அட்டை உங்களிடம் இல்லை என்று நீங்கள் உணர்ந்தால், முதலில் அதை நன்றாக தேடிப்பார்க்க வேண்டும். அவ்வாறு எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றால், ATM Card யை Block செய்ய வேண்டும்.
தற்போது Mobile Banking, Internet Banking போன்ற Online சேவைகளில் ATM Card யை Block செய்வதற்கான வசதி உள்ளது. மேலும் இதற்காக இலவச அழைப்பு எண்களும் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு வழியில் உங்களின் Debit கார்டை பிளாக் செய்யலாம். இவ்வாறு பிளாக் செய்தால் உங்கள் கணக்கில் இருந்து யாரும் பணத்தை எடுக்க முடியாது.
ஒருவேளை நீங்கள் நேரடியாக உங்களின் வங்கிக்கிளைக்கு சென்றும் ஏடிம் கார்டை பிளாக் செய்யலாம். அவ்வாறு நேரடியாக வங்கிக்கு செல்லும்போது அதை பிளாக் செய்துவிட்டு, புதிய ATM Card க்கும் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ATM Card Missing Letter Format in Tamil
நீங்கள் வங்கிக்கிளைக்கு செல்வதாக இருந்தால் அதற்கான Letter யை எப்படி எழுதுவது என்று யோசிக்கலாம். அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். ATM Card Missing மற்றும் New ATM Card க்கு Apply செய்தல் ஆகிய இரண்டிற்குமான Sample Letter யை Tamil மொழியில் கீழே வழங்கியுள்ளேன்.
Sample Letter for ATM Card Missing:
அனுப்புனர்
M.கணேஷ்
3/88, ராமாபுரம்,
காட்பாடி,
வேலூர் – 632 007
பெறுநர்
வங்கிக்கிளை மேலாளர்,
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,
வேலூர்
பொருள்: என்னுடைய ஏடிம் அட்டை தொலைந்த காரணத்தினால் அதை பிளாக் செய்ய வேண்டி விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம் நான் M.கணேஷ் தங்களின் வங்கிக்கிளையில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளேன். என்னுடைய ATM அட்டையை தொலைத்துவிட்டேன் அதை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே ATM கார்டு தொலைந்து போன தகவலை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுறேன். தொலைந்து போன ATM அட்டை மற்றவர்களிடம் கிடைத்தால் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதால், உடனடியாக என்னுடைய ATM அட்டையை பிளாக் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Bank Account Number: 32085669865
Mobile Number: 8825XXXX 87
நன்றி,
இடம்: வேலூர்
தேதி: 18/05/2022
இப்படிக்கு,
M.கணேஷ்
Sample Letter for New ATM Card Apply:
அனுப்புனர்
M.கணேஷ்
3/88, ராமாபுரம்,
காட்பாடி,
வேலூர் – 632 007
பெறுநர்
வங்கிக்கிளை மேலாளர்,
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,
வேலூர்
பொருள்: புதிய ஏடிம் அட்டை வழங்க கோரிக்கை விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம் நான் M.கணேஷ் தங்களின் வங்கிக்கிளையில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளேன். என்னுடைய ATM அட்டையை தொலைத்துவிட்டதால் என்னால் பண பரிவர்த்தனையை செய்ய முடியவில்லை. எனவே விரைவில் எனக்கு புதிய ATM அட்டையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனுடன் என்னுடைய வங்கிக்கணக்கு பாஸ்புக்கின் நகல் மற்றும் ஆதார் அட்டையின் நகல் போன்றவற்றை இணைத்துள்ளேன்.
Bank Account Number: 32085669865
Mobile Number: 8825XXXX 87
நன்றி,
இடம்: வேலூர்
தேதி: 18/05/2022
இப்படிக்கு,
M.கணேஷ்
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.