Banking News

How To Fill A Cheque Leaf & What Are The Types Of Cheques

How to Fill Cheque Leaf: காசோலைகள் முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டதை விட குறைவாக இருந்தாலும், இன்றைய டிஜிட்டல் உலகிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. காசோலைகள் (Cheques) வங்கிகளில் பணத்தை நகர்த்தக்கூடிய ஒரு பயனுள்ள கருவியாகும்.

பணமற்ற பரிவர்தனைகளையும் காசோலைகள் மூலம் மேற்கொள்ள முடியும். இன்றளவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால் அதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது பயனுள்ளதாகும்.

காசோலைகளுக்கு நீங்கள் புதியவரா? அதை Fill செய்யும்போது உங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகிறதா? கவலையை விடுங்கள். இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.

Cheque Leaf யை எவ்வாறு Fill செய்வது மற்றும் அவற்றின் வகைகள் என்ன போன்ற கேள்விகளுக்கு முழுமையான பதிலை இந்த கட்டுரையில் சொல்லப்போகிறேன்.

What is Cheque Leaf?

Cheque Leaf என்பது ஒரு வங்கி வாடிக்கையாளர், வங்கிக்கு வழங்கும் காகித ஆவணமாகும்.

இதை ஆங்கிலத்தில் Cheque என்றும் தமிழில் காசோலை என்று அழைப்பர். காசோலையில் எழுதப்பட்டுள்ள தொகையை அந்த நபருக்கு நேரடியாகவோ அல்லது அவரது வங்கிக்கணக்கிலோ செலுத்துமாறு அறிவுறுத்துவார்.

ஒரு நபர் காசோலையை பயன்படுத்த வேண்டுமென்றால், அவருக்கு வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். தற்போது அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு காசோலை புத்தகங்களை வழங்குகின்றன.

How to Fill Cheque Leaf?

நீங்கள் காசோலைகளை பயன்படுத்த விரும்பினால், முதலில் அதை எப்படி நிரப்புவது என்பதை அறிவது முக்கியமாகும். எனவே ஒரு காசோலையை எவ்வாறு நிரப்புவது என்பதை பற்றி காண்போம்.

நிரப்பப்பட்ட மாதிரி காசோலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Bank - How to Fill Cheque

காசோலையை சரியான முறையில் நிரப்பவில்லை என்றால் அதை நிராகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சரியான முறையில் நிரப்ப வேண்டியது அவசியமாகும். வாடிக்கையாளர் நிரப்ப வேண்டியதை பற்றி கீழே விவரித்துள்ளேன்.

Read  இனி எந்த நேரத்திலும் NEFT -ன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்

1.  Date:

இங்கு டிராயர் (Drawer) காசோலையை நிரப்பும்போது தேதியை எழுத வேண்டும். Drawer என்பது காசோலையை எழுதி கொடுப்பவர் ஆவர். 

ஒரு Drawer பிந்தைய தேதியிட்ட காசோலையை கொடுக்க விரும்பினால், அவர் ஏதாவது ஒரு எதிர்கால தேதியை எழுதி கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் அதில் என்ன எதிர்கால தேதி குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த தேதியில் பரிவர்த்தனை செய்யலாம்.

2. Pay:

Pay என்ற இடத்தில் நீங்கள் பணத்தை செலுத்தும் நபரின் அல்லது நிறுவனத்தின் பெயரை எழுத வேண்டும். அதாவது நீங்கள் யாருக்கு பணத்தை கொடுக்கப்போகிறீர்களோ அவரின் பெயரை எழுத வேண்டும்.

3. Rupees:

Rupees என்னும் பகுதியில் நீங்கள் எவ்வளவு பணத்தை செலுத்துகிறீர்களோ அந்த பணத்தை வார்த்தைகளால் (Words) எழுத வேண்டும்.

4. Amount: 

செலுத்தும் பணத்தை எண்களால் (Numbers) எழுத வேண்டும்.

5. Signature of the Drawer: 

Drawer தன்னுடைய கையெழுத்தை இந்த இடத்தில் போட வேண்டும். இதில் போடப்படும் கையெழுத்தானது, வங்கிக்கணக்கை திறக்கும்போது சமர்ப்பித்த கையெழுத்தை போல் இருக்க வேண்டும்.

ஏனெனில் Cheque Leaf இல் போடப்படும் கையெழுத்தை, நீங்கள் வங்கிக்கணக்கை திறந்த போது சமர்ப்பித்த கையெழுத்துடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள்.

இப்பொழுது காசோலையை எவ்வாறு நிரப்புவது என்று தெரிந்துகொண்டீர்கள்.

What are the Types of Cheques  

ஒரு காசோலையை எப்படி நிரப்புவது என்று தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அந்த காசோலைகளின் வகைகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

ஒரு காசோலையை நாம் பயன்படுத்துவதற்க்கேற்ப அதனை பல்வேறு வகைப்படுத்தலாம். அதை பற்றி விளக்கமாக இங்கே காணலாம்.

1.  Bearer Cheque 

Bearer Cheque என்பது இந்த காசோலையை வைத்திருக்கும் ஒரு நபர் வங்கிக்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். அதாவது இந்த வகை காசோலையை நீங்கள் ஒருவருக்கு வழங்கும்போது, அந்த காசோலையை வங்கிக்கு யார் கொண்டு சென்றாலும் அவருக்கு பணம் வழங்கப்படும்.

Bearer Cheque Fill Model

Pay என்ற இடத்தில் நீங்கள் யாருக்கு செலுத்துகிறீர்களோ அவரின் பெயரை எழுதுவீர்கள். அந்த வரிசையின் கடைசியில் ” OR BEARER என்ற வார்த்தை இருப்பதை காண்பீர்கள்.

Read  ATM-களில் பணம் எடுப்பதற்கு OTP எண் - SBI அறிமுகம்

இந்த வார்த்தையை நீங்கள் அடிக்காமல் விட்டுவிட்டால் அது ஒரு Bearer ஆக மாறும். 

இந்த வகை காசோலையை ஒருவருக்கு வழங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வகை காசோலையை யார் வங்கிக்கு கொண்டு சென்றாலும், அவருக்கு அதில் குறிப்பிட்டுள்ள தொகை வழங்கப்படும்.

2. Order Cheque 

Order Cheque என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் பணத்தை வழங்குமாறு வங்கிக்கு கட்டளையிடுவதாகும். இந்த வகையான காசோலையில் யாருடைய பெயர் எழுதியுள்ளதோ அந்த நபரால் மட்டுமே பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

Order Cheque

உதாரணமாக, நீங்கள் உங்களின் நண்பரின் பெயரில் காசோலையை கொடுக்கிறீர்கள் என்றால், அவர் நேரிடையாக வங்கிக்கு சென்றால் மட்டுமே பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். அந்த காசோலையை மற்றவர்கள் கொண்டு சென்றால் பணம் வழங்கப்படாது.

காசோலையில் ” OR BEARER ” என்னும் வார்த்தையை அடித்துவிட்டால் அது தானாகவே Order Cheque ஆக மாறும்.

இந்த வகையான காசோலை மூலம் பணத்தை பெறுபவர், அதில் உள்ள பெயர் என்னுடையது தான் என்பதை உறுதி செய்ய ஏதாவது ஒரு அடையாள சான்றை வழங்க வேண்டும்.

3. Crossed Cheque 

ஒரு காசோலையில் மேல் இடது புறத்தின் மூலையில் இரண்டு இணையான கோடுகள் வரையப்பட்டால், அது Crossed Cheque என்று அழைக்கப்படுகிறது.

Crossed Cheque

இந்த காசோலையின் மூலம் நீங்கள் வங்கியில்கைகளில் பணமாக பெற முடியாது.

காசோலையில் எழுதப்பட்ட தொகையானது, அந்த காசோலையில் பெயர் எழுதப்பட்ட நபரின் வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும். அப்படி டெபாசிட் செய்யப்பட்ட பிறகு உங்களின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த காசோலை மற்றொரு நபருக்கு ஓப்புதல் அளிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் அருண் என்ற நண்பரின் பெயரில் Crossed Cheque வழங்குவதாக கொள்ளலாம்.

அந்த அருண் என்ற நபர் காசோலையை வங்கிக்கு கொண்டு சென்றால் அது அவரது கணக்கில் டெபாசிட் செய்யப்படும். பிறகு அவரது கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

Read  New Debit and Credit Card Rules For Security: RBI New Rules

அல்லது அருண் என்ற அந்த நபர் தனக்கு கொடுக்கப்பட்ட காசோலையை, அவரின் நண்பரான மகேஷ் என்ற நபருக்கு ஒப்புதல் அளிக்கலாம்.

அருண் என்பவர் தனது கையெழுத்துடன் மகேஷின் பெயர், வங்கிக்கணக்கு எண் போன்றவற்றை காசோலையில் பின் புறத்தில் எழுத வேண்டும். பின்னர் அந்த தொகை மகேஷின் வங்கிக்கணக்கிற்கு டெபாசிட் செய்யப்படும். இது மாதிரி அந்த காசோலையை எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் ஒப்புதல் அளிக்கலாம்.

4. Account Payee Cheque 

Account Payee Cheque ஆனது Crossed Cheque யை ஒத்து இருக்கும். 

இதில் வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் காசோலையில் இடது மேல் புறத்தில் இரண்டு இணைகோடுகளை வரைவீர்கள். அந்த இணைகோடுகளுக்கு இடையில் ACC Payee என்று எழுத வேண்டும்.

Account Payee Cheque

இந்த காசோலையை Crossed காசோலையை போன்று யாருக்கும் ஒப்புதல் அளிக்க முடியாது. அந்த காசோலையில் யாருடைய பெயரில் உள்ளதோ அவருடைய கணக்கில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

எடுத்துக்காட்டாக, இந்த காசோலையில் அருண் என்ற பெயர் எழுதப்பட்டு இருந்தால், அவரின் வங்கிக்கணக்கில் மட்டுமே வரவு வைக்க முடியும்.

5. Post Dated Cheque 

காசோலையில் எதிர்கால தேதியை எழுதி மற்றொரு நபருக்கு வழங்கும் காசோலையை Post Dated Cheque என்று அழைப்பர்.

பொதுவாக இந்த வகையான காசோலைகள் EMI கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு நபருக்கு மாதம் Rs.5000 வீதம் அடுத்த 12 மாதங்களுக்கு வழங்குவதாக இருந்தால், நீங்கள் அவர்களுக்கு 12 Post Dated காசோலைகளை வழங்கலாம்.

6. Self Cheque 

உங்களின் வங்கிக்கணக்கில் இருந்து நீங்கள் காசோலை மூலமாக பணம் எடுக்க விரும்பினால் Pay என்ற இடத்தில் Self என்று எழுத வேண்டும்.

Self Cheque

இந்த வகையான காசோலைகளை Self Cheque என்று அழைப்பர்.

மேலும் படிக்கHow to Request Cheque Book in Indian Bank

முடிவுரை 

இந்த கட்டுரையில் ஒரு காசோலையை எவ்வாறு நிரப்புவது மற்றும் அதன் வகைகள் என்ன என்பதை தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு இதை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை Comment பிரிவில் பதிவிடவும். மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை வெளியிடும்போது அதை அறிவிப்புகளாக பெறுவதற்கு கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest