ATM-களில் பணம் எடுப்பதற்கு OTP எண் – SBI அறிமுகம்
ATM-களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க SBI வங்கியானது, ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிவித்துள்ளது. ஏ.டி.ம் -ல் Rs.10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும்போது OTP கட்டாயம் என்று கூறியுள்ளது.
Table of Contents
ATM மோசடிகள்
சமீபத்தில் ATM மோசடிகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஹேக்கர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் ATM Card தகவல்களை திருடி, அதை கொண்டு போலி ATM Card -களை உருவாக்குகின்றனர். அந்த போலி ATM Card -களை பயன்படுத்தி வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை திருடுகிறார்கள். இந்த மாதிரியான ATM திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே அதிகமாக நடக்கிறது.
சைபர் திருட்டுகள் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். ATM -களை பயன்படுத்தும் போது விழிப்புணர்வுடன் இருந்தாலே, பெரும்பாலான வங்கி திருட்டுகள் நடப்பதை தடுக்கலாம்.
SBI ATM -களில் பணம் எடுக்க OTP
ATM -களில் நடைபெறும் மோசடிகளை தடுக்க OTP என்ற பாதுகாப்பு அம்சத்தை SBI வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியை வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்த புதிய வசதியின் படி, இரவு 8 மணி முதல் காலை 8 வரை SBI ATM Center-களில் பணம் எடுத்தால், வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை ATM Machine-ல் உள்ளிட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
மேலும் Rs.10,000 ரூபாய்க்கு அதிகமாக எடுத்தால் மட்டுமே இந்த OTP முறை பொருந்தும். Rs.10,000 ரூபாய்க்கு குறைவாக பணம் எடுத்தால், இந்த புதிய நடைமுறை பொருந்தாது.
SBI வாடிக்கையாளர்கள், எஸ்.பி.ஐ ஏ.டி.ம் இயந்திரத்தில் பணம் எடுத்தால் மட்டுமே OTP முறை செயல்படும். வேறு வங்கியின் ATM Machine -ல் பணம் எடுத்தால், OTP முறை செயல்படாது எனவே பழைய முறையே தொடரும். ஏனென்றால், National Financial Switch (NFS) முறையில் இன்னும் உருவாகவில்லை.