இனி எந்த நேரத்திலும் NEFT -ன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்
NEFT என்ற Online பரிவர்த்தனை சேவையை எந்த நேரத்திலும் 24×7 பயன்படுத்தலாம் என்று RBI அறிவித்துள்ளது. இதன் மூலம் NEFT -யை பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
What is NEFT Transfer ?
இணைய வங்கி சேவையில் பயன்படுத்தப்படும் பண பரிவர்த்தனை வகைகளில் NEFT முறையும் ஒன்றாகும். NEFT பரிவர்த்தனையில் தனிநபர்கள் எந்தவொரு வங்கிக்கிளையில் இருந்தும், மின்னணு முறையில் மற்றொரு வங்கிக்கிளையின் கணக்கிற்கு பணத்தை Transfer செய்ய முடியும்.
NEFT பரிமாற்றத்தின் 24×7 மணி நேர சேவை
மத்திய ரிசர்வ் வங்கியானது (RBI) டிசம்பர் 16 முதல் 24×7 நேர பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வசதி அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த பின்பு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது.
மக்கள் ரொக்க பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் சலுகைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை மாதம் நெஃப்ட் பரிமாற்றத்திற்கான கட்டணங்களை ரத்து செய்தது.
தற்போது நெஃப்ட் பரிமாற்ற சேவையை 24 மணி நேரமும் வழங்கினால், மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாக மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள நெஃப்ட் பரிமாற்ற சேவை
தற்பொழுது காலை 8 மணி முதல், இரவு 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் பரிவர்த்தனைகளின் மூலம் பணத்தை transfer செய்ய முடியும்.
வங்கிகள் இயங்கும் சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை மட்டுமே நெஃப்ட் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், வங்கி விடுமுறை நாட்களில் நெஃப்ட் முறையில் பண பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.
ஆனால், இப்போது நெஃப்ட் பண பரிவர்த்தனைகளை 24 மணி நேரமும் மற்றும் வாரத்தின் ஏழு நாட்களிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
RBI உத்தரவு
நெஃப்ட் பண பரிமாற்றங்கள் தொடர்பாகவும், பரிவர்த்தனைகள் நிறைவடைந்ததை Confirm செய்யவும், வங்கிகள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு SMS-களை முறையாக அனுப்ப வேண்டும் என்று RBI உத்தரவிட்டுள்ளது. மேலும், நெஃப்ட் பரிமாற்றங்களுக்கு தேவையான நிதியை தயாராக வைத்து இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெஃப்ட் பரிவர்த்தனையின் நன்மைகள்
நெஃப்ட் பரிவர்தனைகளின் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பரிவர்த்தனைகளை நடத்த இரு தரப்பினரின் வருகை தேவையில்லை.
- நெஃப்ட் செயல்முறை மிகவும் திறமையானது மற்றும் ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து, மற்றொரு இடத்திற்கு பணத்தை Transfer செய்ய அனுமதிக்கிறது.
- இந்த செயல்முறை மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
- நெஃப்ட் பரிவர்த்தனை மிகவும் நம்பகத்தன்மையானது, ஏனெனில் இதில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய ஒருங்கிணைப்பாளராக இருப்பதே ஆகும்.
- பல்வேறு வங்கிகளுக்கு இடையே நிதி பரிவர்த்தனைகள் செய்யும் போது எவ்வித முரண்பாடுகளையும் குறைக்கிறது.
நெஃப்ட் பரிவர்த்தனைகளை பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால், மக்கள் அனைவரும் எந்த சிரமமும் இன்றி பயன்படுத்தலாம். Digital முறைகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வதால் நேரத்தையும் சேமிக்கலாம்.
மேலும் படிக்க – Difference Between NEFT, RTGS & IMPS Transfer -Tamil
இது போன்ற வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தமிழ் மொழியில் பெற கீழே உள்ள பெல் பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும்.